சவுக்கில் ஆபாசமாக எழுதுவேன் என மிரட்டினான் – ச்சீ நாயும் பிழைக்கும் இந்தப் பிழைப்பு – அம்பலப்படுத்திய சங்கரின் மனைவி
சங்கரின் கைது திட்டமிடப்பட்டது, மனித உரிமைக்கு எதிரானது. சாதாரண மக்கள் vs வொயிட் காலர் கிரிமினல்ஸ், அரசியல்வாதிகள், அல்லக்கைகள் சிறையை எதிர்கொள்வதற்கும் வித்தியாசம் உண்டு. சிறை அவர்களுக்கு வழங்கும் அடையாளமும், சாதாரண மக்களுக்கு வழங்கும் அடையாளமும் பெருமளவில் மாறுபடும்.
ஊழலுக்கு எதிராக அடையாளம் காட்டிக்கொண்ட சங்கரின் இன்றைய சொத்து மதிப்பு என்ன? எனக்கு தெரிந்த சங்கருக்கு மாத சம்பளம் 35 ஆயிரம். தினமணில வந்த மாத 10,000₹ சேர்த்து என்னோட டெலிவரி செலவுக்கு வைச்சது.

மாலதிக்கு பத்துகோடி மதிப்புள்ள சொத்து வாங்கிக்கொடுப்பதற்கு சில மாதங்களுக்கு முன்பு தான், எனது மகனிற்கு 2000₹ வழங்கமாட்டேன் என நீதிமன்றத்தில் நின்றான். திண்ணைல கிடந்தவனுக்கு திடுக்குனு கல்யாணம் ஆன மாதிரி, இன்னைக்கு சங்கரோட கார் மதிப்பு மட்டுமே பல இலட்சங்கள்.
அரசியல்வாதிகளின் ஏகபோக வாழ்விற்கு ஆதரவாக, மக்களுக்கு எதிராக நிற்கும் சங்கரின் தனிப்பட்ட வாழ்வு குறித்து எனக்கு கவலையில்லை. அந்த தனிப்பட்ட வாழ்க்கையே பினாமியாக இருக்கும்பட்சத்தில், அதை வெளிக்கொணருவதில் தவறில்லை. தூத்துக்குடி கலவரத்திலிருந்து, ஸ்ரீமதி இறப்பு வரை அவன் ஆதரவுக்கரம் நீட்டியது மக்களுக்கு இல்லை. மணல் மாஃபியாவிலிருந்து, காசா கிராண்ட், ஜிஸ்கொயர் போன்ற நிறுவனங்கள் வரை ஆரம்பித்து பின் அமைதிகாத்த அவனின் கள்ளமெளனம் கேள்விக்குரியது.

நான்கு மாத கைக்குழந்தையுடன் நான் எனது பெற்றோருடன் இருந்த பொழுது, என்னைக் குறித்து சவுக்கில் ஆபாசமாக எழுதுவேன் என மிரட்டியதோடு, அப்பொழுது வி.ஏ.ஓ வேலை செய்த எனது அப்பாவை வேலையை விட்டு தூக்குவதாகவும் மிரட்டினான் அவன். எவ்வித பின்னணியுமின்றி, அவனது மிரட்டல்களை ச்சீ நாயும் பிழைக்கும் இந்தப் பிழைப்பு என துப்பிச் சென்றேன்.
அப்படியான மிரட்டல்களே இன்று அவனுக்கு பல மடங்கு அன்பளிப்புகளுடன், கோடிகளில் புரள வைத்திருக்கிறது போலும். அரசியல் காரணங்களுக்காகவே அவன் மீது குண்டாஸ் போடப்பட்டுள்ளது. ஆனால், மனித உரிமை ஆர்வலர்களுக்கு, அரசு அடக்குமுறையை தினந்தினம் அனுபவிக்கும் சாதாரண ஏழை, நடுத்தர வர்க்க மனிதர்களுக்காக குரல் கொடுக்க வேண்டுமா? திடீரென கோடியில் புரளுபவர்களுக்காக குரல் கொடுக்க வேண்டுமா?
நிலவு மொழி செந்தாமரை
சவுக்கு சங்கர் மனைவி