அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

முன்னாள் இராணுவ வீரரும் நட்சத்திர ஹோட்டல் பணியாளர் ஆகலாம்! ஹோட்டல் துறை என்றொரு உலகம்! தொடா்15

0

திருச்சியில் அடகு நகையை விற்க

ஹோட்டல் மேனேஜ்மெண்ட் கட்டாயமல்லாத வேலைகளும் ஹோட்டல் துறையில் உள்ளன என்பதை பார்த்து வருகிறோம். அந்த வகையில் இத்தொடரில், மற்றும் இரு முக்கியமான துறைகளைப் பற்றியும் அத்துறையில் ஹோட்டல் வேலை வாய்ப்பு பற்றியும் துறை சார்ந்த தகவல்களையும் பார்ப்போம்.

எந்த ஒரு நிறுவனத்திற்கும் வேலைக்கு செல்பவர்கள் அணுக வேண்டிய துறை ஆங்கிலத்தில் Human Resources Department எனப்படும் மனிதவள மேம்பாட்டுத்துறை ஆகும். இது ஹோட்டலுக்கும் பொருந்தும். ஆம், மனிதவளம் படித்தவர்களுக்கு ஹோட்டலில் தேவை இருக்கிறது. அதிலும் ஹோட்டல் துறை மனிதவளம் அனுபவம் உள்ளவருக்கு நல்ல மதிப்பு உள்ளது. இந்தக் கட்டுரையை எழுதிக்கொண்டிருக்கும் நேரத்தில் ஒரு 3 நட்சத்திர, ஒரு 4 நட்சத்திர மற்றும் ஒரு 5 நட்சத்திர ஹோட்டலில் இருந்து மனிதவளத்துறைக்கு ஆள் தேவை என என்னிடம் கூறியுள்ளனர்.

இந்த வார JANUARY - 28 அங்குசம் இதழில்…2026 ANGUSAM WEEKLY BOOK

மனிதர்கள் அதிகம் பணியாற்றும் துறை. மேலும், ஹோட்டல் விருந்தினர்களுக்கு சரியாக விருந்தோம்பல் செய்தல் ஆகியவற்றால் மனித வளத்துறையின் பொறுப்பு மிகவும் மதிக்கத்தக்கதாக உள்ளது.

ஹோட்டல்துறை என்றொரு உலகம் 15இந்ததுறையில் வேலைக்கு ஆள் எடுப்பது, வருகையை சரிப்பார்ப்பது, சம்பள விபரங்களை தயாரிப்பது, விடுப்பு தருவது, அரசு சார்ந்த பயன்களான,ஈஎஸ்ஐ, பிஎஃப் போன்ற திட்டங்களை செயல்படுத்துவது, தங்குமிட வசதி செய்வது, பணியாளர் உணவு தேவைகளைப் பூர்த்தி செய்வது, பணியாளர்கள் வேலைத்திறனை சரிபார்ப்பது, சம்பள உயர்வு, ஒழுக்கம், பணியாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டால் அதனைச் செய்வது, பணியாளர் பதவி உயர்வு போன்ற அனைத்தையும் ஒரு பணியாளர் ஓய்வு பெறும் வரை அல்லது பணியில் இருந்து செல்லும் வரை செய்யும் துறை மனித வளத்துறை ஆகும்.

Admission Enquiry Form

மனித வளத் துறையில் பணியாற்ற, பொதுவாக பட்ட மேற்படிப்பில் மனிதவளத்தை சிறப்பு பாடமாக எடுத்திருக்க வேண்டும். இளங்கலை படிப்பு எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். கேட்டரிங்காக இருந்தால் அவர்களுக்கு இன்னும் கூடுதல் சிறப்பாக இருக்கும்.

மனிதவளத்துறையில்  HRAssistant, HRSupervisor, HR Executive, Assistant Manager, HR Manager CLI பதவிகள் உள்ளன. ஒரு ஹோட்டலில் அனைவருக்கும் பிடித்த துறையாக இத்துறை இருக்க வேண்டும். அதனால் HR Manager பலரும் வீட்டில் ஒரு பெரிய மனிதர் போல அனைவராலும் மதிக்கப்படுகிறார்கள். குழுமமாக இருக்கும் ஹோட்டலில் Group HR, Corporate HR, VP HR போன்ற பதவிகள் இருக்கும். HR Manager ஆவதற்கு 10 முதல் 15 ஆண்டுகள் அனுபவம் தேவைப்படும். படித்துமுடித்தவுட HR Assistant போன்ற பதவிகள் கிடைக்கும். மனிதர்களை பிடித்தவர்கள், நிறுவனங்களுக்கு பணியாளர் மூலமும், பணியாளர்களுக்கு நிறுவனம் மூலமும் நன்மை செய்ய ஒரு பாலமாக இருக்கும் துறை மனிதவளத்துறை ஆகும். சுருக்கமாகச் சொன்னால் மற்றவர் நலன் காத்து மகிழ்வித்து மகிழும் மனமுடையவர் இந்தத்துறையில் சிறப்பாக செயல்படலாம்.

ஹோட்டல் ஹோட்டல்துறை என்றொரு உலகம் 15மட்டுமல்லாது பெரும்பாலான நிறுவனங்களை பாதுகாக்கும் துறை Security Departmentஆகும்.ஹோட்டல் செக்யூரிட்டி துறையின் பணி மிகவும் நேர்த்தியாகவும், சிறப்பாகவும் செய்ய வேண்டிய ஒன்றாகும். ஒரு ஹோட்டல் செக்யூரிட்டியின் வேலை 3 பாகங்களாக பிரிக்கலாம். அவை விருந்தினர் பாதுகாப்பு, நிறுவன பாதுகாப்பு, பணியாளர் பாதுகாப்புஆகும்.

2026 - அங்குசம் தேர்தல் களம் - வீடியோ பார்க்க

நம்மை நம்பி வந்த விருந்தினரை பாதுகாப்பது முதல் பணியளர்களுக்கு முதலுதவி பயிற்சி கொடுப்பது வரை, பாதுகாப்பு உபகரணங்கள் அனைத்தும் பரமாரிப்பது என பல முக்கிய பணிகளைச் செய்வது செக்யூரிட்டி துறை ஆகும். ஹோட்டலில் எந்த பொருள்/மனிதர் வந்தாலும், சென்றாலும் அது இந்தத்துறை மூலம்தான் நடைபெறும். அனைத்தும் கண்காணிக்கும் ஒரு மனித சிசிடிவி துறை ஆகும். பணியாளர்கள், விருந்தினர்கள் என அனைவருக்கும் ஏதேனும் உடல் நலக்குறைவு ஏற்பட்டால் உதவும் துறை செக்யூரிட்டுத் துறை ஆகும். ஹோட்டலின்பல்வேறு நுழைவாயில்களில் கண்கானிப்பது, ஹோட்டலின் உள்பகுதியில் ரோந்து செல்வதுபோன்றபணிகளில் இரவும் பகலும் இந்தத் துறையினர் ஈடுபடுவர்.

மேலும், உள்ளே செல்லும் புதிய நபர்களைக் கண்கானித்து அவர்களின் தகவல்களைச் சேகரிப்பது, பொருட்களைச் சரிபார்ப்பது, பணியாளர் வருகைப் பதிவில் பதிகிறார்களா என கண்கானிப்பது, விருந்தினர் வாகன பாதுகாப்பு சரிபார்ப்பது, முறைகேடு செய்ய துணிபவரைக் கண்டறிந்து காவல் துறையினரிடம் ஒப்படைப்பது போன்ற பணிகளும் இத்துறையின்பணியாகும்.

தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

Security Guard, Security Super-visor, Security Executive, Assistant Security Officer, Security Officer உள்ளன. இந்தத் துறையில் பணியாற்ற, Safety and Security படிப்பு படித்தவர்கள் முன்னுரிமை பெறுகின்றனர்.மேலும், Officerபதவிகளில் இராணுவ வீரர்கள் முக்கியத்துவம் பெறுகின்றனர்.

ஹோட்டல் முழுவதும் ஒரு கட்டுப்பாட்டில் இருக்க இராணுவ வீரர்களையே செக்யூரிட்டி ஆபீசராக நியமிக்க ஹோட்டல்கள் விரும்புகின்றன. ஹோட்டல் துறையில் அனுபவம் வாய்ந்த செக்யூரிட்டிகள் மிகவும் திறமைசாலிகளாகக் கருதப்படுகின்றனர். இவ்வாறு, இவ் ஹோட்டல் மேனேஜ்மெண்ட் இல்லாமலும் பணிபுரியும் வேலை வாய்ப்புள்ள துறைகள்ஹோட்டலில் இன்னும் சில இருக்கின்றன. அந்த உலகத்தையும் அடுத்து வரும் இதழ்களில் பார்ப்போம்.

 

தொடரும்

கபிலன்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Leave A Reply

Your email address will not be published.