வேலையிழந்து தவிக்கும் சுமைதூக்கும் தொழிலாளர்கள்! நீதிமன்றத்தை அவமதிக்கும் காவல்துறை!

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

திருச்சி மாநகரில் சுமைதூக்கும் தொழிலாளர்களாக சுமார் 2000 பேர் பணியாற்றி வருகிறார்கள். இதில் பெரும் பகுதி காந்தி மார்கட் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகள் மற்றும் ரயில்வே குட்செட் அரசு மற்றும் தனியார் குடவுன்களில் பணியாற்றி வருகிறார்கள். காய்கறி, வெங்காயம், வாழைக்காய்மண்டி, தாங்காளி, இங்கிலீஸ் காய்கறி, அரிசி, நெல் மூட்டைகள் , மளிகை , ஹார்டுவேஸ் உரமூட்டைகள் என மக்களின் அனைத்து அத்தியாவசிய பொருட்களை ஏற்றி இறக்கும் பணியை கடந்த பல தலைமுறையாக செய்து வருகிறார்கள்.

இந்த தொழிலாளர்களில் பெரும்பான்மையானோர் சி.ஐ.டி.யு சங்கத்தில் கடந்த பல ஆண்டுகளாக தங்களை இணைத்துக் கொண்டு ஊதிய உயர்வு பணி பாதுகாப்பு உள்ளிட்ட பல உரிமைகளுக்காக போராடி பெற்று வருகிறார்கள். அரசு அதிகாரிகள், தொழிலாளர் துறையில் முறையிட்டு உரிமைகளை பெற்று வருகிறார்கள்.

Sri Kumaran Mini HAll Trichy

திருச்சி மாவட்ட சுமைப் பணி தொழிலாளர்கள் சங்கம்இந்நிலையில் இவர்களில் வேஸ்டு பேப்பர் என்ற பிரிவில் பழைய பேப்பர் , அட்டை, இரும்பு சமான்களை ஏற்றும் தொழிலாளர்கள் 45 பேர் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு சி.ஐ.டி யு சங்கத்தில் இனைந்து ஊதிய உயர்வு போனஸ் உள்ளிட்ட உரிமைகளை பெற்று வந்தார்கள்.

மேலும் கடந்த இரண்டு ஆண்டுகளாக போனஸ் மற்றும் ஊதிய உயர்வு வழங்காத காரணத்தாலும் 100 கிலோ வரை மூட்டை தூக்கச்சொல்லி துன்புறுத்துவதால் தொழிலாளர் உதவி ஆணையரிடம் தொழில் தகராறுச் சட்டம் 2 kன் படி வழக்கு தாக்கல் செய்து நடைபெற்று கொண்டிருந்தது.

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

முதலாளிகள் தரப்பில் வாய்தாவிற்கு வராமல் உயர்நீதிமன்றம் சென்று யாரை வேண்டுமானாலும் வேலைக்கு வைத்துக் கொள்ளலாம் என மாணிக்கவேல் என்ற ஒரு முதலாளியின் அவரது வேஸ்டு பேப்பர் கடையில் பணியாற்றும் 12 தொழிலாளர்களில் 7 பேரை பட்டியலிட்டு உயர் நீதிமன்ற மதுரை கிளையில் உத்திரவு வாங்கி வந்துள்ளார்.

அதை திருச்சி கோட்டை மற்றும் காந்தி மார்கட் காவல்துறை அப்பட்டமாக முதலாளிக்கு ஆதரவாக நின்று அங்கு பணியாற்றிய 12தொழிலாளர்கள் மீதும் வழக்கு போடுவதாக மிரட்டி வலுக்கட்டாயமாக வெளியேற்றி சட்டவிரோதமாக செயல்பட்டு வருகிறார்கள்.

Flats in Trichy for Sale

மேலும் அந்த கடையில் சுமார் 15 பீகார் மாநில பதிவு செய்யப்படாத தொழிலாளர்களை பணிக்கு அமர்த்தி விட்டார்கள் அதை தொடர்ந்து எந்த உத்திரவும் இல்லாத மற்ற 3 கடை முதலாளிகளுக்கும் இந்த உத்திரவு பொருந்தும் என உயர் நீதிமன்ற அரசு வழக்கறிஞர் வாய் மூலம் கூறிவிட்டார். எனவே அதுவே எங்கள் உத்திரவு எனக் கூறி மதுரை உயர் நீதிமன்ற உத்திரவை தவறாக நிறைவேற்றி வருவது மட்டுமல்ல.

ஏற்கனவே சி.ஐ.டி.யு சார்பில் 2005 , 2010ம் ஆண்டுகளில் பெற்ற இது போன்ற உயர் நீதிமன்ற உத்திரவின் மேல் முறையீட்டு உத்திரவை /WP(MD) No 332 OF 2005) மற்றும்W.M.P (MD) No 7214 OF 2005 மேலும் M.P (MD) No 1.. of 2010) ஆகிய தீர்ப்புகளைஅப்பட்டமாக மீறுவதாகும் மேலும் தொழிலாளர் உதவி ஆனையர் முன்பு தொழில் தகராறு நிலுவை இருக்கும் போதும், தொழிலாளர் பிரச்சனையில் காவல்துறை தலையிடக் கூடாது என்ற உத்திரவு இருந்தும் சட்டத்திற்கு புறம்பாக (புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சட்டப்படி )பதிவு செய்யாத வெளி மாநிலத் தொழிலாளர்களை வைத்து பணியாற்றுவது காவல்துறை பாதுகாப்பு தருவது தொழிலாளர் விரோத நடவடிக்கையாகும், தொழிலாளர்களுக்குள் மோதல் போக்கை உருவாக்கும் போக்காகும்.

எனவே, ஏற்கனவே பணியாற்றி வரும் தொழிலாளர்கள் குறித்து (மணிக்கவேல் கடை தவிர) நீதிமன்றம் எதுவும் குறிப்பிடாத நிலையில் …

உயர் நீதிமன்றத்தால் பட்டியலிடப்பட்டுள்ள 7 பேரை தவிர மீதமுள்ள 38 தொழிலாளர்கள் பணியாற்றுவதை காவல்துறை தடுப்பதை கைவிட கோரியும் ..

சட்டத்திற்கு புறம்பாக பதிவு செய்யாத புலம்பெயர்ந்த வெளி மாநிலத் தொழிலாளர்களை வெளியேற்றவும், அவர்களுக்கு பாதுகாப்பு தருவதை கைவிடக்கோரியும்..

கடந்த 6 மாதமாக வேலையிழந்து தவிக்கும் தொழிலாளர்களுக்கு உரிய நிவாரணம் பெற்றுத் தர வேண்டி  திருச்சி மாவட்ட சுமைப் பணி தொழிலாளர்கள் சங்கம் சி.ஐ.டி.யு,  பொதுச் செயலாளர் ஆர்.சிவக்குமார் வலியுறுத்தியுள்ளார்.

 

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Leave A Reply

Your email address will not be published.