தனியார் குடோனில் பதுக்கி வைக்கப்பட்ட 40 டன் ரேஷன் அரிசி பறிமுதல்!
மாவட்ட வழங்கல் துறை அதிகாரிகளுக்கு வந்த தகவலின் அடிப்படையில் குடோனின் பூட்டை உடைத்து ஆய்வு மேற்கண்ட போது ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டு இருப்பது கண்டுபிடிப்பு.
தேனி மாவட்ட வழங்கல் அதிகாரி மாரி செல்விக்கு பெரியகுளம் தாலுகாவிற்கு உட்பட்ட வட புதுப்பட்டி பகுதியில் குடோனில் மூடை மூட்டைகளாக ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதும் அவை பட்டை தீட்டப்பட்டு கேரளாவிற்கு அனுப்பி வைப்பது குறித்து ரகசிய தகவல் கிடைத்தது.
இதனை அடுத்து நள்ளிரவில் காவல்துறையினரை உதவியோடு குடோனை பார்த்த போது அது பூட்டப்பட்டு இருந்ததும், அதன் உள்ளே மூட்டை மூட்டைகளாக ரேஷன் அரிசி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனை அடுத்து காவல்துறையினர் உதவியுடன் பூட்டை உடைத்து உள்ளே ஆய்வு செய்தபோது ரேஷன் அரிசிகள் மூட்டை மூட்டைகள் இருப்பதும் தெரிய வந்தது. அந்த குடோனில் மொத்தமாக 40 டன் ரேஷன் அரிசிகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து குடோனில் ரேஷன் அரிசி மூட்டைகள் அனைத்தும் கைப்பற்றப்பட்டு தேனி அருகில் உள்ள வேளாண் விற்பனை மையத்தில் உள்ள குடோனில் கொண்டு செல்லப்பட்டுள்ளது. மேலும் ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டிருந்த குடோனிற்கு மாவட்ட வட்ட வழங்கல் துறை அதிகாரி சீல் வைத்து நடவடிக்கை மேற்கொண்டார்.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
மேலும் கைப்பற்றப்பட்ட ரேஷன் அரிசிகள் தேனி மாவட்டத்தின் எந்த ரேஷன் கடைகளில் இருந்து கடத்தப்பட்டு குடோனில் பதுக்கி வைக்கப்பட்டது குறித்து மாவட்ட வழங்கல் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் மாரிச்செல்வி விசாரணை மேற்கொள்ள உள்ளதாக தெரிவித்தார்.
— ஜெய்ஸ்ரீராம்.