உங்களை முதலாளியாக மாற்றும் House keeping Department ! ஹோட்டல் துறை என்றொரு உலகம் பகுதி –12

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

House keeping என்று ஒரு துறை இருப்பது பலருக்கும் தெரியாது. Hotel Management & Catering Technology படிப்பில் இது ஒரு முக்கியமான துறை ஆகும்.  இந்த்துறையின் முக்கிய பொறுப்பு ஹோட்டலின் தங்கும் அறைகளை பராமரிப்பதும், மொத்த ஹோட்டலையும் சுத்தமாக பராமரிப்பதும் ஆகும். மற்ற துறைகளைப் பற்றி நாம் பார்த்தும் கேள்விப்பட்டும் இருப்போம். ஹோட்டலில் தங்குபவர்களில் கூட சிலருக்கு இந்த துறையைப் பற்றி தெரியாது, Room boay / Room attendant, Room Maid என்றழைக்கப்படும் நபர்கள் ஹோட்டலின் Housekeeping துறையில் வேலை பார்ப்பவர்கள் ஆவார்கள்.

Housekeeping துறை ஒரு ஹோட்டலின் முதுகெலும்பு போன்றதாகும். ஒருவர் தங்கும் அறையை அவர் வருவதற்கு முன்னர், தங்கும்பொழுது, காலி செய்துவிட்டு சென்ற பின்னர் என அனைத்து தருணத்திலும் பராமரிப்பது மட்டுமல்லாமல்; உணவகம், விழா இடங்கள், ஹோட்டலின் வெளிப்புற இடங்கள், சலவை இடம், தையல் இடம், ஒட்டு மொத்த ஹோட்டலின் சீருடை என அனைத்தையும் கவனிக்கும் பொறுப்பு இந்தத்துறைக்கு உள்ளது. House keeping துறை ஹோட்டலில் மட்டுமல்ல, இன்று பல்வேறு துறைகளில் மிகவும் அத்தியாவசியமான துறையாக கருதப்படுகிறது.

இனிய ரமலான் வாழ்த்துகள்

House keeping DepartmentHouse keeping துறையில் – Rooms, Public Areas, Garden, Laundry, Linen room என பல பிரிவுகள் உள்ளன. இவற்றில் வேலை செய்ய நிறைய வாய்ப்புகள் உள்ளன.

ஒரு ஹோட்டலுக்கு வருபவருக்கு அவசியமான சுத்தத்தை செய்து கொடுக்கும் முக்கிய பொறுப்பு House keeping துறைக்கு உள்ளது. அனைத்து இடத்தையும் சுத்தமாகவும் சுகாதாரமாகவும் பராமரிக்கும் பொறுப்புடன் இருப்பவர்கள் இத்துறையில் உயர்ந்திட முடியும். தகவல்களைக் கொடுத்து சேவையை செய்ய வேண்டும்.

அங்குசம் தற்போதைய இதழ்.. படிக்க..

House keeping துறையில் ஹோட்டலில் மட்டுமல்லாமல், மருத்துவமனைகள், shopping malls, IT companies, கப்பல், cinema theatres, Restaurants, offices, கல்வி நிறுவனங்கள், என பல இடங்களில் வேலை வாய்ப்புகள் கொட்டிக் கிடக்கின்றன.

House keeping பணியில் ஈடுபட்டு அனுபவம் உள்ளவர்கள் சொந்தமாக இந்த சேவையைத் தொடங்க முடியும். இன்று ரயில்வே House keeping ஒப்பந்தங்கள், அரசு அலுவலக ஒப்பந்தங்கள், அரசு விருந்தினர் இல்ல ஒப்பந்தங்கள், ஆளுனர் மாளிகை House keeping ஒப்பந்தங்கள் என பல தொழில் வாய்ப்புகளை இந்தத் துறை கொடுக்கிறது. அதோடு மட்டுமல்லாமல், இப்பொழுதெல்லாம், வீடுகளுக்கும் House keeping சர்வீஸ் செய்யும் தேவை அதிகமாகிக் கொண்டிருக்கிறது.

House keeping Departmentதொடர்ந்து செய்யும் வேலைகளோடு மட்டுமல்லாமல், குறிப்பிட்ட காலத்திற்கு ஒருமுறை செய்யும் முழு சுத்தம் அதாவது நமது பொங்கல் வேலைபோல அவ்வப்போது செய்யும் வேலைகளை பட்டியலிட்டு ஒரு குறிப்பிட்ட சமயத்தில் செய்யும் சுத்தத்தினை Spring Cleaning என்றும் Deep Cleaning கூறுவர். அப்படிப்பட்ட வேலைகளுக்கு இப்பொழுது அதிகமான தேவை இருக்கிறது. இந்த சேவையினை செய்யும் நிறுவனங்களுக்கு வியாபாரம் செய்ய பெரிய வாய்ப்பு இருக்கிறது.

தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

House keeping துறையில் சுயதொழில் செய்த பலர் உள்ளனர். Trichy Facility Service எனப்படும் ஒரு நிறுவனம் ஹோட்டல்கள், மருத்துவமனைகள், கல்வி வளாகங்கள், சினிமா தியேட்டர்கள் என பல நிறுவனங்களின்House keeping வேலையினை ஒப்பந்த அடிப்படையில் செய்து கொண்டிருக்கிறது. எதற்கு இந்த உதாரணம் என்றால், இந்த நிறுவனத்தை நடத்துபவர் கேட்டரிங் படித்தவர். எனக்கு ஒருவருடம் கல்லூரியில் மூத்தவரான, சீனியர் கவிதா அவர்கள். இப்படி பலர் House keeping மூலம் முதலாளியாக மாறியுள்ளனர்.

House keeping துறையில் ஸ்டார் ஹோட்டலில் Executive Housekeeper எனப்படும் பதவி மிகப்பெரிய மேலாளர் பதவிகளுள் ஒன்று ஆகும். இந்தப் பதவிக்கு வருவதற்கு முன் Room Attendant / Housekeeping Associate என்ற பதவியில் துவங்கி 5 முதல் 7 மேற்பதவிகள் இருக்கும். அதன் பின்னர்தான்Executive Housekeeperபதவிக்கு வர முடியும்.

House keeping Departmentஹோட்டலின் அதிக வருமானம் தரும் Rooms Division என்ற துறையை Front Office துறை மூலம் விற்பனை செய்தாலும், அதனை முக்கியமாக பராமரிக்கும் துறை House keeping துறை ஆகும்.

ஒரு இடத்தை அழகுபடுத்தும் எண்ணமும், சுத்தம், சுகாதாரம் அவசியம் என்ற என்ணமும் மேலோங்கி இருப்பதுடன், நம்மை நம்பி நம்மிடம் வருபவரின் பாதுகாப்புக்கு நாம் பொறுப்பு என்ற உணர்வுடன் செயல்படும் திறனும் இருப்பவர்கள் House keeping துறையைத் தேர்ந்தெடுத்தால், வளர்வதுடன் வெற்றியும் பெறலாம்.

ஹோட்டல் மேனேஜ்மெட்டில் முக்கியமான 4 துறைகளானFood Production, F&B Service, Front Office, House keeping ஆகியவற்றின் வேலை வாய்ப்புகளைப் பற்றி தொடர் 9,10,11,12 ஆகியவற்றில் பார்த்துள்ளோம்.

மேலும், ஹோட்டலில் இன்னும் பல துறைகள் இருந்தாலும் அவை ஹோட்டலுக்கு உதவும் துறைகளாகவே பார்க்கப்படுகின்றன. அந்த துறைகளில் பணிபுரிய ஹோட்டல் மேனேஜ்மென்ட் படித்தவர்களும், வேறு குறிப்பிட்ட படிப்புகள் படித்தவர்களும் தேவைப்படுகின்றனர். அவற்றைப் பற்றி அடுத்தடுத்த தொடர்களில் பேசுவோம்.

தொடரும்…

கபிலன்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitche

Leave A Reply

Your email address will not be published.