அங்குசம் சேனலில் இணைய

ஹோட்டல் மேனேஜ்மெண்ட் படித்துவிட்டு, முதலாளி ஆவது எப்படி ? – ஹோட்டல் தொழில் என்றொரு உலகம் பகுதி –24

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

ஹோட்டல் மேனேஜ்மெண்ட் படிப்புக்குப் பின்னர் என்னென்ன வேலைகளுக்கு செல்லலாம் என இதுவரை நாம் பார்த்தோம். இனிவரும் தொடர்களில் இந்தப் படிப்பின் மூலம் நாம் எவ்வாறு முதலாளி ஆகலாம்? என்னென்ன தொழில்கள் செய்யலாம் என பார்ப்போம்.

உணவு சம்பந்தமான எந்த தொழில் செய்வதற்கும், முதலில் FSSAI எனப்படும் உணவுத்தரக் கட்டுப்பாடுச் சான்றிதழ் பெறுவது சட்டப்படி கட்டாயம் ஆகும். சிறு சாலையோர உணவு வியாபாரம், உணவுக் கடைகள், மளிகைக் கடைகள், ரெஸ்டாரண்டுகள், கேண்டீன்கள், நட்சத்திர விடுதிகள், உணவு பதப்படுத்தும் நிறுவனங்கள் ஆகிய அனைத்து உணவு சம்பந்தப்பட்ட தொழிலுக்கும் இச்சான்றிதழ் அவசியம். மேலும் பொருட்களைத் தயாரிப்பவர், வாங்கி விற்பவர், என இரு தரப்பினரும் இச்சான்றிதழை வாங்கி இருக்க வேண்டும். அரசு இணைய தளத்தில் இதற்கான விண்ணப்பத்தைபெறலாம்.

Angusam Cinema - அங்குசம் சினிமா சேனல்

ஹோட்டல் தொழில் என்றொரு உலகம் பகுதி –24சிறு வியாபாரங்களுக்கான சான்றிதழ் கட்டணம் ஆண்டுக்கு ரூ.100/- மட்டுமே. இது ஆண்டு வருமானம் ரூ12,00,000/- வரை உள்ள அனைத்து நிறுவனங்களுக்கும் பொருந்தும். அதற்கு மேல் வருமானம் உள்ளவர்களுக்கு ஆண்டுக்கு ரூ 2,500/-ம் ரூ 5,000/- ம்ஆண்டு வருமானத்திற்கு ஏற்ப கட்டணமாக அரசுக்கு செலுத்த வேண்டும். உணவு உரிமம் பெற்று நமது நிறுவனத்தில் கட்டாயம் வைத்திருக்க வேண்டும். அதோடு மட்டுமல்லாமல், குறிப்பிட்ட காலத்தில் இதனை புதுப்பித்தலும் அவசியம் ஆகும்.

இந்தச் சட்டம் 2011 இல் இருந்து நடைமுறையில் உள்ளது. உணவுத் தொழில் செய்பவர்கள், இத்துறையின்இணையதளத்தில் உரிமம் / சான்றிதழ் ஆகியவற்றிற்கு விண்ணப்பிக்கலாம். உணவுத் தொழில் புரிபவர்கள் அனைவரும் அடிப்படை பயிற்சி பெற்றிருக்க வேண்டும் என சட்டம் சொல்கிறது. ஒரு நாள் மற்றும் சில நாள் பயிற்சிகள் இதற்காக உள்ளது.

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

உணவுத் தொழில் நிறுவனத்தில் 20 பேருக்கு மேல் பணிபுரிந்தால், ஒரு நபர் உணவு பாதுகாப்பு மேற்பார்வையாளர் பயிற்சி பெற வேண்டும். உணவுத் தொழில் செய்பவர்களுக்கான இவ்வகை பயிற்சியினை குறுகிய கால பயிற்சியாக அரசு அவ்வப்போது குறைந்த கட்டணத்துடனும், சில சமயங்களில் இலவசமாகவும் நடத்துகிறது. இத்தகவல்கள், இந்த இணைய தளத்தில் கிடைக்கும்.

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

Food processing industry invests Rs 4,900 crore under PLI scheme so far: Government, ETRetailஇந்த பயிற்சிகளில், உணவு பாதுகாப்பு, மூலப்பொருட்கள் தரம், எவ்வாறு பொருட்களை சேமிப்பது? எவ்வாறு சமைக்கக்கூடாது? என்னவெல்லாம் செய்யலாம்? என்ன செய்தால் உணவுக்கு கேடு உண்டாகும் என்பது போன்ற பயிற்சிகள் வழங்கப்படும். சமைத்த உணவை எவ்வளவு நேரம் வைக்கலாம், எவ்வாறு பறிமாலாம்? எனவும் உணவின் மூலம் வரும் பிரச்சனைகளை எவ்வாறு தவிர்க்கலாம்? என்பது போன்ற பயிற்சிகளும் இதில் அடங்கும்.

நிறுவனம் நடத்த உரிமம் / சான்றிதழ் போன்ற அனுமதி பெற https://foscos.fssai.gov.in என்ற இணையதளத்திலும், பயிற்சி சம்பந்தமான தகவல்கள் https://fostacold.fssai.gov.in/fostac/index என்ற இணையதளத்திலும் நாம் பெறலாம்.

நாம் தொடர்ந்து பல்வேறு தொழில் வாய்ப்புகள் பற்றி அடுத்து வரும் தொடர்களில் பார்ப்பதற்கு முன்பாக, இந்த உணவுத்தரக் கட்டுப்பாடு உரிமம் / சான்றிதழ் பற்றி தெரிந்து கொள்வது அவசியம் என்பதால், இத்தொடரில் நாம் இதனை பார்த்தோம்.  தொடர்ந்து, பல்வேறு தொழில் வாய்ப்புகளை இனிவரும் தொடர்களில் காண்போம்.

தொடரும் …

கபிலன்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

Comments are closed, but trackbacks and pingbacks are open.