தேனி மாவட்டத்தில் அதிகரித்து வரும் கனிம வள கொள்ளையை தடுத்து நிறுத்தக் கோரி ஆர்ப்பாட்டம் !
தேனி மாவட்டத்தில், உத்தமபாளையம் பைபாஸ் சாலையில் இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கனிமவளக் கொள்ளையை தடுத்து நிறுத்த கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தேனி மாவட்டத்தில் உள்ள கண்மாய்களில் விவசாயிகள் என்ற போர்வையில், அரசு அதிகாரிகளின் துணையோடு வண்டல் மண் கொள்ளையடிக்கப்படுகிறது. மேலும், மூல வைகை ஆற்றில் மணல் கொலை தினந்தோறும் நடைபெற்று வருகிறது.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
தேனி மாவட்டத்தில் இருந்து அண்டை மாநிலமான கேரளா மாநிலத்திற்கு நூற்றுக்கணக்கான லாரிகளில் மண், மணல், கற்கள், உடை கற்கள், உள்ளிட்ட கனிம வளங்களை கொள்ளை அடித்து செல்லும் வாகனங்கள் மீது அரசு அதிகாரிகள் மீதும் மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
— ஜெய்ஸ்ரீராம்.