கோட்டு சூட்டு, போட வைத்து வாழ்க்கைப் பாடம் சொல்லித் தந்த படிப்பு ! ஹோட்டல் துறைஎன்றொரு உலகம் தொடா் – 5

1

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

ன்றைய தலைமுறையினர் தனது உடல் தோற்றத்தினை எவ்வாறு வெளிக் காட்டிக் கொள்கின்றனர் என்பது,பெரும்பான்மையோருக்கு மகிழ்வாக இருப்பது இல்லை. சிகையலங்காரம் வித்தியாசமாக இருக்கும், தாடியை வைத்துக் கொண்டும், உடை உடுத்தும் விதம் பல்வேறு விதமாகவும் இருக்கிறது.

ஒரு வேலைக்கு செல்லும் பொழுது எவ்வாறு நன்முறையில் நாம் நமது உடல் தோற்றத்தை பொலிவாக காட்ட வேண்டும் என்பதை கற்றுக் கொள்ளவேண்டும். அதனை நாம் ஹோட்டல் மேனேஜ்மென்ட் படிப்பில் கற்றுக் கொள்ளலாம். தலை முதல் பாதம் வரை ஒவ்வொரு இடத்திலும் நாம் எவ்வாறு நம்மை வெளிக்காட்ட வேண்டும் என்பதற்கு இந்த படிப்பு ஒரு மிகப்பெரிய பாடத்தை சொல்லிக் கொடுக்கிறது. ஆணுக்கும் பெண்ணுக்கும் தனித்தனி விதிமுறைகள் உருவாக்கப்பட்டு அவற்றின் மூலம் தன்னை வெளிப்படுத்த உதவுகிறது இந்தத் துறை.

Dhanalakshmi Srinivasan University | Samayapuram ...

ஹோட்டல் துறை
ஹோட்டல் துறை

ஹோட்டல் துறை என்றொரு உலகம் என்ற இந்த கட்டுரையில் மிக முக்கியமான ஒரு கருத்து, ஒரு மனிதன் தன்னையும் தன் தோற்றத்தையும் எவ்வாறு வெளிக்காட்டிக் கொள்ள வேண்டும் என்ற வழிமுறைகளை சொல்லி கொடுக்கும் படிப்பாக இது இருக்கிறது என்பதாகும்.

அங்குசம் தற்போதைய இதழ்.. படிக்க..

தலைமுடி, ஷேவிங், என ஒரு பட்டியலே இருக்கிறது என்பதை நாம் ஆரம்பத்தில் எழுதி இருந்தோம். அதையும் தாண்டி உடை உடுத்தும் விதம் கோட்டு சூட்டு உடுத்துதல்,பெண்கள் நன்முறையில் புடவை உடுத்தல், இப்படி நம் தோற்றத்தை வெளிக்காட்டுவது எப்படி என்பதை இந்த படிப்பில் தெரிந்து கொள்ளலாம். இந்த உலகத்தில் இருந்து மற்ற உலகம் நம்மை கண்காணிப்பதை அழகாக தெரிந்து கொள்ளலாம்.

ஹோட்டல் துறைஹோட்டல் மேனேஜ்மென்ட் என்றவுடன் அனைவருக்கும் நினைவில் வரும் சமையல் அறைக்குள் நுழையும் பொழுது அங்கிருக்கும் ஒவ்வொரு பாத்திரங்களும் வித்தியாசமாக இருக்கும். அவற்றின் பெயர்களை தெரிந்து கொள்வதிலேயே ஒரு நாள் முழுக்க எங்களுக்கு சரியாகிவிட்டது.

ஒவ்வொரு கரண்டியும் கத்தியும் எப்படி இருக்கும், அதன் பெயர்கள் என்ன? அதன் பயன்பாடுகள் என்ன? என்று எங்களுக்கு சொல்லி கொடுக்கவே ஒரு வகுப்பு தேவைப்பட்டது. ஒரு சமையலுக்கு தேவையான மளிகை பொருட்கள் ஆகட்டும், காய்கறிள் ஆகட்டும் இவற்றின் பெயர்களை தமிழில் மட்டுமல்லாமல் ஆங்கிலத்திலும் தெரிந்து கொள்ள வேண்டும். அந்த பெயர்களை நாம் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும் என்பது துவக்கத்தில் ஒரு சிறிய சவாலாக இருந்தது. ஆனால், அது மிகவும் ஆர்வமாக இருந்தது, இதன் மூலம் ஆங்கிலம் கற்கவும் வழிகிடைத்தது.

ஹோட்டல் துறைமேலும், மளிகைப் பொருட்களை சிறிய பொட்டலங்களாக சேகரித்து ஒரு பெரிய புத்தகமாக நாங்கள் காட்ட வேண்டும் என எங்களுக்கு ஒரு வேலை கொடுக்கப்பட்டது. மிகவும் ஆர்வமாக பல பொருட்களை நான் சேகரித்தேன். வகுப்பில் அதில் முதல் இடம் பிடிக்க வேண்டும் என நினைத்தேன். ஆனால், மளிகைக் கடை வைத்திருந்த ஒரு நண்பன் முதலிடம் பிடித்து விட்டான். நான் இரண்டாமிடம் பிடித்தேன். அவ்வளவு மூலப்பொருட்களை சேகரித்திருந்தோம். இப்படி நாங்கள் சேகரிக்கும் பொழுது பொருட்களைப் பற்றிய புரிதலும், பெயர்களும், ஆங்கிலப் பெயர்களும் தெரிந்து கொண்டோம்.

ஹோட்டல் துறையில் இருக்கும் மற்ற உள்துறைகளிலும் பல பாடங்கள் சொல்லிக் கொடுக்கப்பட்டன. பரிமாறும் துறையில் உள்ள பொருட்கள் என்னென்ன? அங்கு எப்படி எப்படி இருக்க வேண்டும்? எப்படி பேச வேண்டும் என்று சொல்லிக்கொடுத்தனர். வரவேற்கும் துறையில், எவ்வாறு நாம் நம்மை வெளிக்காட்ட வேண்டும் எனவும்; ஹவுஸ் கீப்பிங் எனப்படும் சுத்தம் செய்யும் துறையில்,என்ன பொருட்கள் வைத்து இருக்கிறோம், அதன் பெயர்கள் என்ன? சுத்தம் செய்வதற்கு என்னென்ன கருவிகள் இருக்கின்றன என்றெல்லாம் நாம் தெரிந்துகொள்ள முதல் இரண்டு வாரம் தேவைப்பட்டது.

🛑வெறும் 2500 முதல் LED TV |50%Opening Offer |BISMI ELECTRONICS

ஹோட்டல் துறைஎங்கள் படிப்பில் ஒரு ஹோட்டலில் என்னென்ன கருவிகளும் பயன்பாடுகளும் இருக்கும் என்பதை தெரிந்து கொள்வது மிகப்பெரிய ஆர்வமாக இருந்தது. அவை நாம் எல்லோரும் தெரிந்து வைத்திருக்க வேண்டிய அத்தியாவசியமான பொருட்கள் ஆகும். அதன் பெயர்கள் ஆங்கிலத்தில் தெரிந்து கொள்ளும் பொழுது நமக்கு மொழியறிவையும் பெற முடிகிறது.

இதோடு மட்டுமல்லாமல், எங்கள் பகுதியில் நாங்கள் வேலை செய்து முடித்தவுடன் அதை நாங்கள் தான் சுத்தப்படுத்த வேண்டும் என்றும் சொல்லிக்கொண்டிருந்தார்கள். அதனால் நாம் அது சுயசுத்தம் மட்டுமல்லாமல் இடசுத்தமும் நமக்கு அவசியம் என்பதை புரிந்து கொள்ள முடிந்த்தது. எனக்கு ஒரு முறை சமையலில் வகுப்பு முடிந்தவுடன், நான் எனது மேஜையை துடைத்துக்கொண்டு இருந்தேன்.

தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

எனது அடுப்பையும் துடைத்துக் கொண்டிருந்தேன். நான் பக்கத்து அடுப்பை விட்டு விட்டு சுத்தம் செய்தேன். ஒரே மேடையில் ஒரு பகுதியை விட்டு விட்டு சுத்தம் செய்ததை பார்த்த ஆசிரியர், உன்னுடையது என்னுடையது என்று நீ சொல்லக்கூடாது என்று புரிந்து கொள்வதற்காக ஒட்டுமொத்த 30 அடுப்புகளையும் நீ சுத்தம் செய்ய வேண்டும் என பணித்து சுத்தம் செய்ய வைத்து ஒரு பாடம் கற்பித்தார்.

இந்தப்பாடத்தின் மூலம் நான் இன்றளவும் அடுத்தவர் வேலை என் வேலை என பிரித்துப் பார்த்ததில்லை. அதனால் நான் பணியாற்றிய இடத்தில் எல்லாம் எனக்கு நல்ல பெயர் கிடைத்தது. அதற்காக மோகன் குமார் மற்றும் பார்த்திபன் என்ற எனது ஆசிரியர்களுக்கு வணக்கத்தையும் நன்றியையும் கூறிக்கொள்கிறேன்.

இன்னும் நிறைய சம்பவங்கள் எங்களுக்கு பாடம் சொல்லிக் கொடுத்துள்ளன. அவ்வாறான இந்த உலகத்திற்குள் இன்னும் செல்வோம். படிப்போடும் படிப்புக்குப் பிறகும் நாங்கள் என்னவெல்லாம் பார்த்தோம்.  இந்த படிப்பை படித்தவர்களுக்கு என்னவெல்லாம் எதிர்காலம் இருக்கிறது என்பதையும் இனிவரும் தொடர்களில் பார்ப்போம்!

தொடரும்…

 

— கபிலன்.

ஹோட்டல் துறை என்றொரு உலகம் தொடா்- 4 ஜ படிக்க

ஆங்கிலமும் நாப்பழக்கம் – ஆங்கிலமும் கற்க உதவும் படிப்பு ! ஹோட்டல் துறை என்றொரு உலகம் தொடா்- 4

அங்குசம் இதழ் உங்கள் இல்லம் தேடி வர... 🤔🤔 #angusam #trichy

Leave A Reply

Your email address will not be published.