அங்குசம் பார்வையில் ‘எலக்சன்’

0

அங்குசம் பார்வையில் ‘எலக்சன்’

தயாரிப்பு: ‘ரீல்குட் ஃபிலிம்ஸ் ‘ ஆதித்யா, டைரக்டர்: தமிழ், தமிழ்நாடு ரிலீஸ்: சக்தி பிலிம் ஃபேக்டரி சக்திவேலன். ஆர்ட்டிஸ்ட்ஸ்: விஜய்குமார், ப்ரீத்தி அஸ்ராணி, ஜார்ஜ் மரியான், ரிச்சா ஜோஷி, திலீபன், பாவெல் நவநீதன், நாச்சியாள் சுகந்தி, குலோத்துங்கன் உதயகுமார். டெக்னீஷியன்கள்– வசனம்: அழகிய பெரியவன், இசை : கோவிந்த் வசந்தா, ஒளிப்பதிவு: மகேந்திரன் ஜெயராஜு, எடிட்டிங்: சி.எஸ்.பிரேம்குமார், ஆர்ட் டைரக்டர்: ஏழுமலை ஆதி கேசவன், பி.ஆர்.ஓ: யுவராஜ்.

கலைஞர் பிறந்தநாள்

கலைஞர் பிறந்தநாள்

சாதிகள் வெவ்வேறாக இருந்தாலும் உயிர் நண்பர்களாக இருப்பவர்களை உள்ளாட்சித் தேர்தல் எப்படி பகையாக்கி, நிம்மதியை சீர்குலைக்கிறது என்பது தான் இந்த ‘எலக்சன்’-ன் ஒன் லைன். வேலூர், பேர்ணாம்பட்டு பகுதியில் கதை நடக்கிறது.தமிழக மக்கள் கழகத்தின் அதிதீவிர தொண்டர் ஜார்ஜ் மரியான் ( ஹீரோ விஜய் குமார் அப்பா) . இவரின் உயிர் நண்பன் திலீபனின் அப்பா. நல்லூர் ஒன்றியக் கவுன்சிலர் தேர்தலில் தனது நண்பனுக்கு சீட் கிடைக்கும் என ஜார்ஜ் மரியான் எதிர்பார்க்கிறார்.

தீரா என் ஆசை என் ஓசைகள் நீ
தீரா என் ஆசை என் ஓசைகள் நீ

- Advertisement -

ஆனால் கட்சித் தலைமையோ கூட்டணிக் கட்சிக்கு அந்த சீட்டை ஒதுக்கி விடுகிறது. நண்பனோ சுயேட்சையாக நிற்கிறார். ஆனால் ஜார்ஜ் மரியானோ தலைமைக்கு கட்டுப்பட்டு கூட்டணி வேட்பாளருக்கு வேலை செய்து ஜெயிக்க வைக்கிறார். இதனால் நண்பர்களுக்கிடையே பகை ஆரம்பமாகிறது. சிறு வயதில் இருந்தே அப்பாவின் அந்த நண்பர் மகள் ரிச்சா ஜோஷியை காதலிக்கிறார் விஜய் குமார். தேர்தல் பகையால் மகளை விஜய் குமாருக்கு கட்டிக் கொடுக்க மறுக்கும் ஜார்ஜ் மரியானின் நண்பன், இப்போது சாதியைக் காரணம் காட்டுகிறார்.

மகளை வெளிநாட்டு மாப்பிள்ளைக்கு கல்யாணம் செய்துவிடுகிறார். பள்ளி ஆசிரியையாக வேலை செய்யும் ப்ரீத்தி அஸ்ராணியை கல்யாணம் செய்கிறார் விஜய் குமார். தனது தாய் மாமா பாவெல் நவகீதன் வற்புறுத்தலால் தேர்தலில் நிற்கிறார் விஜய் குமார். திலீபனின் சதியால் ஐந்து ஓட்டு வித்தியாசத்தில் தோற்றுப் போகிறார். சுழற்சி முறையில் அந்த சீட் பெண்களுக்கு ஒதுக்கப்படுகிறது. இப்போது விஜய் குமாரின் மனைவியை நிறுத்தச் சொல்லும் திலீபன், பழைய மனதில் வைத்து, திடீர்னு தனது மனைவியை நிறுத்துகிறார். மீண்டும் பகை எரிகிறது.

4 bismi svs

கதை இதே ரூட்டில் தான் படம் முழுக்க ( க்ளைமாக்ஸ் வரை)பயணிக்கிறது. தமிழ் சினிமாவில் ப்ளாக் & ஒயிட் காலத்தில் இருந்தே இதே போன்ற கதைகள், சினிமாக்கள் வந்து கொண்டே தான் இருக்கின்றன. ஆனால் இதில் டைரக்டர் தமிழ், நீதிக்கட்சியின் எழுச்சி, அதன் தொடர்ச்சியாக திராவிட இயக்கத்தின் குறிப்பாக திராவிட முன்னேற்றக் கழகத்தின் எழுச்சி, அதனால் எளியோர்களின் அரசியல் எழுச்சி, அதனாலேயே அவர்களின் வாழ்வில் நடக்கும் மறுமலர்ச்சி, இவையெல்லாவற்றையும் விட தமிழ் நாட்டில் நிலைத்து நிற்கும் சமூகநீதி இதைப் பற்றி பேசியதற்காகவே மனதார பாராட்டலாம்.

எலக்சன்
எலக்சன்

அதே சமயம் காசுக்கு சீட்டை விற்பதையும் ஓட்டுக்கு பணம் கொடுப்பதையும் நேர்மையாக சொன்னதைநமக்கு கடினமாக இருந்தாலும் ஏற்றுக் கொள்ளத் தான் வேண்டும். ஹீரோ விஜய் குமாருக்கு இது அதிக பாரம் கொண்ட கேரக்டர் தான். இருந்தாலும் முடிந்த அளவு சமாளித்திருக்கிறார். இரண்டு ஹீரோக்கள் இருந்தால் இரண்டு டூயட் வைக்க வேண்டும் என்ற ரூல்ஸை கரெக்டா ஃபாலோ பண்ணியிருக்கார் டைரக்டர். ரிச்சா ஜோஷியைவிட ப்ரீத்தி அஸ்ராணிக்குத்தான் அதிக வாய்ப்பு. இருந்தாலும் ‘அயோத்தி’யில் “அடி ஆத்தீ….” எம்புட்டு அருமையா நடிச்சிருக்கு.

இந்த சின்ன வயசுல இம்புட்டுத்திறமையான்னு பிரமிக்க வைத்த பொண்ணு. ஆனால் இந்த எலக்சனில் மிகவும் சொற்ப ஓட்டு வித்தியாசத்தில் (நடிப்பில்)வெற்றி பெற்றிருக்கிறார். கோவிந்த் வசந்தாவின் இசையும் மகேந்திரன் ஜெயராஜின் ஒளிப்பதிவும் இறுதிக்கட்ட பிரச்சாரத்தின் விறுவிறுப்பு போல படத்திற்கு சப்போர்ட்டாக இருக்கிறது.

படம் முழுக்க தேர்தல் காட்சிகள் வந்து நம்மை லேசாக கண் அசர வைக்கிறது. விஜய் குமாரை பழிவாங்க திலீபன் சொல்லும் ஃப்ளாஷ் பேக் லைட் ட்விஸ்டுக்கு யூஸ் ஆகியுள்ளதே தவிர வேறு எதுவும் இல்லை. ” அரசியல் என்பது மக்களுக்கானது, சமூக நீதிக்கானது” என்ற க்ளைமாக்ஸ் வசனம் அழகிய பெரியவன் உபயம்.

-மதுரை மாறன்

5 national kavi
Leave A Reply

Your email address will not be published.