விலைவாசி உயர்வை கண்டித்து ஐஜேகே சார்பில் ஆர்ப்பாட்டம்
குளித்தலையில் ஐஜேகே சார்பில், மத்திய மாநில அரசுகளின் விலைவாசி உயர்வை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்.
கரூர் மாவட்டம், குளித்தலை பேருந்து நிலையம் காந்தி சிலை முன்பு கரூர் மாவட்ட ஐஜேகே சார்பில்,
மத்திய, மாநில அரசுகளின் விலைவாசி உயிரை கண்டித்தும்,
குளித்தலையில் கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரியும், கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கரூர் மாவட்ட தலைவர்,
பிரகாஷ் கண்ணா தலைமை வகித்தார். மாவட்ட துணை தலைவர் பிச்சை, குளித்தலை நகர தலைவர் மணிகண்டன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கண்டன ஆர்ப்பாட்டத்தில் மின் கட்டண உயர்வு,
ஜிஎஸ்டி உயர்வு,
குளித்தலையில் நவீன பேருந்து நிலையம் அமைக்க வேண்டும்,
குளித்தலையில் உள்ள மருத்துவமனையை மாவட்ட தலைமை மருத்துவமனையாக தரம் உயர்த்த வேண்டும்,
குளித்தலையில் துணை மின் நிலையம் அமைக்க வேண்டும்,
உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பி,மத்திய, மாநில அரசுகளை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் செய்தனர்.
இதில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.