‘காடுவெட்டி’ டிரெய்லர் ரிலீஸ்! பா.இரஞ்சித் மீது அட்டாக் !

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

‘காடுவெட்டி’ டிரெய்லர் ரிலீஸ்! பா.இரஞ்சித் மீது அட்டாக் ! மஞ்சள் ஸ்கிரீன்ஸ் பட நிறுவனம் சார்பில் த. சுபாஷ் சந்திரபோஸ், K.மகேந்திரன், N. மகேந்திரன், C. பரமசிவம், G. ராமு  சோலை ஆறுமுகம் ஆகியோர்,இணைந்துணைந்து தயாரித்துள்ள, ஆர்.கே.சுரேஷ் ஹீரோவாக நடிக்கும் ‘காடுவெட்டி’ படத்தின் டிரெய்லர் ரிலீஸ் சென்னை கமலா தியேட்டரில் மார்ச் 03-ஆம் தேதி நடந்தது.

உடனுக்குடன் அங்குசம் வாட்சப் சேனலில்.. சேர.....

இதில்  இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா பேசியபோது, “இந்தப்படத்தில் நானே ஷாக் ஆகிற மாதிரி வணக்கம் தமிழா சாதிக், கானா பாடலை பண்ணியிருக்கிறார் அவருக்கு வாழ்த்துகள்”. ஸ்டண்ட் மாஸ்டர் கனல்கண்ணன்  “ ராமர் கோவில் பிரதிஷ்டை நடந்தபோது உலகத்தில் உள்ள அத்தனை இந்துக்களும் மாலை 6 மணிக்கு வீடுகளில் விளக்கேற்ற வேண்டும் என்று பிரதமர் மோடி சொன்னார். ஆனால் ராமருடைய நிறமான நீலத்தை தயாரிப்பு நிறுவனத்தின் பெயராக வைத்திருக்கும் இயக்குனர்    “6 மணிக்கு மேல் விளக்கேற்றாவிட்டால் நம்மை தீவிரவாதிகள் என்று சொல்லிவிடுவார்கள்” என்று வன்மத்தோடு பேசியது வேதனை அளிக்கிறது” என டைரக்டர் பா.இரஞ்சித் மீதும் அவரது நீலம் புரொடக்சன்ஸ் தயாரிப்பு நிறுவனத்தின் மீதும் வன்மத்தை கனலாக கக்கினார்.
காடுவெட்டி'
காடுவெட்டி’

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

கில்டு தலைவர் ஜாகுவார் தங்கம் பேசியபோது, “காடுவெட்டி குரு வீரப்பரம்பரை. அந்த கேரக்டரில் நடிப்பதற்கு வீரம் வேண்டும். அந்த வீரன்தான் ஆர்.கே.சுரேஷ்”என்று ‘ஓவராக’ பேசினார் ‌ இயக்குனர் மோகன் ஜி பேசியதாவது:-
“தமிழ் சினிமாவில் அடுத்த வீரமான ஹீரோ ஆர்.கே.சுரேஷ்தான். இந்தப்படத்தில் பெரிய சம்பவம் இருக்கு.  ‘திரெளபதி 2’ விரைவில் தொடங்கும். அதற்குமுன்  ‘காடுவெட்டி’யை கொண்டாடுங்கள்” என்றார்.
இயக்குனர் ஆர்.வி.உதயகுமார் பேசியதாவது:- “நான் காடுவெட்டி குருவின் ரசிகன். கிட்டத்தட்ட இதே கதைதான்  ‘சின்னக்கவுண்டர்’. வளர்த்து தூக்கிவிட்ட இயக்குனர்களை சேர்த்துக்கொண்டு போவதுதான் பண்பாடு. ஆனால் வெற்றிபெற்ற பிறகு அதற்கு காரணமானவர்களை மறந்துவிடும் பழக்கம் சினிமாவில் இருக்கு. இது நியாயமே இல்லை என்பது எனது கருத்து”

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

படத்தின் நாயகன் ஆர்.கே.சுரேஷ் பேசியதாவது:- “என்னைப்பற்றிய எத்தனையோ கட்டுக்கதைகள் கற்பனைகளை கிளப்பிவிட்டார்கள். நான் 100 படங்கள் விநியோகம் செய்திருக்கிறேன். எத்தனையோ படங்கள் தயாரித்திருக்கிறேன்; 40 படங்கள் நடித்திருக்கிறேன். சினிமாவில் எனக்கு 15 வருட உழைப்பு உண்டு. எல்லா அரசியல்வாதிகள் எல்லா சாதிக்காரர்களுடனும் பழக்கம் உண்டு. அப்படியான சூழலில் என்னைப்பற்றி தவறான செய்திகள் வெளிவந்தது. 15வருடமாக சினிமாவில் எந்த பிரச்சனையும் இல்லாமல் இருந்த நான் தவறு செய்திருப்பேனா?
காடுவெட்டி'
காடுவெட்டி’
வடமாவட்டங்கள் தென் மாவட்டங்களில் ரசிகர்கள் என் மீது அன்பு வைத்திருக்கிறார்கள். அதனால் சினிமா, அரசியலை விட்டு நான் போகமாட்டேன். இப்போது காடுவெட்டிக்கு வருவோம். இந்த கேரக்டரில் நடித்ததற்காக நான் பெருமைப்படுகிறேன். இயக்குனர் சோலை ஆறுமுகம் கதையை சொன்னதுமே அவரை மைண்ட்ல வச்சுதான் நடித்தேன். குரு ஐயாவின் குடும்பத்துக்கு சொல்றேன். இந்தப்படம் உங்களுக்கு பெருமை சேர்க்கும். இது உணர்வு சார்ந்த படம். இதை தமிழ்நாடு முழுவதும் வரவேற்பார்கள். இது சாதிப் படம் இல்லை. நான் எந்த சாதியையும் தவறாக பேச மாட்டேன். சாதி என்பது உணர்வு மட்டுமே.” என்றார்.
படத்தின் இயக்குனர் சோலை ஆறுமுகம் பேசியதாவது:-“காடுவெட்டியை என்னால் இயக்க முடிந்தது என்றால் அதற்கு முதல் காரணம் தயாரிப்பாளர் சுபாஷ் சந்திரபோஸ்தான். இந்த படத்திற்கு சென்சார் 31 கட்டுகள் கொடுத்தது. சென்சார் பிரச்சனை, கோர்ட் வழக்கு என்று வந்தபோது அண்ணன் மகேந்திரன்தான் நம்பிக்கையையும் 100 யானை பலத்தையும் தந்தார்.
காடுவெட்டி என்ற தலைப்பை வைக்கக்கூடாது என்று சொன்ன சென்சார் போர்டிடம் எனது விளக்கத்தை கொடுத்தேன். காடுவெட்டி பெயருக்கு பெரிய வரலாறு இருக்கிறது. அந்த காலத்தில் மன்னர்கள் போர் பயிற்சிக்காக காட்டில்  ஒரு இடத்தை தேர்வு செய்து மரங்களை வெட்டி  போர் பயிற்சிக் களமாக பயன்படுத்துவார்கள். அதனை போர்க்குடி மக்கள் விவசாய நிலமாக மாற்றுவார்கள். பிறகு அதனை ஊர்களாக மாற்றுவார்கள். அப்போது அதற்கு காடுவெட்டி என்று பெயர் வைப்பார்கள். இப்படி தமிழ் நாட்டில் 11 இடங்கள் உள்ளன. ஆக காடுவெட்டி ஒரு சரித்திரம் என்று விவாதித்தேன். இந்த தலைப்பு கிடைத்தது.
காடுவெட்டி'
காடுவெட்டி’
காதல் என்ற சப்பை காரணத்துக்காக எல்லோரையும் ஒழிக்க நினைத்தால் அது தலைமுறை தலைமுறையாக வன்முறையை சேர்க்கும். இந்தப்படம் தமிழ் சினிமாவில் வட மாவட்டத்து மக்களின் வாழ்வியலை, கலாச்சாரத்தை, அரசியலை உள்ளது உள்ளபடி பேசும். நிறைய ஹீரோக்களிடம் இந்த கதையை சொன்னபோது அவர்களுக்கு கதை பிடித்திருந்தது.  டைட்டிலை சொன்னபோது வேண்டாம் என்று மறுத்துவிட்டார்கள். ஆனால் படத்தின் தலைப்புக்காகவே இந்த படத்தில் நடிக்க ஆர்.கே.சுரேஷ் சம்மதித்தார். தமிழ் சினிமாவில் இப்படியொரு ஹீரோ கிடைப்பது அரிது. அவருக்கும் தயாரிப்பாளர்களுக்கும் என் நன்றி”

அங்குசம் இதழ் - இலவசமாக படிக்க -

Leave A Reply

Your email address will not be published.