தமிழக முதலமைச்சர்கள் பிறந்த ஊர் பற்றி சுவாரஸ்ய தகவல்கள் ! 👌💯
-நெ. நிலவன், முதுநிலை கணினி, தூயவளனார் கல்லூரி, திருச்சி.
தமிழக முதலமைச்சர்கள் பிறந்த ஊர் பற்றி சுவாரஸ்ய தகவல்கள் ! 👌💯
1952-5-ம் ஆண்டுகள் வரை முதலமைச்சராய் இருந்த சி.இராஜ கோபாலச்சாரியார் பிறந்த ஊர் சேலம் மாவட்டம், ஓசூரையொட்டிய தெரப்பள்ளி (தற்போதைய கிருஷ்ணகிரி மாவட்டம்).
195-63-ம் ஆண்டுகள் வரை முதலமைச்சராய் இருந்த பெருந்தலைவர் கு.காமராஜ் பிறந்த ஊர் விருதுப்பட்டி எனப்படும் தற்போதைய விருதுநகர்.
1963-67-ம் ஆண்டுகள் வரை முதலமைச்சராய் இருந்த எம்.பக்தவச்சலம் பிறந்த ஊர் ஸ்ரீபெரும்புதூரை அடுத்த நசரத் பேட்டை.
1967-69-ம் ஆண்டுகள் வரை முதலமைச்சராய் இருந்த பேரறிஞர் சி.என்.அண்ணாதுரை பிறந்த ஊர் காஞ்சிபுரம்.
1969 மற்றும் 87-88-ம் ஆண்டுகளில் (இடைக்கால) முதலமைச்சராய் இருந்த நாவலர் வி.ஆர்.நெடுஞ்செழியன் பிறந்த ஊர் நாகப்பட்டினம் மாவட்டம், திருக்கண்ணபுரம்.
1969-71, 71-76, 89-91, 96-2001, 2006-11 ஆகிய ஆண்டுகளில் முதலமைச்சராய் இருந்த கலைஞர் மு.கருணாநிதி
பிறந்த தஞ்சை மாவட்டம் (தற்போதைய நாகப்பட்டினம் மாவட்டம்), திருக்குவளை.
1977-1987ஆம் ஆண்டு வரை தொடர்ந்து 3 முறை முதலமைச் சராய் இருந்த மக்கள் திலகம் எம்.ஜி.இராமச்சந்திரன் பிறந்த ஊர், இலங்கை, கண்டி மாவட்டத்தில் உள்ள நாவலப்பிட்டி.
1988ம் ஆண்டில் எம்.ஜி.இராமச் சந்திரன் மறைவுக்குப்பின் முதல் பெண் முதலமைச்சராய் இருந்த ஜானகி இராமச்சந்திரன் பிறந்த ஊர் கேரள மாநிலம் (அந்தக் காலத்தில் திருவாங்கூர் தனியரசிற்கு உட்பட்ட) வைக்கம்.
1991–96, 2001, 2002–06, 2011–1, 2016 ஆகிய ஆண்டுகளில் 5 முறை முதலமைச்சராய் இருந்த செல்வி ஜெ.ஜெயலலிதா பிறந்த ஊர் மைசூர் சமஸ்தானம் (தற்போதைய கர்நாடகா) மாண்டியா மாவட்டம், பாண்டவபுரா வட்டம், மேல் கோட்டை என்னும் ஊர்.
2001–02, 201-2015, 2016-17 ஆகிய ஆண்டுகளில் 3 முறை முதலமைச்சராய் இருந்த ஓ.பன்னீர்செல்வம் பிறந்த ஊர் தேனி மாவட்டம் (பழைய மதுரை மாவட்டம்), பெரியகுளம்.
2017-2021 ஆம் ஆண்டு வரை முதலமைச்சராய் இருந்த எடப்பாடி பழனிசாமி பிறந்த ஊர் சேலம் மாவட்டம், எடப்பாடி வட்டம், நெடுங்குளம் என்ற சிற்றூரை அடுத்த சிலுவம்பாளையம்.
2021 -தற்போது முதலமைச்சராய் உள்ள முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் பிறந்த ஊர் சென்னை, கோபாலபுரம்.
தொகுப்பு .
-நெ. நிலவன், முதுநிலை கணினி, தூயவளனார் கல்லூரி, திருச்சி.