அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

மனிதநேய ஜனநாயக கட்சி ஆலோசனைக் கூட்டம் !

திருச்சியில் அடகு நகையை விற்க

மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைவர் மு.தமிமுன் அன்சாரி அறிவுறுத்தல் படி சட்டப்பேரவைத் தேர்தல் 2026 க்கான களப்பணிகளை தமிழகம் முழுவதும் மஜக வின் தொண்டர்கள் உற்சாகத்தோடு செயலாற்ற துவங்கியுள்ளனர்.
அதன் முதல் நிகழ்வாக திருச்சி மாவட்டத்திற்கு உட்பட்ட 9 சட்டமன்ற தொகுதிகளின் பொறுப்பாளர்களுக்கான சிறப்பு ஆலோசனைக் கூட்டம் மாவட்டச் செயலாளர் பாபு பாய் தலைமையில், அவைத் தலைவர் ராஜா முஹம்மது, மாவட்ட பொருளாளர் ஜமீர் பாஷா ஆகியோர் முன்னிலையில் மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் சிறப்பழைப்பாளராக மாநில இளைஞர் அணி செயலாளர் திருச்சி ஷரிப் பங்கேற்று மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் நோக்கம் குறித்தும், தொகுதி வாரியாக பொறுப்பாளர்கள் செயலாற்ற வேண்டிய முறைகள் குறித்தும், மீண்டும் திராவிட மாடல் அரசு ஏன் தேவை என்பது குறித்தும் சிறப்புரை ஆற்றினார். முன்னதாக திருச்சியை உள்ளடக்கிய ஒன்பது சட்டமன்ற தொகுதிகளுக்கும் பொறுப்பாளர்கள் திருச்சி மேற்கு – பாபு பாய், திருச்சி கிழக்கு : ஜமீர் பாஷா, திருவரம்பூர் : தர்வேஸ், மணப்பாறை : பஷாரத், மண்ணச்சநல்லூர் : சதாம்,  ஸ்ரீரங்கம் : யாசர் ஷெரிப், லால்குடி : பரீத் இஸ்மத் உசேன், துறையூர் : ஷேக் மைதீன், முசிறி : ஹபீப் ரஹ்மான் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்..

இந்த வார JANUARY - 28 அங்குசம் இதழில்…2026 ANGUSAM WEEKLY BOOK

2026 - அங்குசம் தேர்தல் களம் - வீடியோ பார்க்க

இக்கூட்டத்தில் வருகின்ற சட்டப்பேரவைத் தேர்தல் 2026 ல் மஜக விற்கு ஒரு தொகுதியை ஒதுக்கி அங்கீகரித்திருக்கும் திராவிட மாடல் அரசின் முதல்வர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினுக்கும், திமுக தலைமைக்கும் இக்கூட்டம் நன்றியை தெரிவிக்கின்றது.
தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் அங்கம் வகித்துள்ள அனைத்து கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்கள் மாபெரும் வெற்றி பெற அயராது உழைப்போம். திருச்சி மாவட்டத்திற்கு உட்பட்ட 9 சட்டமன்ற தொகுதிகளின் திமுக மற்றும் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து சூறாவளிப் பிரச்சாரம் மேற்கொள்ளப்படும்.

திருச்சியில் திண்ணைப் பிரச்சாரம், வலைதளப் பிரச்சாரம், ஜமாத் சந்திப்புகள், இளைஞர்கள், மாணவர்கள் ஒருங்கிணைப்புகள் போன்றவைகள் நடத்துவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இக்கூட்டத்தில் தலைமை செயற்குழு உறுப்பினர் சிராஜூதீன், மருத்துவ சேவை அணி மாநில துணைச் செயலாளர் ஜமால், இளைஞர் அணி மத்திய மண்டல செயலாளர் பஷாரத், மாவட்ட துணைச் செயலாளர்கள் தர்வேஷ், யாசர் ஷெரிப் உள்ளிட்ட நிர்வாகிகள் பெருந்திரளாக கலந்துக் கொண்டனர்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Comments are closed, but trackbacks and pingbacks are open.