சினிமா என்ற ஊடகத்தை பிரச்சாரத்திற்கு பயன்படுத்தியவர்கள்..

0

சினிமா என்ற ஊடகத்தை பிரச்சாரத்திற்கு பயன்படுத்தியவர்கள்..

தமிழ் சினிமாவின் வரலாற்றை எழுதுபவர்களால், திராவிட இயக்கம் சினிமாவை தன் கொள்கை பிரச்சாரத்திற்காக பயன்படுத்தியதை எழுதாமல் இருக்க முடியாது. அது வியப்புக்குரிய விஷயம் மட்டுமல்ல எல்லோராலும் பாராட்டப்பட வேண்டிய விஷயமும் கூட. சினிமா என்ற விஞ்ஞானத்தின் வழியாக அளப்பரிய சமூக மாற்றத்தை நிகழ்த்த முடியும் என்று நிரூபித்துக் காட்டியவர்கள் திராவிட முன்னேற்ற கழகத்தினர்.

https://businesstrichy.com/the-royal-mahal/

பொதுவுடைமை இயக்க அரசியலும் காங்கிரஸ் பேரியக்கமும் சினிமாவை கொண்டு பிரச்சாரத்தை முன்னெடுத்த போதிலும் திராவிட முன்னேற்றக் கழகத்தினர் போல் சினிமாவை “சூதாக” பயன்படுத்தியவர்கள் எவருமில்லை.1956ல் திருச்சி மாநாட்டில் திமுக தேர்தல் பாதைக்கு திரும்புகிறது என்ற அறிவிப்புக்குப் பின்னர் மு.கருணாநிதியின் பல படங்களில் பிராமணிய எதிர்ப்பு தன்மை குறைந்தது. சமூகக் கொடுமைகளை எதிர்ப்பதில் பிரச்சாரத் தன்மை மாறி இருந்தது.

தேர்தலில் போட்டியிடுவது சம்பந்தமாக திராவிட முன்னேற்றக் கழகத்தின் அறிவிப்பு வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய காலத்தில் வெளிவந்த முதல் திரைப்படம் சக்கரவர்த்தி திருமகள்.இந்த திரைப்படத்தின் கதாநாயகன் பெயர் உதயசூரியன்.திமுகழக தேர்தல் சின்னத்தை கதாபாத்திரத்தின் பெயராகக் கொண்டு இந்தப் படம் வெளிவந்தது.

பல் கட்டும் சிகிச்சையில் நவீனம் காட்டும் KM DENTAL CLINIC

மக்கள் மனதில் ஆழமாக உதயசூரியன் சின்னத்தை வேரூன்ற செய்தது அந்த படத்தில் இடம்பெற்ற காவிரி பட்டிணத்து இளவரசன் கதாபாத்திரம். அந்த கதாபாத்திரத்தில் நடித்தவர் எம்ஜிஆர் அவர்கள்.

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

காங்கிரஸ் எதிர்ப்பு நிலையில் தி மு கழகத்தினர் எடுத்த அனைத்து பிரச்சார முயற்சியிலும் சினிமா அவர்களுக்குப் பெரிதும் கை கொடுத்தது.காங்கிரஸ் கதர் அணிவதை கொள்கையாகக் கொண்டது போல் திமுகவினர் கைத்தறியை தேர்ந்தெடுத்து அதன் மேன்மையை புதையல் படத்தில் பாடலாக இடம் பெறச் செய்தனர்.

புதையல் படத்தின் டைட்டில் கார்டில் கதை வசனம் ‘மு கருணாநிதி MLA என்று கௌரவப்படுத்தும் அளவுக்கு சினிமாவின் வலிமையை உணர்ந்தவர்கள் திமுகழகத்தினர் தான்.

Pride and Passion என்ற ஆங்கிலப் படத்தைப் பார்த்த அண்ணாதுரை “இதுபோல் நான்கு படங்களை எடுக்க தணிக்கை குழு அனுமதி கொடுத்தால் திராவிட நாட்டை அடைந்தே தீருவோம்” என்று சபதமிடுகிற துணிச்சலை கொடுத்ததும் சினிமா தான்.

மாநில சுயாட்சி அரசியலை முன்னெடுக்கவும், வலிமைமிக்க பிரதேச அரசியல் இயக்கத்தை கட்டமைக்கவும் முக்கிய காரணியாக இருந்தது சினிமா என்பதை நாம் மீள் வாசிப்பு மூலம் அறியமுடிகிறது. அதற்கான ஆணி வேராக இருந்தவர் கலைஞர் மு கருணாநிதி அவர்கள் தான். நான் மதிக்கின்ற திரைக்கதை ஆசிரியர் எழுத்தாளர் அமரர் மு கருணாநிதியின் பிறந்த நாள் இன்று..

தினகரன் ஜெய்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

Leave A Reply

Your email address will not be published.