மும்மொழியும் மூன்றுமொழியும் – ஒன்றா? உண்மை என்ன? அரசியல் என்ன?

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

1950இல் இந்தியா குடியரசு நாடாக அறிவிக்கப்பட்டது. முதல் குடியரசுத் தலைவராக இராஜேந்திரபிரசாத் தேர்வு செய்யப்பட்டார். அப்போதிருந்த அரசியல் சாசன நிர்ணய சபையில், இந்தியாவின் அலுவல் மொழியாக (ஆட்சிமொழியாக அல்ல) இந்தியை முன்மொழிந்தபோது, தமிழ்நாட்டைச் சார்ந்த கண்ணியத்திற்குரிய காயிதே மிலேத் அவர்கள் தமிழை முன்மொழிந்தார் என்றும் வரலாற்று செய்தி உள்ளது. வாக்கெடுப்பு நடந்தபோது 50% விழுக்காடு இந்திக்கும் 50% தமிழுக்கும் வாக்குகள் விழுந்தன. இந்த நிலையில், தலைவர் பொறுப்பிலிருந்த இராஜேந்திரபிரசாத் தன் விருப்ப வாக்கை இந்திக்கு அளிக்க, இந்தியாவின் அலுவல் மொழியாக இந்தியானது என்பதும் வரலாறு.

இந்தக் காலக்கட்டத்தில் இந்தியாவில் மும்மொழித் திட்டம் என்று ஒரு திட்டம் அறிவிக்கப்பட்டது. மாநில தாய்மொழி + பொதுமொழியாக ஆங்கிலம் + அலுவலல் மொழியாக இந்தி என மும்மொழிக் கொள்கை இந்தியாவின் தலைமை அமைச்சர் நேருவால் அறிவிக்கப்பட்டது. இந்தி பேசதா மாநிலங்களில் குறிப்பாக தமிழ்நாடு மும்மொழிக் கொள்கையைக் கடுமையாக எதிர்த்தது. அப்போது நேரு,‘15 ஆண்டுகாலம் இந்தி பேசாத மாநிலங்கள் தொடர்புக்கு ஆங்கிலத்தைப் பயன்படுத்திக் கொள்ளலாம். 15 ஆண்டுகள் கழித்து ஆங்கிலம் அகற்றப்பட்டு, இந்தி இந்தியாவின் தொடர்பு மொழியாக இருக்கும்’ என்று அறிவித்தார்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitche

இந்தி எதிர்ப்பு போராட்டம்
இந்தி எதிர்ப்பு போராட்டம்

1965இல் இந்திய அரசு அறிவித்த 15 ஆண்டு காலம் நிறைவடைந்து, ஆங்கிலம் அகற்றப்பட்டு, இந்தி தொடர்பு மொழியாக வரும் சூழ்நிலை சட்டப்படி உருவாக்கின்றது. இந்நிலையில்தான் தமிழ்நாட்டில் 1965இல் இந்தி எதிர்ப்பு போராட்டங்கள் வெடித்தன. இப் போராட்டங்களில் பொதுமக்களும் மாணவர்களும் பெருமளவில் கலந்துகொண்டனர். இந்தி பேசாத மாநிலங்கள் விரும்புகிற வரை ஆங்கிலம் தொடரும் என்ற நேருவின் உறுதிமொழியைச் சட்டமாக்க தமிழ்நாட்டில் அண்ணா வலியுறுத்தினர்.

அங்குசம் தற்போதைய இதழ்.. படிக்க..

1967இல் அண்ணா தமிழ்நாட்டின் முதல் அமைச்சர் பொறுப்புக்கு வந்தவுடன், அவர் சட்டமன்றத்தில், தமிழ்நாட்டில் தாய்மொழி தமிழ், இந்தியாவோடும் உலகத்தோடும் தொடர்பு கொள்ள ஆங்கிலம் என்று இருமொழிக் கொள்கை மட்டுமே பின்பற்றப்படும் என்ற சட்டத்தை நிறைவேற்றினார். மும்மொழிக்குத் தமிழ்நாட்டில் எப்போதும் இடம் கிடையாது என்பதையும் அண்ணா சட்டமன்றத்தில் வலியுறுத்தி உரையாற்றினார்.

அண்ணா, மறைவுக்குப் பின் ஆட்சிப் பொறுப்பையேற்ற கலைஞர், எம்.ஜி.இராமச்சந்திரன் ஜெயலலிதாவைத் தொடர்ந்து வந்த ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி, தற்போதைய மு.க.ஸ்டாலின் வரை இருமொழிக் கொள்கையில் உறுதியாக இருந்தனர். இருந்தும் வருகின்றனர். மற்றும் தமிழ்நாட்டில் உள்ள திமுக கூட்டணி கட்சிகள் அனைத்தும், அதிமுகவும் பாஜக தவிர அனைத்துக் கட்சிகளும் மும்மொழிகளுக்கு எதிராகவே உள்ளன என்பது குறிப்பிடத்தச் செய்தியாகும்.

காங்கிரஸ் கட்சி தமிழ்நாட்டில் இந்தியைத் திணிக்க முயன்று பலமுறை தோல்வியடைந்த கட்சியாகும். காங்கிரஸ் கட்சி செய்தது எல்லாம் தவறு என்று சொல்லி மூன்றாவது முறையாக ஆட்சிக்கு வந்துள்ள பாஜக அரசு, காங்கிரஸ் கட்சியைவிட வேகமாக இந்தியைப் பரப்ப முயற்சிகளைச் செய்துவந்தது. ஒரு கட்டத்தில் பாஜக இந்தியைத் தமிழ்நாட்டில் திணிக்க முயன்று காங்கிரஸ் கட்சியைப் போலவே தோல்வியைச் சந்தித்து.

பாஜக அரசு தமிழ்நாட்டில் இந்தியை மறைமுக திணிக்க மும்மொழிக் கொள்கை என்பதை விடுத்து மூன்றாம் மொழி என்று அறிவிப்பை வெளியிட்டது. அதில் வெளிப்படையாகச் சொல்லப்படுவது மூன்றாம் மொழி இந்தி இல்லை. தென்னிந்திய மொழியை, வடமொழியை அல்லது உலக மொழியைப் படிக்கலாம் என்று போக ஊருக்கு பாஜக வழி சொல்வதாகவே இருந்தது.

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

2020இல் அறிவிக்கப்பட்ட தேசியக் கல்வி கொள்கையில், அடிப்படையாகச் சொல்லப்பட்ட செய்தி என்னவென்றால் கல்வி மொழியாக இந்தி இருக்கும். பண்பாட்டு மொழியாக சமஸ்கிருதம் இருக்கும் என்று வெளிப்படையாகவே அறிவிக்கப்பட்டுள்ளது. 1ஆம் வகுப்பு முதல் 5ஆம் வகுப்பு வரை மாணவர்கள் தாய்மொழியில் படிக்கலாம் என்று நாக்கில் தேனைத் தடவியுள்ளது. 6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை கல்வியின் தொடர்பு மொழியாக இந்தி மட்டுமே இருக்கும். 3ஆம் மொழியாக சமஸ்கிருதத்தைத் தேர்வு செய்துகொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அண்மையில் பல்கலைக்கழகங்களில் அதிக அதிகாரங்கள் கொடுத்து பல்கலைக்கழக மானியக் குழு வரைவு அறிக்கை வெளியிட்டுள்ளது. துணைவேந்தரைத் தேர்வு செய்யும் குழுவில் ஆளுநர் பிரதிநிதி இருப்பார். மாநில பிரதிநிதி இருக்கமாட்டார் என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பல்கலைக்கழகங்கள் மற்றும் பல்கலைக்கழங்களின் இணைவு பெற்ற தமிழ்நாட்டு கல்லூரிகள் அனைத்தும் ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டுக்குள் சென்றுவிடும். அதன் வழியாக இந்தியை எளிமையாகத் திணித்துவிடலாம் என்று பாஜக எண்ணுகிறது.

ஒன்றிய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான்
ஒன்றிய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான்

ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், தேசியக் கல்விக் கொள்கைகளை ஏற்றுக்கொள்ளவில்லை என்றால் மூன்றாவது மொழியாக இந்தியை ஏற்றுக்கொள்ளவில்லை என்றால் தமிழ்நாட்டின் கல்வி நிதி ரூ.2126 கோடி விடுவிக்கப்படாது என்று அறிவித்துள்ளார். இதற்குக் கடுமையாக தமிழ்நாடு பள்ளிக் கல்வி அமைச்சர் அன்பில் மகேஸ் கடுமையாக எதிர்வினையாற்றினார். தமிழ்நாடு முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் அண்மையில் கடலூரில் பேசும்போது,’10ஆயிரம் கோடி தருகிறோம் என்றாலும் தேசியக் கல்விக் கொள்கையையும், இந்தியையும் நாங்கள் எந்த நிலையிலும் ஏற்கமாட்டோம்” என்று உறுதிபட கூறினார்.

இதனைத் தொடர்ந்து ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதான், எல்.முருகன் ஆகியோர் ‘இந்தியை மூன்றாம் மொழியைப் படிக்கச் சொல்லவில்லை. மோடியே இந்தியை விரும்பவில்லை என்றால் மூன்றாம் மொழியாக எந்த மொழியையும் படித்துக்கொள்ளலாம் என்று கூறியுள்ளார்’ என்று தற்போது பேசிவருகிறார்கள். திமுக தரப்பில் எதற்கு மூன்றாம் மொழியைப் படிக்கவேண்டும்? என்ற கேள்விக்கு பாஜக படித்தால் என்ன என்றுதான் பதில் சொல்கிறது. சட்டப்படி பேச மறுக்கிறது. இது திமுக – பாஜக இடையே நடக்கும் உச்சக்கட்ட போர் அல்ல.

1925 செப்.27ஆம் நாள் RSS என்ற இந்து அமைப்பு நாக்பூரில் தொடங்கப்பட்டது. இதன் நோக்கம் இந்தியா ஒன்று. மொழி வழி மாநிலங்கள் தேவையில்லை. ஒரே நாடு, மொழி, ஒரே கல்வி, ஒரே பண்பாடு என்றுதான் இருக்க வேண்டும். இந்தியா பாரதநாடு என்றும் இந்து நாடு என்றும் அழைக்கப்படவேண்டும் என்பதுதான் RSSஇன் கொள்கையாகும். இப்போது நூற்றாண்டு நிறைவு செய்யும் RSS கொள்கையை நிறைவேற்றவே பாஜக அரசு செயல்பட்டு இந்தியைத் திணிக்க முடியாமல் மூன்றாம் மொழி என்ற பெயரில் இந்தியை மறைமுகமாக திணிக்க எண்ணம் கொண்டுள்ளது. பாஜகவின் அரசியல் நிலைப்பாடு என்னவென்றால், 2026 ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் திமுக – பாஜக இடையேதான் போட்டி என்று பாஜக தலைமை கட்டமைக்கின்றது. இதனால் சட்டமன்றத்தில் அதிமுகவை வீழ்த்தி 2ஆம் இடம் பிடிக்க பாஜகவால் முடியும் என்றும் நினைக்கின்றது.

தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

மும்மொழி, மூன்று மொழி என்பதை அண்ணா “பெரிய பூனை செல்ல பெரிய ஓட்டையும் சினனப்பூனை செல்ல சிறிய ஓட்டை எதற்கு? பெரிய ஓட்டையில் சின்னப் பூனையும் செல்லாம்” என்ற உவமை தமிழ்நாட்டின் கிராமங்களில்கூட இன்னும் உயிர்ப்பாக உள்ளது. இந்நிலையில் தமிழ்நாட்டு மக்கள் மும்மொழியை கொஞ்சம் மாற்றி மூன்றாம் மொழி என்று சொல்வதைக் கூறுவதைத் தமிழ்நாட்டு மக்கள் ஏற்பார்களா? என்பது பெரிய கேள்வியே என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்கமுடியாது.

 

—  ஆதவன்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitche

Leave A Reply

Your email address will not be published.