Front Office Department வேலை வாய்ப்புகள்- ஹோட்டல் துறை என்றொரு உலகம் பகுதி –11

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

Hotel Management & Catering Technology படிப்பின் மூலம் கிடைக்கும் வேலை வாய்ப்புகள் பற்றி பார்த்து வருகிறோம். ஹோட்டல் என்றவுடன் உணவும் பரிமாறுபவரும் நினைவிற்கு வருவதால், முதலில் அந்த இரு துறைகளைப் பற்றியும் பார்த்தோம்.

ஹோட்டல் என்றால் தங்கும் வசதியுடன் கூடியதாகும். ரெஸ்டாரண்ட் என்றால்தான் உணவகம் ஆகும். இதன் மூலம் ஹோட்டல் மேனேஜ்மெண்ட் படிப்பு என்றால், ஒரு நட்சத்திர விடுதியில் இருக்கும் பல்வேறு துறைகளைப் பற்றி படிக்கும் படிப்பு என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitche

ஒரு ஹோட்டலில் தங்குவதற்கு வருபவர்கள், தனக்கான அறையை முன்பதிவு செய்வார்கள். பின்னர் வந்து தங்குவார்கள். இந்த நேரங்களில் விடுதியில் (Hotel) தங்கும் விருந்தினர்களுக்கு தேவையான சேவைகளைச் செய்யும் துறை Front Office என்ற துறை ஆகும்.

Front Office துறையில் –Reservations, Telephone, Reception, Lobby, Guest Relationship, Travel Desk, Bell desk என பல பிரிவுகள் உள்ளன. இவற்றில் வேலை செய்ய நிறைய வாய்ப்புகள் உள்ளன.

அங்குசம் தற்போதைய இதழ்.. படிக்க..

ஒரு ஹோட்டலுக்கு வருபவரை வரவேற்கும் முக்கிய பொறுப்பு Front Office துறைக்கு உள்ளது. இன்முகத்தோடு வரவேற்று, விருந்தினருக்கு தேவையான தகவல்களைக் கொடுத்து சேவையை செய்ய வேண்டும்.

இந்த துறையில் ஹோட்டலில் மட்டுமல்லாமல், கஸ்டமர்கேர் சம்பந்தமான அனைத்து இடங்களிலும், விமானத்துறையிலும், அலுவலகங்கள் மற்றும் சில வங்கிகள் என பல இடங்களில் வேலைவாய்ப்புகள் கொட்டிக்கிடக்கின்றன.

Resort எனப்படும் கேளிக்கை விடுதிகளைத் தேடி விடுமுறையைக் களிக்க நாம் செல்வது இன்று வாடிக்கையாகிவிட்டது. அப்படிப்பட்ட Resort களில் பொது மேலாளராக (General Manager) பணிபுரிய Front Office அனுபவம் உள்ளவருக்கு வாய்ப்பு அதிகமாக கிடைக்கிறது.

Front Office Associate/Receptionist என்ற பதவியில் துவங்கி Front Office Manager எனப்படும் General Managerக்கு அடுத்த பதவியான Front office துறையின் உயர்ந்த பதவிக்கு செல்ல 5 முதல் 7 மேற்பதவிகள் இருக்கும். ஒரு ஹோட்டலில் General Manager பதவிக்கு வரும் பெரும்பாலானோர், Food and Beverage Managerபதவியில் இருந்தவராக இருப்பர். அதைப்போலவே Front Office Manager பதவியில் இருந்தவரும் General Manager பதவிக்கு ஒரு தேர்வாக இருப்பார்.

ஒரு ஹோட்டலில் பெரிய வருமானம் தங்கும் அறைகளில் இருந்துதான் வரும். ஒரு ஹோட்டல் எவ்வளவு பெரிது என கேட்கும் பொழுது, எங்கள் ஹோட்டல் இத்தனை அறைகளைக் கொண்டது என்றுதான் சொல்வார்கள். இதில், மிக முக்கிய பொறுப்பு Front Office துறைக்கே உள்ளது. இந்த வருமானத்தில்தான் ஒரு ஹோட்டல் லாபம் பார்க்க முடியும்.

தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

ஏனெனில் உணவு தயாரிக்க அதிகமான மறு முதலீடு தேவைப்படுகிறது.  அறைகளுக்கு பராமரிப்பு செலவும், சில ஆண்டுகளுக்கு ஒருமுறை புதுப்பிக்கும் செலவும் மட்டுமே தேவைப்படும்.

ஒரு ஹோட்டலின் அதிக வருமானம் மற்றும் லாபம் தரக்கூடிய Front Office துறை சிறந்த முக்கியத்துவம் வாய்ந்த துறையாகும்.

இந்த துறையில் வேலை செய்ய, வாடிக்கையாளர், விருந்தினர் என அனைவரிடமும் இன்முகத்துடன் பேசும் தன்மை வேண்டும். நட்சத்திர விடுதிகளில் (Star Hotel) வேற்றுமொழிக்காரர்களே வந்து தங்குவதற்கு அதிக வாய்ப்புள்ளது. அதனால், ஆங்கிலம் சரளமாகப் பேசத் தெரிந்திருந்தால் நன்று, மேலும், இந்த துறையில் வேலை பார்ப்பவகளுக்கு ஆங்கிலம் நாளுக்கு நாள் நன்றாக பேச வாய்ப்பும் கிடைக்கும். அதோடு மட்டுமல்லாமல், வேறு மொழிகள்தெரிந்திருந்தால் ஒரு கூடுதல் தகுதியாகக் கருதப்படும். பல மொழியினரை, இனத்தவரை, கலாச்சாரத்தை காண்பதற்கும் அவருக்கான சேவையைச் செய்வதற்கும் ஒரு அற்புதமான வாய்ப்பைக் கொடுக்கும் துறை Front Office ஆகும்.

Hotelஐ லாபகரமாக மாற்றும் Revenue Management என்ற துறை இந்த Front office துறையின் ஓர் அங்கம் ஆகும். Revenue Management இன்று ஒரு மிகப்பெரிய வியாபாரம் ஆகும். பல ஹோட்டல்களுக்கு தனியாக Revenue Management ஆலோசனகள் வழங்கி, நிர்வகித்து சொந்தமாக பலர் தொழில் செய்து வருகின்றனர்.

ஹோட்டலில் மட்டுமல்லாமல், அனைத்து அலுவலகங்கள், மருத்துவமனைகள், விமானத்துறை, வாடிக்கையாளர் சேவை, Travel agencies, Tour operators, PRO வேலை, என பல்வேறு இடங்களில் Front office வேலைவாய்ப்புகள் உள்ளன.

கேட்டரிங்படிப்பில் Front Office என்ற பாடம் இத்துறைக்கானதேவையான பாடம் ஆகும். அனைவரிடமும் அன்பாக பேச வேண்டும் என நினைப்பவரால் நிச்சயம் இத்துறையின் மூலம் வளர்ச்சி அடைந்து வெற்றி அடைய முடியும்.

மேலும் பல வேலைவாய்ப்புகள் பற்றி தொடர்ந்து பார்ப்போம்.

 

தொடரும் …

திரு.கபிலன் 

ஹோட்டல் துறை என்றொரு உலகம் தொடா்-  10 ஜ படிக்க

விருந்தோம்பல் எனும் உன்னதமான சேவைத்துறை! ஹோட்டல் துறை என்றொரு உலகம்!-தொடா் 10

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitche

Leave A Reply

Your email address will not be published.