பல பிறவிகளை ஒரு பிறவியில் வாழ்ந்தவர் கலைஞர் !

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

பல பிறவிகளை ஒரு பிறவியில் வாழ்ந்தவர் கலைஞர் !  நூற்றாண்டின் தலைவராம் தமிழினத் தலைவர் கலைஞர் அவர்களுக்கு 101 பிறக்கிறது. 95 ஆண்டுகள் வாழ்ந்தார். அதில் 80 ஆண்டுகள் பொதுவாழ்வில் கழித்தார். 70 ஆண்டுகள் எழுத்தாளராக வலம் வந்தார். 60 ஆண்டுகள் திரையுலகத்தில் இருந்தார். 50 ஆண்டுகள் திராவிட முன்னேற்றக் கழகத் தலைவராக 60 ஆண்டுகள் சட்டமன்ற உறுப்பினர். 5 முறை இந்த தாய்த் தமிழ்நாட்டின் முதலமைச்சர் இப்படி வாழ்ந்த காலம் முழுவதும் வரலாறாய் வாழ்ந்தவருக்கு சூன் 3, பிறந்தநாள்.

இந்த ஆண்டு நூற்றாண்டு விழா நிறையும் ஆண்டும். நிறை வாழ்க்கை வாழ்ந்தவரை நன்றி கூறி நன்றி தெரிவிக்கும் ஆண்டாக தமிழக முழுவதும் ஏன் டில்லியில் அனைத்துக் கட்சித் தலைவர்களும் கொண்டாடி மகிழ்கிறார்கள்.

அஸ்வீன் சுவீட்ஸ் ஆர்டர் செய்ய..

கலிபோர்னியா பல்கலைக்கழகப் பேராசிரியர் ஜார்ஜ் ஹார்ட் சொன்னார். “கலைஞர் கருணாநிதிபோல் அத்தனை படைப்புகள் எழுத வேறொருவர் முயன்றால் அதற்கு ஒரு பிறவி போதாது” என்று சொன்னார்.

ஐபெக்டோ அண்ணாமலை
ஐபெக்டோ அண்ணாமலை

அங்குசம் சேனல் வீடியோ பார்க்க...

தமிழ்நாட்டு ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியதாரர்களுக்கு மத்திய அரசுக்கு இணையான ஊதியத்தினை நிர்ணயம் செய்து அமல்படுத்தினார்.

வேலை வாய்ப்பக பதிவு முன்னுரிமைப்படி ஆசிரியர்களை, பேராசிரியர்களை நியமனம் செய்தவர். ஒரே சமயத்தில் 52,500 தொகுப்பூதிய இடைநிலை-பட்டதாரி- முதுகலை ஆசிரியர்களை 1.6.2006 முதல் பணிவரன்முறை செய்து காலமுறை ஊதியம் வழங்கியவர். ஆசிரியர்கள் அரசு ஊழியர்களுக்கு போனசை வழங்கியவர்.

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

18 மாதம் மருத்துவ விடுப்பினை வழங்கியர். மகப்பேறு விடுப்பினை உயர்த்தியவர், சரண்விடுப்பினை பணமாக்கி கொள்ளலாம் என முதன்முறையாக ஆணை வழங்கியவர்.

மத்திய அரசு அகவிலைப்படியினை அறிவிக்கிற போதெல்லாம் உடன் தமிழக அரசும் அறிவித்து நிலுவைத் தொகை வழங்கியவர்.
இடைநிலை ஆசிரியர்களுக்கு 4000 அடிப்படை ஊதியத்தினை 4500 ஆக உயர்த்தி மத்திய அரசுக்கு இணையாக வழங்கியவர். 750 PP ஆக அளித்து இடைக்கால நிவாரணமாக வழங்கியவர். இறந்துபோனால்-காடு சேர்ப்பதற்கு நலநிதியினை முதன்முதலாக அறிவித்தவரும் அவரே! முதல் பட்டதாரிகளுக்கு சலுகை, எழுதினால் பட்டியல் நீளும்.

நெஞ்சமும் பெருமித கொள்ளும் தமிழக ஆசிரியர் கூட்டணி இயக்கத்திற்கு விண்ணப்பித்த 25 நாட்களில் அரசு அங்கீகாரத்தினை வழங்கி அடையாள முகவரியினை அளித்தவர்.

ஆசிரியர்கள் அரசு ஊழியர்கள்-ஓய்வூதியதாரர்களின் வாக்கு வங்கியினை பத்திரமாக பாதுகாத்து வந்தார்.
தலைவரே! பாதை அமைத்தீர்கள்; பயணத்தை தொடர்கிறோம்! நீங்கள் இயக்குகிறீர்கள்..! நாங்கள் நடக்கிறோம்..!
உங்கள் பெயரைக் காக்கவே எந்நாளும் உழைக்கிறோம்..! உழைப்போம்..! உழைப்போம்..! என மகனாக தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பிறந்தநாளில் உறுதிமொழி எடுத்துள்ளார்.

மக்களவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை சூன் 4, தொடங்க உள்ளது. தபால் வாக்குகளை முதலில் எண்ணுங்கள் கவனமாக பார்த்து கொள்ளுங்கள் என்கிறார். முதல்வர் எங்கள் மீது அசைக்க முடியாத நம்பிக்கை உள்ளவர் உள்ள உணர்வில் அசைவில்லையே..!
பல பிறவிகளை ஒரு பிறவியில் வாழ்ந்தவர் கலைஞர். பலரது செயல்களையும் ஒரே காலத்தில் செய்து காட்டியவர் கலைஞர்! “அவர்தாம் கலைஞர்”.

தந்தையின் மனது மகனுக்கு வர வேண்டுமென முத்தமிழ் அறிஞர் தலைவர் கலைஞர் அவர்களை வேண்டுகிறோம். எந்நாளும் போற்றி வணங்குவோம் வாழ்க கலைஞரின் புகழ்..!

வா.அண்ணாமலை, ஐபெட்டோ அகில இந்திய செயலாளர், AIFETO (ALL INDIA FEDERATION OF ELEMENTARY TEACHERS ORGANISATIONS), தமிழக ஆசிரியர் கூட்டணி.
மா. நம்பிராஜ், மாநிலத்தலைவர், தமிழக ஆசிரியர் கூட்டணி.
அ. வின்சென்ட் பால்ராஜ், பொதுச்செயலாளர், தமிழக ஆசிரியர் கூட்டணி.
க. சந்திரசேகர், மாநிலப் பொருளாளர், தமிழக ஆசிரியர் கூட்டணி

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

Leave A Reply

Your email address will not be published.