பிரபல யூ-டியூபர் இர்பானின் கார் மோதி பெண் உயிரிழப்பு ! ஒருவர் கைது !

0

அங்குசம் இதழ் இணையதளத்தில் E-Book வாசிக்க... இந்த லிங்கை பயன்படுத்துங்கள் - அங்குசம் அச்சு இதழ்.. உங்கள் இல்லம் தேடி வர ஆண்டு சந்தா ரூபாய் 500 மட்டுமே - தொடர்பு எண் - 9488842025

பிரபல யூடியூபரான இர்பான் ‘இர்பான் வியூஸ்’ எனும் யூடியூப் சேனலை நடத்தி வருகிறார்.

கடந்த 2016-ல் தன்னுடைய சேனலை துவக்கினார். எப்படியும் இவரது வீடியோவுக்கு ஒரே நாளில் 50,000 வியூவ்ஸ்கள் குவிந்துவிடும்.. சந்துபொந்தில் உள்ள குட்டி ஹோட்டலைக்கூட தேடிப்பிடித்து, அதை பொதுமக்களின் பார்வைக்கு வழங்கிவிடுவார் இர்பான்.. இந்த திறமைதான் அவரை, வெளிநாடுவரை, மக்களிடம் கொண்டுசென்று சேர்த்துள்ளது..
உணவகங்களில் உள்ள உணவுகளை ரிவிவ் செய்வதன் மூலம் பிரபலமான இவர் திரைப்பிரபலங்களுடன் உணவருந்தியவாரே நேர்காணல்களும் எடுத்து வருகிறார்.

அடகு - ஏல நகையை மீட்டு மறு அடகு வைக்க - விற்க

சினிமா பிரபலங்கள் முதல் அரசியல் பிரபலங்கள் வரை, இவரது வீடியோவில் தென்பட துவங்கிவிட்டனர்.. சிலசமயங்களல், அரசியல் பிரபலங்களையும் பேட்டி எடுத்து வருகிறார்.. அந்த வீடியோக்களும் மக்களை கவர்ந்து வருகின்றன. இவருக்கு ஏற்கனவே ஒரு பெண்ணுடன் நிச்சயதார்த்தம் நடந்த நிலையில் அந்தத் திருமணத்தை அவரே நிறுத்தி விட்டார்.

நீங்கள் வேலை பெறுவது எளிது...

இது குறித்து பேசிய அவர், “அந்தப்பெண்ணுக்கும் தனக்கும் கருத்து வேறுபாடு அதிமாக இருப்பதாகவும் அதன் காரணமாகவே திருமணத்தை நிறுத்தியதாகவும் இர்ஃபான் தெரிவித்திருந்தார். இதையடுத்து, சமீபத்தில்தான், இவருக்கு திருமணமானது. அதை சோசியல் மீடியா மிக அதிக அளவில் பேசப்பட்டது, அதே போன்று  ஆளுநர் ரவி தன்னுடை தன்னுடைய  மாளிகையில் கொடுத்த திருமணத்திற்காக கொடுத்த டீ பார்ட்டியை வீடியோ மிகப்பெரிய அங்கீகாரமாக வெளியிட்டார்.

3

இந்நிலையில், செங்கல்பட்டு மாவட்டம் மறைமலை நகரில் உள்ள நகராட்சி அலுவலகம் அருகே 25.05.2023  நேற்றிரவு யூடியூபர் இர்பானுக்கு சொந்தமான சொகுசு கார் ஒன்று மோதி 55 வயதான பத்மாவதி என்ற மூதாட்டி ஒருவர் சம்பவ இடத்தில் உயிரிழந்தார். அவரின் உடலை கைப்பற்றிய போலீசார் செங்கல்பட்டு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இதையடுத்து விபத்தை ஏற்படுத்தும் வகையில் காரை ஓட்டி வந்த அசாரூதின் என்பவரை கைது செய்து மறைமலை நகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்து நடந்த போது யூடியூபர் இர்பான் காரில் இருந்தாரா என்பது குறித்தும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதுமட்டுமல்லாமல் சிசிடிவி காட்சிகளும் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன.

Furry genius pet hospital

Leave A Reply

Your email address will not be published.