இராமநாதபுரத்தில் மோடி போட்டியிட்டால் தோல்வி  – அம்பலப்படுத்திய உளவுத்துறை !

0

இராமநாதபுரத்தில் மோடி போட்டியிட்டால் தோல்வி  – உளவுத்துறை கருத்துக்கணிப்பு அம்பலம் மிகஅண்மையில் மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்களின் முதல் பட்டியல் வெளியிடப்பட்டது. அதில் தமிழ்நாட்டிற்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்படவில்லை. தலைமை அமைச்சர் மோடி மீண்டும் உ.பி.மாநிலத்தில் வரணாசி தொகுதியில் போட்டியிடுகிறார் என்ற அறிவிப்பும் வெளியிடப்பட்டிருந்தது. தமிழ்நாட்டில் கூட்டணி இன்னும் அமையாத நிலையில்தான் வேட்பாளர்கள் அறிவிக்கப்படவில்லை என்று கட்சி வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.

தமிழ்நாடு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை அவர்கள் தலைமை அமைச்சர் மோடி தமிழ்நாட்டில் போட்டியிடவேண்டும் என்றும், அது பாஜகவின் வாக்கு வங்கியைத் தமிழ்நாட்டில் உயர்த்துவதற்கு உதவியாக இருக்கும் என்ற கருத்தை வெளியிட்டிருந்தார். அதன் அடிப்படையில் மோடி இராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் போட்டியிடுவார் என்று ஊடகங்களில் செய்திகள் வெளியிடப்பட்டன. இந்தச் செய்தியைப் பாஜகவின் தேசியத் தலைமை மறுக்கவில்லை. தமிழகத்தில் மோடி போட்டியிடவேண்டும் என்ற வேண்டுகோள் பரிசீலனையில் உள்ளதாகப் பாஜகவின் தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா செய்தியாளர்களிடம் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களிடம் பேசும்போது,“மோடிஜி தமிழ்நாட்டில் இராமநாதபுரத்தில் போட்டியிட்டால் பாஜக தமிழ்நாட்டில் இராமநாதபுரம், திருநெல்வேலி, கன்னியாகுமரி, கோவை, பொள்ளாச்சி ஆகிய 5 தொகுதிகளில் வெற்றிபெறுவது நிச்சயம்” என்று கூறினார்.

ரோஸ்மில்

கடந்த 2024 ஜனவரி மாதத்தில் டெல்லியிலிருந்து வந்த உளவுத்துறை மற்றும் வடநாட்டு பத்திரிக்கையாளர்கள் அடங்கிய குழு இராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் மோடி நின்றால் வெற்றிபெறுவரா? எத்தனை சதவீத வாக்குகளை வாங்குவார் என்பது மக்களவைத் தொகுதிக்குட்பட்ட இராமநாதபுரம், பரமக்குடி (தனி) திருவாடானை, முதுகுளத்தூர், அறந்தாங்கி, திருச்சுழி ஆகிய சட்டமன்றத் தொகுதிகளில் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 14,55891 ஆகும். தொகுதிக்கு ஆயிரம் பேர் என்று 6,000 பேரிடம் சர்வே நடத்தியுள்ளது. இதன் முடிவுகளை ஊடகங்களுக்கு வெளியிடப்படவில்லை. மோடியிடம் மட்டும் இம் முடிவுகள் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தமிழ்நாடு முழுவதும் 234 சட்டமன்றத் தொகுதிகளில் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் யாருக்கு ஆதரவு அலை வீசுகின்றது என்பதை மக்களை நேரடியாகக் களத்தில் சந்தித்து, மக்களின் உணர்வுகளை ஆய்வாளர் சூர்யா சேவியர் பதிவு செய்துள்ளார். இவர் செய்தி ஊடகமென்றில் பேசும்போது, “மோடி போட்டியிடுவதாகக் கூறப்படும் இராமநாதபுரம் மக்களவைத் தொகுதிக்குட்பட்ட 6 தொகுதிகளில் மக்கள் ஆதரவு அலை யாருக்கு என்பதைக் கணித்துள்ளேன். அப்படி மக்களைச் சந்திக்கும்போது, டெல்லியிலிருந்து ஒரு குழு மோடி நின்றால் வெற்றி பெறுவாரா? என்று ஆய்வு நடத்தப்பட்ட தகவலை மக்களிடமிருந்து அறிந்துகொண்டேன். அந்தக் குழுவில் தமிழ்நாடு மத்திய உளவுத் துறை அதிகாரிகளும் இந்தக் கருத்துக்கணிப்பில் கலந்துகொண்டுள்ளார்கள். அவர்கள் மூலமாகக் கருத்துக்கணிப்பின் விவரங்கள் எனக்குத் தெரியவந்தது.

- Advertisement -

- Advertisement -

4 bismi svs
மோடி - இராமநாதபுரம்
மோடி – இராமநாதபுரம்

அதன் அடிப்படையில் இராமநாதபுரம் தொகுதியில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் சார்பில் மோடி போட்டியிட்டால் 21% வாக்குகளை மட்டுமே பெற்றுத் தோல்வியடைவார் என்று கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது. இந்தியா கூட்டணியில் போட்டியிடும் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி 39% வாக்குகளைப் பெற்று வெற்றிபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிமுக 20% நாம் தமிழர் கட்சியில் சீமான் போட்டியிட்டால் 10% வாக்குகளையும் பெறுவார்கள் என்றும் அக் கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக அறிந்தேன். மோடி தோல்வியடைவார் என்பதால்தான் இந்தக் கருத்துக்கணிப்பு விவரங்களை உளவுத்துறை வெளியிடவில்லை” என்று கூறினார்.

இராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் உள்ள 14.50 இலட்சம் வாக்காளர்களில் 75% வாக்குப்பதிவு நடைபெற்றால் 10 இலட்சம் வாக்குகள் பதிவாகும் என்று எடுத்துக்கொண்டால், இந்தியா கூட்டணி சுமார் 4 இலட்சம் வாக்குகளைப் பெறும். தேசிய ஜனநாயகக்கூட்டணியில் மோடி சுமார் 2.10 இலட்சம் வாக்குகளைப் பெறுவார். அதிமுக சுமார் 2.00 இலட்சம் வாக்குகளைப் பெறும். நாம் தமிழர் கட்சி சுமார் 1.00 இலட்சம் வாக்குகளைப் பெறும் என்றும் இதர கட்சிகள் மற்றும் சுயேட்சைகள் 90 ஆயிரம் வாக்குகளைப் பெறுவர் என்றும் அக் கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

தமிழ்நாட்டில் நடத்தப்பட்ட இராமநாதபுரம் மக்களவைத் தொகுதி கருத்துக்கணிப்பின் அடிப்படையில் மோடி போட்டியிடுவதைப் பாஜக தேசியத் தலைமை கைவிட்டுவிட்டதாகவும் தகவல்கள் உள்ளன. பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை,“தேசிய தலைமை எனக்குப் போட்டியிட வாய்ப்பளித்தால் நான் போட்டியிடுவேன்” என்று குறிப்பிட்டுள்ளார். ஒருவேளை இராமநாதபுரம் தொகுதியில் அண்ணாமலையே போட்டியிடும் வாய்ப்புகள் அதிகம் என்றே எண்ணத் தோன்றுகின்றது.

ஆதவன்

5 national kavi
Leave A Reply

Your email address will not be published.