அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

ஹோட்டல் தொழில் என்றொரு உலகம் பகுதி – 30

திருச்சியில் அடகு நகையை விற்க

ஹோட்டல் மேனேஜ்மெண்ட் படிப்புக்குப் பின்னர் என்னென்ன தொழில்கள் செய்யலாம் என பார்த்து வருகிறோம். கடந்த இதழில், Cloud Kitchen தொழில் குறித்து பார்த்தோம்.

இந்த இதழில், Ingredients Solutions and Hotel supplies ஆகிய தொழில் வாய்ப்புகள் பற்றி காண்போம். Ingredients என்றால் முலப்பொருட்கள் எனப்படும். ஒரு ஹோட்டலுக்குத் தேவையான பல்வகையான மூலப்பொருட்களை நாம் விற்பனை செய்து வியாபாரம் செய்யலாம்.

இந்த வார JANUARY - 28 அங்குசம் இதழில்…2026 ANGUSAM WEEKLY BOOK

அதோடு மட்டுமல்லாமல், ஹோட்டலுக்கு இன்னும் பல்வேறு பொருட்கள் தேவைப்படும். அவற்றை நாம் தயாரித்தோ வாங்கி விற்கும் வகையிலோ வியாபாரம் செய்யலாம். இவற்றில் உணவுப் பொருட்களுக்கு FSSAI மற்றும் Chemicals-க்கு அதற்கேற்ற உரிமமும் பெற்றிருக்க வேண்டும்.

ஹோட்டல் தொழில்துறைவாரியாக ஹோட்டல்களுக்குத் தேவைப்படும் பொருட்களை பட்டியலாக பார்க்கலாம். இது நமது முயற்சியாகும். இதற்கு மேலும் பல்வேறு வாய்ப்புகள் உள்ளது. இவற்றை தயாரித்தோ, வாங்கி விற்பதன் மூலமோ வியாபாரம் செய்யலாம்.

முதல்வர் பிறந்தநாள்

கிட்சன் & பேக்கரி – மளிகைப் பொருட்கள், காய்கறிகள், பழங்கள், இறைச்சி, முட்டை, பால், சாஸ் வகைகள்,எசன்ஸ், ட்ரைஃப்ரூட்ஸ், பருப்பு வகைகள், பல்வேறு மசாலா & பொடி வகைகள், கேஸ், தந்தூர் அடுப்பு கரி, கிளினிங் சோப்புகள், சோப் ஆயில், கட்டிங் போர்டுகள், கத்திகள், பாத்திரங்கள், அடுப்புகள், கோல்ட்ரூம்கள், ஃப்ரிட்ஜ்கள் மற்றும் பல்வேறு உபகரணங்கள்.

சர்வீஸ் டிபார்ட்மெண்ட் – பேக்கிங் பொருட்கள், ஸ்பூன்ஸ், ஃபோர்க்குகள், ப்ளேட் வகைகள், கிளாஸ் வகைகள், டிஸ்யூஸ், டேபிள் கிளாத், டேபிள், சேர்கள், புஃபே-வுக்கான செஃபங் டிஷ்கள், பரிமாறும் உபகரணங்கள், சாஸ் வகைகள், ஜூஸ் வகைகள், சிரப்ஸ், மற்றும் பல்வேறு உபகரண்ங்கள்.

அனைத்து துறைகளுக்கும் – ஸ்டேசனரி, கம்ப்யூட்டர், சாஃப்ட்வேர், ப்ரிண்டர், இணைய வசதி போன்றவை.

ஹவுஸ்கீப்பிங் – துணி வகைகள் (பெட் ஷீட், தலையனை உறை, துண்டுகள்), பேஸ்ட், ப்ரஷ், சீப்பு, சோப்பு போன்ற பயன்பாட்டுப் பொருட்கள், சுத்தம் செய்யும் பல்வேறு கெமிக்கல்கள், பெஸ்ட் கன்ட்ரோல் கெமிக்கல்ஸ் & உபகரணங்கள், பல்வேறு சுத்தம் செய்யும் சிறிய உபகரணங்கள் முதல் பெரிய மெஷின்கள் வரை, அனைத்து பணியாளர்களுக்கும் சீருடைகள், ஷூ போன்றவை.

2026 - அங்குசம் தேர்தல் களம் - வீடியோ பார்க்க

ஹோட்டல் தொழில்இன்ஜினியரிங் – மிகப்பெரிய மெஷின்கள், அதனை சுத்தம் செய்யும் சில பொருட்கள், ஜெனரேட்டர்களுக்குத் தேவையான டீசல் போன்றவை.

இவை மட்டுமல்லாமல், மேலும் பல்வேறு சிறு மற்றும் பெரிய பொருட்கள் தேவைப்படும். அதோடு, நாம் குறிப்பிட்டுள்ள ஒரு சில வகைகளில் பல்வேறு பொருட்கள் அடங்கும். உதாரணமாக சமையலுக்கு காய்கறிகள் என்றால் அவற்றுள் நாட்டு காய்கள், ஊட்டி காய்கறிகள் என்றெல்லாம் வகைகள் பிரிக்கப்பட்டுள்ளன.

இவ்வாறு ஒரு ஹோட்டலில் நாம் நேரடியாக செயல்படாமல், ஹோட்டலுக்குத் தேவையான பல்வேறு வகையான பொருட்களை வழங்கி வியாபராம் செய்யலாம். ஏ.எம்.சி. எனப்படும் ஆண்டு பராமாரிப்பு ஒப்பந்தங்கள் மூலமாக, ஏசி, ஜெனரேட்டர் போன்ற பல மிசின்களை பராமரிக்கும் வியாபாரமும் ஒரு முக்கியமான தேவையாக உள்ளது.

சுற்றுலாத்துறை பயிற்சியாளா் கபிலன்
சுற்றுலாத்துறை பயிற்சியாளா் கபிலன்

பெரிய ஹோட்டல்களில், தொடர்ந்து தேவைப்படும் பொருட்களையும் சேவைகளையும் ஆண்டு முழுதும் ஒரு ஒப்பந்தமாக கொடுத்து நடைமுறைப்படுத்துவார்கள்.  இவ்வகையில் வியாபாரம் செய்ய அனுபவம் இருக்க வேண்டும். ஆனால், இவ்வகையில் நமக்கு தொடர்ந்து சீரான வருமானம் இருக்கும்.

ஹோட்டலில் நேரடியா வேலை பார்ப்பது, ஹோட்டல் மற்றும் ஹோட்டல் சார்ந்த தொழில் செய்வது ஆகியவற்றோடு மட்டுமல்லாமல், ஹோட்டலின் மூலமாகவும் நாம் தொழில் செய்யலாம் என வேறு ஒரு உலகம் இயங்கிக் கொண்டிருக்கிறது என்பதை நாம் இந்தத்தொடரில் பார்க்கிறோம். இனி வரும் தொடர்களில், மேலும் சில ஹோட்டல் சார்ந்த தொழில்களைப் பார்ப்போம்.

கபிலன்

(தொடரும்)

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Comments are closed, but trackbacks and pingbacks are open.