புதிய நாடளுமன்றக் கட்டிட திறப்பு விழாவில் கலந்து கொள்ளும் அரசியல் கட்சிகளின் பட்டியல்:
புதிய நாடளுமன்றக் கட்டிட திறப்பு விழாவில் கலந்து கொள்ளும் அரசியல் கட்சிகளின் பட்டியல்:
புதிய பார்லிமென்ட் கட்டடம் திறப்பு விழா ஒரு முக்கியமான தருணம். நாடே கொண்டாடிய வேண்டிய ஒரு விசியம் பெரும் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது. புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழாவை புறக்கணிக்கப் போவதாக பத்தொன்பது எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளன.
நாட்டின் முதல் குடிமகனாக கவுரவிக்கப்படும் குடியரசு தலைவர் முர்முவை முற்றிலுமாக புறக்கணித்து புதிய பார்லிமென்ட் கட்டிடத்தை திறந்து வைக்கும் பிரதமர் மோடியின் முடிவு நமது ஜனநாயகத்தின் மீதான பெரிய அவமானம் மட்டுமல்ல, நேரடியான தாக்குதலும் கூட என எதிர்க்கட்சிகள் கூறியுள்ளன. “இது தகுதியற்ற செயல்” என்றும், “நாட்டின் உயரிய பதவியை அவமதிப்பதாகவும், அரசியலமைப்பின் விதிகளை மீறுவதாகவும் எனவும் குற்றசாட்டி உள்ளன.
நமது அரசியலமைப்புபடி முன்னுரிமை வரிசையில் இந்தியக் குடியரசுத் தலைவர் முதலாவதாகவும், இரண்டாவதாக இந்தியாவின் துணைக் குடியரசுத் தலைவர் வருவார், அதன்பிறகு மூன்றாவதாக தான் பிரதமர் வருவார்.
அப்படி இருக்கையில், புதிய நாடளுமன்றக் கட்டிடத்தை நாட்டின் முதல் குடிமகனான குடியரசு தலைவர் திறந்து வைப்பது தான் முறை. ஆனால் அதையெல்லாம் மோடி அரசு கண்டுக்கொள்வதில்லை எனவும், 2014க்குப் பிறகு உருவான புதிய இந்தியாவில், அரசியலமைப்புச் சட்டங்கள் மற்றும் நெறிமுறைகளைப் பற்றி யாரும் கவலைப்படுவதில்லை. நாங்கள் செய்வது தான் சரி என மோடி ஆட்சியில் அனைத்துப் பணிகளையும் நியாயப்படுத்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
புதிய நாடளுமன்றக் கட்டிட திறப்பு விழாவில் கலந்து கொள்ளும் அரசியல் கட்சிகளின் பட்டியல்:
பாரதிய ஜனதா கட்சி (BJP) – ஜே.பி நட்டா
சிவசேனா (ஏக்நாத் ஷிண்டே பிரிவு) – ஏக்நாத் ஷிண்டே
தேசிய மக்கள் கட்சி (NPP) – கான்ராட் சங்மா
தேசியவாத ஜனநாயக முற்போக்கு கட்சி (NDPP) – சிங்வாங் கொன்யாக்
சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா (SKM) – பிரேம் சிங் தமாங்
ராஷ்ட்ரிய லோக் ஜனசக்தி கட்சி (RLJP) – சிராக் குமார் பாஸ்வான்
அப்னா தள் (சோனிலால்) – அனுப்ரியா பட்டேல்
இந்திய குடியரசுக் கட்சி (RPI) – ராம்தாஸ் அத்வாலே
தமிழ் மாநில காங்கிரஸ் (TMC) – ஜி.கே.வாசன்
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் (AIADMK) – எடப்பாடி கே.பழனிசாமி
அகில ஜார்கண்ட் மாணவர் சங்கம் (AJSU) – சுதேஷ் மஹ்தோ
மிசோ தேசிய முன்னணி (MNF) – ஜோரம்தங்கா
யுவஜன ஸ்ராமிக்க விவசாயி காங்கிரஸ் கட்சி (YSRCP) – ஒய்.எஸ்.ஜெகன் மோகன் ரெட்டி
தெலுங்கு தேசம் கட்சி (TDP) – என். சந்திரபாபு நாயுடு
சிரோமணி அகாலி தளம் (SAD) – சுக்பீர் சிங் பாதல்
பிஜு ஜனதா தளம் (BJD) – நவீன் பட்நாயக்