திருச்சி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் சுதந்திர தின கொண்டாட்டம்
திருச்சி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் சுதந்திர தின கொண்டாட்டம்
இந்திய திருநாட்டில் 75 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு பெரிய மிளகு பாறை உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் மாவட்டச் செயலாளர் தோழர் சிவா தலைமையில், தேசியக் கொடியினை மூத்த தலைவர் தோழர் ஏ. கே. திராவிடமணி ஏற்றி வைத்தார், கட்சியின் முன்னாள் மாநில நிர்வாக குழு உறுப்பினர் தோழர் எம். செல்வராஜ் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கொடியினை ஏற்றி வைத்தார். கட்சியின் முன்னணி தலைவர்களில் ஒருவரான த. இந்திரஜித் சுதந்திரப் போராட்டத்தில் இன்னுயிர் நீத்த தலைவர்களுக்கு அஞ்சலி செலுத்தி சுதந்திர தின உரையாற்றினார். மேலும் இந்த நிகழ்வில் ஏ ஐ டி யு சி பொதுச் செயலாளர் க. சுரேஷ், கட்டுமான சங்க மாவட்ட செயலாளர் செல்வகுமார், மாவட்ட குழு உறுப்பினர் சண்முகம், மாணவர் மாவட்ட செயலாளர் இப்ராகிம், ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்க மாவட்ட செயலாளர் சூர்யா, இடைக்கமிட்டி செயலாளர்கள் எம் .ஆர்.முருகன், சுரேஷ் முத்துசாமி, அபுதாஹீர், அஞ்சுகம், பார்வதி, ராஜலிங்கம், ராஜா போக்குவரத்து தொழிலாளர் சங்கம் சண்முகம், மற்றும் மார்க்சிம் கார்க்கி, துரைராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.