அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

சாப்பாட்டுத் தொழில் கைவிடாது ! ஹோட்டல் துறை என்றொரு உலகம்! பகுதி –26

திருச்சியில் அடகு நகையை விற்க

நம்மில் பெரும்பாலானவருக்கு ஏன் கேட்டரிங் படிக்காதவருக்கும் அதிகமாக ஆர்வம் இருக்கும் ரெஸ்டாரண்ட் தொழில் பற்றி பார்ப்போம்.

இன்றும் சிலர் ஹோட்டல் என்றுதான் சாப்பிடும் இடத்தைச் சொல்வார்கள். ஹோட்டல் என்றால் தங்கும் மற்றும் உணவு வசதி உள்ள இடம். உணவு வியாபாரம் செய்யும் இடம் ரெஸ்டாரண்ட் எனப்படும். இந்த ரெஸ்டாரண்ட் வைக்கும் ஆர்வம் பலருக்கு வரும்.

இந்த வார JANUARY 8-14 அங்குசம் இதழில்…2026 ANGUSAM WEEKLY BOOK

அதில் சிலவற்றை கீழே குறிப்பிட்டுள்ளோம்.

“எங்கஏரியாவுல நல்ல சாப்பாடு கிடைக்க கஷ்டமா இருக்கு. ரெஸ்டாரண்ட் வச்சா நல்லா போகும். “

Celebrating Thangamayil’s 34th Anniversary | Dec 25th to Jan 1st | Thangamayil Jewellery Limited

”எனக்கு ஒரு இடம் இருக்கு; அங்க ஒரு ரெஸ்டாரண்ட்பண்ணலாம்னு நினைக்கிறேன்.”

”நிறைய பேர் வந்து போர இடம் இது. இங்க ஒரு ரெஸ்டாரண்ட் போட்டா பிச்சுக்கிட்டு ஓடும்.”

”இந்த ஏரியாவுல சாப்புட இடமே கிடைக்கல. பயங்கர வெயிட்டிங். இன்னும் 2 கடை போடலாம்.”

”எனக்கு ஒரு நிரந்தர வருமானம் வேணும். சாப்பாட்டுத் தொழில் கைவிடாது. அதனால அந்த தொழில் துவங்கலாம்.”

”கைல காசு இருக்கு, இன்னொரு இன்வெஸ்ட்மெண்ட். அதனால, ரெஸ்டாரண்ட் ஆரம்பிக்கலாம்.”

”என் அடுத்த தலைமுறைக்கு ஒரு பிசினஸ் வாய்ப்பாக ஒரு ரெஸ்டாரண்ட் ஆரம்பிச்சு குடுக்கலாம்.”

”எனக்கு நல்லா சமைக்கத் தெரியும். அதனால, நானே ஒரு ரெஸ்டாரண்ட் ஆரம்பிக்கனும்.”

”நான் ஒரு சாப்பாட்டு பிரியர். அதனால எனக்கு இந்த பிசினஸ்ல ஆர்வம் இருக்கு.”

2026 - அங்குசம் தேர்தல் களம் - வீடியோ பார்க்க

ஹோட்டல் துறைஇப்படி பல காரணங்களுக்காக இந்த பிசினஸ் செய்ய முடிவெடுக்கிறார்கள். யாரெல்லாம் ரெஸ்டாரண்ட் துவங்க நினைக்கிறார்கள் என ஒரு சிறு பட்டியல்.

கேட்டரிங் படித்துவிட்டேன் அதனால் … வெளிநாடு சென்று வந்துள்ளேன் அதனால் … பணம் சேர்ந்ததால் – டாக்டர், இன்ஜினியர், சினிமா பிரபலங்கள், சின்னத்திரை பிரபலங்கள், அரசியல் பிரபலங்கள் போன்றோர். வீட்டில் சும்மா இருப்பதால் சிலர். ஹோட்டல் & ரெஸ்டாரண்ட் அனுபவம் இருப்பவர் என பலர் இந்த தொழிலை செய்ய முடிவெடுக்கின்றனர்.

யார் வேண்டுமானாலும் ரெஸ்டாரண்ட் துவங்கலாம். அதற்கு நம்மை எவ்வாறெல்லாம் தயார்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதுதான் மிக முக்கியமானது.

முதலில் இந்த 5 உறுதிமொழிகள் எடுத்துக் கொண்டு, தன்னைத் தயார்படுத்திக் கொண்டு இந்த வியாபாரத்தை துவங்குங்கள்.

  1. வியாபாரத்திற்கு என்னை முழு நேரமும் அர்ப்பணிப்பேன். (குறைந்த பட்சம் ஒரு வருடம்)
  2. வாடிக்கையாளரே மிகவும் முக்கியம். எந்த வாடிக்கையாளரையும் குறை சொல்லவோ, அவருக்கு எதுவும் தெரியாது எனவோ எந்தக் காலத்திலும் கனவிலும் நினைக்க மாட்டேன். (சிறு குழந்தையாக இருந்தாலும், பொருளாதாரத்தில் எந்த நிலையில் இருந்தாலும் அனைவரும் எனது வாடிக்கையாளர்தான்)
  3. ஒவ்வொரு வேலையையும் நானே ஈடுபாட்டுடன் செய்வேன். (FSSAi, இடம் சார்ந்த வேலைகள், பஞ்சாயத்து வேலைகள், வங்கி வேலைகள், மின்சார அலுவலகப் பணிகள், கொள்முதல் வேலைகள், புதிய உணவு உருவாக்கும் வேலை, சமையல் உபகரணங்கள் வாங்குதல் மற்றும் பல …)
  4. அனைத்து வேலைகளையும் நான் சரி பார்ப்பேன். (ஒவ்வொரு உணவின் தரம், மூலப்பொருட்களின் தரம், பரிமாறும் முறை, மீதமாகாமல் இருக்குமளவிற்கு உணவுத் தயாரிப்பு, உணவுப் பொருட்களைப் பாதுகாக்கும் விதம், வாடிக்கையாளரின் விருப்பம் & சுவை, விளம்பரம், அரசு சார்ந்த பணிகள், சமையல் உபகரணங்கள், இடத்தின் இன்ஜினியரிங் வேலைகள், சுத்தம், சுகாதாரம், பணியாளர் வேலை, பணியாளர் நலன் மற்றும் அனைத்து வேலைகளும்.)
  5. ஹோட்டல் / ரெஸ்டாரண்ட் தொழிலுக்கான லாப – நட்ட கணக்குகளுக்காக நான் என்னை தயார்படுத்திக் கொள்வேன். (இந்தத் தொழிலில், எவ்வளவு வருமானத்திற்கு எவ்வளவு செலவு செய்ய வேண்டும் என தெரிந்து செயல்படுவேன். தொழிலுக்குத் தேவையான அனைத்து கணக்கு வழக்குகளையும் முறையாகக் கற்றுக் கொண்டு பராமரிப்பேன்)

மேலே குறிப்பிட்டவை நம்மை நாம் தயார்படுத்திக் கொள்வதாகும்.  இந்த தொழிலுக்கு என்னென்ன செய்ய வேண்டும் என தெரிந்து கொள்வோம்.

சுற்றுலாத்துறை பயிற்சியாளா் கபிலன்
சுற்றுலாத்துறை பயிற்சியாளா் கபிலன்

இடம் தேர்ந்தெடுப்பது, இடத்தின் அளவு (கிட்சன், சாப்பிடும் இடம், மூலப்பொருட்கள் வைக்குமிடம், பணியாளருக்கான இடங்கள், கழிவறை), FSSAI License, வியாபாரப் பதிவு, பஞ்சாயத்து அனுமதி, என்ன வகையான ரெஸ்டாரண்ட் துவங்குவது? என்ன மெனு தயார் செய்வது? என்னென்ன இண்டீரியர் வேலைகள் செய்ய வேண்டும்? என்னென்ன உபகரணங்கள் வாங்க வேண்டும்? எப்படியான பணியாளர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும்? தொழிலாளர் நலன் சார்ந்த அரசு ஆவணங்கள் பராமரிப்பது? எவ்வளவு முதலீடு செய்வது? தொடர் செலவுகளுக்கு எவ்வளவு பணம் வைத்திருக்க வேண்டும்? கடன் வாங்கி தொழில் செய்தால், அதன் முறைகள் மற்றும் நிர்வாகம், விளம்பரம் மற்றும் சந்தைப்படுத்துதல், வாடிக்கையாளர் சேவை மேம்பாடு போன்றவற்றை நாம் நன்கு அறிந்து பின்னர் ரெஸ்டாரண்ட் துவங்கலாம்.

யார் வேண்டுமானாலும் ரெஸ்டாரண்ட் துவங்கலாம் என்பதை மீண்டும் நினைவூட்டுகிறோம். நம்மை நாம் அனைத்து வகையிலும் தயார் படுத்திக் கொண்டு இந்தத் தொழிலைத் துவங்கினால், நன்முறையில் வெற்றிகரமாக தொழிலை நடத்தி வளரலாம்.

ஹோட்டல் மேனேஜ்மெண்ட் மற்றும் கேட்டரிங் சார்ந்த மேலும் பல தொழில்கள் குறித்து தொடர்ந்து பார்ப்போம்.

(தொடரும்)

கபிலன்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Comments are closed, but trackbacks and pingbacks are open.