விருதுநகரில் இந்திய அரசியலமைப்பு சட்ட மேதை அம்பேத்கர் நினைவு தினம் அனுசரிப்பு
விருதுநகா் மாவட்டத்தில் இந்தியாவின் முதல் சட்ட அமைச்சர், இந்திய அரசியலமைப்பு சாசனத்தை உருவாக்கிய சட்டமேதை அண்ணல் அம்பேத்கரின் 68 ஆவது நினைவு நாள் இன்று (டிச.6) அனுசரிக்கப்பட்டது.
அண்ணல் அம்பேத்கர் அவர்கள் கல்வி வேலைவாய்ப்பிலும், ஒடுக்கப்பட்ட மக்களுக்காக தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர். இன்றைய காலகட்டத்தில் இந்தியாவில் சமத்துவம், சட்டமும் பேசப்படுகிறது என்றால் அதற்கு முதல் காரணம் இவர்தான்.
இதன் ஒரு பகுதியாக விருதுநகர் மாவட்டம் சாத்தூர் நகர் காவல் நிலையம் அருகே அமைக்கப்பட்ட அம்பேத்கரின் திருஉருவப்படத்திற்கு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் கலந்துகொண்டு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
இந்த நிகழ்வில் தெற்கு மாவட்ட திமுக விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ஆர் ரமேஷ்,நகர் மன்ற தலைவர் குருசாமி, ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் நிர்மலா கடற்கரை ராஜ், ஒன்றிய செயலாளர்கள் கடற்கரை ராஜ், முருகேசன், மற்றும் அனைத்து கட்சி நிர்வாகிகளும் அனைத்து சமுதாய தலைவர்களும் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினார்கள்.
— மாரீஸ்வரன்.