வாணியம்பாடி இலஞ்ச தாசில்தார் சிவப்பிரகாசத்தை பாதுகாக்கிறதா, ஜோலார்பேட்டை போலீசு? ஐகோர்ட் அதிருப்தி !
வாணியம்பாடி இலஞ்ச தாசில்தார் சிவப்பிரகாசத்தை பாதுகாக்கிறதா, ஜோலார்பேட்டை போலீசு? ஐகோர்ட் அதிருப்தி ! திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த ஏலகிரி கிராமத்தை சேர்த்தவர் ஒப்பந்ததாரர் குமரேசன். ஏலகிரி மலை அத்தனாவூர் கிராமத்தில் இவருக்குச் சொந்தமான நிலத்தின் தனிப்பட்டாவில், திருத்தம் செய்ய 20 இலட்சம் லஞ்சமாக கேட்ட தாசில்தார் சிவப்பியகாசத்திற்கு எதிராக புகார் கொடுத்திருந்தார்.
புகார் மீது எந்த நடவடிக்கையும் இல்லாத காரணத்தால், கடந்த 2023 நவம்பர் 25 ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார் நில உரிமையாளர் குமரேசன். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.கே. இளந்திரையன், “புகார் குறித்து தாசில்தாரரிடம் விளக்கம் கேட்டு 12 வாரங்களில் விசாரணையை முடிக்க வேண்டும்.” என உத்திரவிட்டிருந்தார்.
இதற்கிடையில், இலஞ்ச புகாரை வாபஸ் வாங்குமாறு, தாசில்தார் சிவப்பிரகாசம் தூண்டுதலில் பேரில் குமரேசனுக்கு மிரட்டல் விடுத்த, குற்றச்சாட்டில் ஜோலார்பேட்டையை சேர்ந்த மின் வாரிய ஊழியர் அபுபக்கர் சித்திக் மீது ஜோலார்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இதனை நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு சென்றார் குமரேசன்.
இந்த விவகாரம் தொடர்பாக விரிவாக அங்குசம் இணையம் மற்றும் அச்சு இதழில் தொடர்ந்து எழுதி வந்திருக்கிறோம்.
கட்டுரைகள்:
நில உரிமையாளருக்கு மிரட்டல் விடுத்தவர் மீது எப்ஐஆர் ; தாசில்தார் மீது நடவடிக்கை எப்போது ?
பட்டாவில் பெயர் சேர்க்க நீக்க லஞ்சம் – தில்லாலங்கடி தாசில்தாரை விசாரிக்க ஐகோர்ட் உத்தரவு !
ஐகோர்ட்டுக்கும் , நில உரிமையாளருக்கும் ”ஜோக்” காட்டும் ஜோலார்பேட்டை போலீஸ் !
இந்நிலையில், கடந்த ஆகஸ்ட் 27 அன்று நீதிபதி ஜெயச்சந்திரன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. தாசில்தார் சிவப்பிரகாசத்நை ஏன் விசாரிக்கவில்லை? என கேட்ட நிதிபதியிடம் ஜோலார்பேட்டை போலீஸ் சார்பில் ஆஜரான
(Crl. தரப்பு) அரசு தரப்பு வழக்கறிஞர் கூடுதலாக மூன்று மாதங்கள் வரை அவகாசம் கேட்க அதனை ஏற்க மறுத்த நீதிபதி, ஒரு மாதம் வரை மட்டுமே கால அவகாசம் வழங்கியும் தாசில்தார் சிவப்பிரகாசம் மீது எப்ஐஆர் பதிந்து செப்டம்பர் 27 க்குள் விசாரணையின் இறுதி அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
– கா.மணிகண்டன்