இளைஞர்களை குறிவைத்து சைபர் கிரைம் மிரட்டல் ! உஷாரா இருங்க !
பொதுமக்களுக்கு இணைய வழி காவல் நிலையத்தின் முக்கிய அறிவிப்பு மற்றும் எச்சரிக்கை!
கடந்த சில நாட்களாக குறிப்பாக இளைஞர்களை மற்றும் ஆண்களை குறி வைத்து நீங்கள் குழந்தைகளுடைய ஆபாச படம் இணைய வழி மூலமாக பார்த்து உள்ளீர்கள் அல்லது பதிவிறக்கம் ,(download) செய்துள்ளீர்கள் குழந்தைகள் சம்பந்தமான ஆபாச படங்களை உங்கள் நண்பர்களுக்கு பகிர்ந்து உள்ளீர்கள், அது இணைய வழி சட்டத்தின்படி குற்றம் ஆகும் ஆகவே உங்கள் மீது இணைய வழி காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றோம், நீங்கள் விசாரணைக்கு வர வேண்டும் என்று இணையவழி மோசடிக்காரர்கள் பொதுமக்களை இளைஞர்களை மிரட்டியது சம்பந்தமாக ஐந்துக்கும் மேற்பட்ட புகார்கள் இணைய வழி காவல் நிலையத்தில் விசாரணையில் உள்ளது.
இணைய வழி காவல் நிலையத்தில் இருந்து பேசுகிறோம் உங்கள் மீது வழக்கு பதிவு செய்துள்ளோம் உங்களை இந்த வழக்கிலிருந்து விடுவித்து விடுகிறோம் என்று கூறி பணம் கேட்கின்றனர். எங்களின் விசாரணையில் மேற்படி நபர்கள் காவல்துறையினர் அல்ல என்பதும் இணைய வழி மோசடிக்காரர்களின் வேலை என்றும் தெரிய வந்துள்ளது.
தொலைபேசி, வாட்ஸ் அப் ஆடியோ கால் மற்றும் மின்னஞ்சல் மூலமாக தொடர்பு கொள்பவர்கள் உண்மையான காவல்துறையினர் தானா என்பதை இணைய வழி காவல் நிலையத்தின் இலவச தொலைபேசி எண்ணான 1930* மற்றும் 0413-2276144/9489205246 * மின்னஞ்சல்:cybercell-police@py.gov.in என்ற எண்ணை தொடர்பு கொண்டு உறுதிப்படுத்திக் கொள்ளுமாறு தெரிவிக்கப்படுகிறது
மேலும், இணைய வழி மோசடிக்காரர்களின் மிரட்டலுக்கு பயந்து பணத்தை அனுப்பி பணத்தை ஏமாற வேண்டாம் என புதுச்சேரி இணைய வழி காவல் நிலையத்தின் சார்பாக பொதுமக்களுக்கு எச்சரிக்கை செய்கிறோம்.