ரூ.20 கோடி மதிப்புள்ள அம்மன் உலோகசிலை திருடிய எதிரியை கைது செய்த காவல்துறை!

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

சிலைகடத்தல் தடுப்புபிரிவு, மதுரை சரக அதிகாரிகளுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் 19.032024 அன்று புதுக்கோட்டை,  திருச்சி பிரதான சாலையில் ஆலத்தூர் சந்திப்பில் வாகன சோதனை செய்த போது சந்தேகத்திற்குரிய வாகனத்தை சோதனை செய்த போது (1) அஜித்குமார் (2) முஸ்தபா மற்றும் (3) ஸ்ரீராம் ஆகியோரை விசாரணை செய்ததில் ரூ.20 கோடி மதிப்புள்ள அம்மன் உலோகசிலை கைப்பற்றப்பட்டு எதிரிகள் கைது செய்யப்பட்டனர். இந்த விசாரணையில் மற்றொரு எதிரியான ராஜ் (எ) மனோஜ் (எ) மனோஜ்குமார் என்பவர் தலைமறைவானார். இது சம்மந்தமாக IWCID PS Cr. No.03/2024 u/s. U/s 41 (1) (d), 102 CrPC& 454 (2) 457 (2) 380 (2) IPC நடைப்பெற்று வந்தது.

மேற்கொண்டு விசாரணை செய்தததில் தலைமறைவு எதிரி மனோஜ்குமார் வெளிநாட்டில் பணியாற்றி வருவது தெரியவந்தது. எனவே, சிலைகடத்தல் தடுப்புபிரிவு காவல் கண்காணிப்பாளர் அவர்களிடமிருந்து, 02.04.2025 அன்று புதுடெல்லியில் உள்ள மத்திய அரசின் உள்துறை அமைச்சகத்தின். குடிவரவு பணியகம் மூலமாக லுக்அவுட் சர்க்குலர் அனுப்பப்பட்டிருந்தது.

திருச்சியில் டைட்டானிக் கப்பலா ? எதிர்பார்ப்பை எகிற வைக்கும் அட்டகாசமான பொருட்காட்சி !

அம்மன் உலோகசிலை
அம்மன் உலோகசிலை

கடந்த 16.05.2025 / 00:15 மணிக்கு மேற்கூறிய மனோஜ்குமார் என்பவரை மும்பை. சத்ரபதி சிவாஜி விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்டு, சிலை கடத்தல் தடுப்புபிரிவு அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மேலும் எதிரியை, மும்பை அந்தேரி மாண்புமிகு 65வது முதல்நிலை குற்றவியல் நீதித்துறை நடுவர் முன்னிலையில் ஆஜர்ப்படுத்தி 16.05.2025 அன்று அந்தேரி காவல் நிலையத்தில் வைக்கப்பட்டார்.

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

மக்களுடன் மண்ணச்சநல்லூர் S.கதிரவன் ! நம்ம வீட்டு எம்.எல்.ஏ. !

மேற்படி தகவலின் பேரில் சிலைகடத்தல் தடுப்புபிரிவு, மத்திய சரக கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு. ஜி.பாலமுருகன் அவர்கள் தலைமையில் வழக்கின் புலன்விசாரணை அதிகாரி உதவி ஆய்வாளர் திரு. இளங்கோவன் மற்றும் குழுவினர் மும்பை சென்றனர். 18.05.2025 அன்று சிலை கடத்தல் தடுப்புபிரிவு அதிகாரிகள், எதிரி மனோஜ்குமாரை கைது செய்து மும்பை, பாந்த்ரா வில் உள்ள மாண்புமிகு முதல் நிலை குற்றவியல் நீதித்துறை நடுவர் (விடுமுறை நீதிமன்றம்) அவர்கள் முன்னிலையில் ஆஜர்ப்படுத்தப்பட்டு 20.05.2025 அன்று தமிழ்நாட்டிற்கு அழைத்துவரப்பட்டார்.

மனோஜ்குமார்
மனோஜ்குமார்

அனைத்து சட்டநடைமுறைகளும் பின்பற்றப்பட்ட பிறகு, எதிரி மனோஜ்குமாரை 2105,2025 அன்று மதுரை, மாண்புமிகு கூடுதல் முதன்மை குற்றவியல் நீதித்துறை நடுவர் முன்னிலையில் ஆஜர்ப்படுத்தப்பட்டார்.

தலைமறைவு எதிரியை கைது செய்ய, சிலைகடத்தல் தடுப்புபிரிவு அதிகாரிகள் மற்றும் குழுவினர் எடுத்த முயற்சிகளை, திரு. சங்கர் ஜிவால், இகா காவல்துறை தலைமை இயக்குநர் மற்றும் படைத்தலைவர். தமிழ்நாடு அவர்கள் வெகுவாக பாராட்டினார்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Leave A Reply

Your email address will not be published.