இணையத்தில் சாதனை படைக்கும் ‘ஜவான்’ படத்தின் ‘ஹையோடா’ பாடல் !

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

இணையத்தில் சாதனை படைக்கும் ‘ஜவான்’ படத்தின் ‘ஹையோடா’ பாடல்

அன்பு அனைத்தையும் வெல்லும்! காதலால் ஷாருக்கான் இதயங்களை வென்றார்! ஜவானில் இடம்பெற்ற ‘ஹையோடா’ என தமிழிலும் , ‘சலேயா’ என இந்தியிலும், ‘சலோனா’ என தெலுங்கிலும் தொடங்கும் பாடல் வெளியாகி, தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளிலும், யூட்யூபில் 35 மில்லியனுக்கும் மேற்பட்ட பார்வைகளை பெற்றுள்ளது.

Dhanalakshmi Srinivasan University | Samayapuram ...

'Hyoda' song from 'Jawan'!
‘Hyoda’ song from ‘Jawan’!

யூட்யூபில் 24 மணி நேரத்தில் உலகளவில் அதிக அளவில் பார்வையிடப்பட்ட வீடியோவாகவும் சாதனை படைத்திருக்கிறது.யூட்யூப் மற்றும் யூட்யூப் மியூசிக் தர வரிசையில் ‘ஹையோடா’ முதலிடத்தில் ட்ரெண்டிங்கில் உள்ளது.

அங்குசம் தற்போதைய இதழ்.. படிக்க..

🛑வெறும் 2500 முதல் LED TV |50%Opening Offer |BISMI ELECTRONICS

தமிழில் ‘ஹையோடா’. இந்தியில் ‘சலேயா’.., தெலுங்கில் ‘சலோனா’.., எனத் தொடங்கும் ஷாருக்கானின் காதல் பாடல், உண்மையிலேயே ரசிகர்களுக்கு சிறப்பான விருந்தாகும். அழகான நயன்தாரா மற்றும் ஷாருக்கான் உடனான அவர்களது கெமிஸ்ட்ரி பார்வையாளர்களால் பாராட்டப்பட்டது. திறமையான அனிருத் இசையமைத்த இந்தப் பாடலுக்கு இந்தியில் அர்ஜித் சிங் மற்றும் ஷில்பா ராவ் ஆகியோர் பாடியிருக்கிறார்கள். தெலுங்கில் பாடகர் ஆதித்யா ஆர். கே மற்றும் பாடகி பிரியா மாலி ஆகியோர் அழகாக பாடியிருக்கிறார்கள். தமிழில் அனிருத் மற்றும் பிரியா மாலி ஆகியோர் தங்களது மயக்கும் குரலில் பாடியிருக்கிறார்கள். இந்த பாடலுக்கு புகழ்பெற்ற நடன இயக்குநர் ஃபாரா கான் அழகாக நடனம் அமைத்து பாடலை உயிர்ப்பித்துள்ளார்.

இந்த பாடல் வைரலாகி யூட்யூபில் ஆதிக்கம் செலுத்தியது மட்டுமல்லாமல் யூட்யூபின் ட்ரெண்டிங் மற்றும் மியூசிக் தர வரிசையில் முதலிடத்தையும் பெற்றுள்ளது. ஜவானின் சமீபத்திய காதல் பாடல் – பார்வையாளர்களுக்கு ஒரு புதிய காதல் பாடலை வழங்கி இருக்கிறது. இந்தப் பாடல் அவர்களின் ப்ளே லிஸ்டில் இடம்பெறுவது நிச்சயம்.

‘ஜவான்’ திரைப்படத்தை ரெட் சில்லிஸ் என்டர்டெய்ன்மென்ட் வழங்க, அட்லீ இயக்கியுள்ளார். கௌரி கான் தயாரித்துள்ளார். மேலும் கௌரவ் சர்மா இணைந்து தயாரித்துள்ளார். இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் செப்டம்பர் 7ஆம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.

http://linktr.ee/jawansong2

அங்குசம் இதழ் உங்கள் இல்லம் தேடி வர... 🤔🤔 #angusam #trichy

Leave A Reply

Your email address will not be published.