’ஸ்டாப்’ ஆன அனிருத்தின் ‘ஹுக்கும்’ மீண்டும் ஸ்டார்ட்!
பல வெளிநாடுகளில் ‘ஹுக்கும்’ இசை நிகழ்ச்சியை நடத்திய அனிருத், இறுதியாக சென்னையில் மிக பிரம்மாண்டமாக ஜூலை.26-ஆம் தேதி நடத்தப் போவதாக, ஜூலை.16—ஆம் தேதி அறிவித்தார். சென்னை கிழக்குக் கடற்கரைச் சாலையில் இருக்கும் திருவிடந்தை என்னும் இடத்தில் நடக்கும் இந்த இசை நிகழ்ச்சிக்கான டிக்கெட்டுகள், முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களிலேயே விற்றுத் தீர்ந்தன. நிகழ்ச்சியை நடத்தும் நிறுவனம், பாதுகாப்பு வசதிகள், பார்க்கிங் வசதிகள் குறித்து தெளிவான திட்டத்தைக் கொடுக்காததால், அனுமதி தர மறுத்துவிட்டது போலீஸ்.
இதனால் டிக்கெட் கட்டணம் முழுமையாக திருப்பித் தரப்படும் என அறிவித்தனர் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள். இந்த நிலையில் தான் அதே கிழக்குக் கடற்கரைச் சாலையில் கூவத்தூர் அருகே ‘மார்க் சொர்ணபூமி’ என்னும் இடத்தில் ஆகஸ்ட்.23-ஆம் தேதி ‘ஹுக்கும்’ நிகழ்ச்சி நடக்கும் என இப்போது அறிவித்துள்ளனர். அனைத்து ஏற்பாடுகளையும் மிகச் சரியாக முடித்து, மீண்டும் போலீஸ் அனுமதிக்காக வரைவுத் திட்டத்தை அனுப்பத் தயாராகி வருகின்றனர்.
இதற்கான டிக்கெட் விற்பனை ஆகஸ்ட்.04-ஆம் தேதி ‘டிஸ்ட்ரிக்ட்’ என்னும் ஆப்பில் ஆரம்பமாகிறது. இதன் முன்பதிவு ஜூலை.28ஆம் தேதி ஆரம்பித்துள்ளது.
’இன்றைய இளைய தலைமுறை ரசிகர்களுக்கு அனிருத்தின் ‘ஹுக்கும்’ மிகப் பெரிய விருந்தாக இருக்கும்’ என்கிறார்கள் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள்.
— மதுரை மாறன்