இணையவழி சைபர் குற்றங்கள் நடைபெறுவதில் இந்தியா மூன்றாவது இடம்

0

இந்த வார அங்குசம் இதழ் படிக்க..

கணினி வைரஸ் தடுப்புக்கான ஆசிய ஆராய்ச்சியாளர்கள் சங்கம் (அவார்) சார்பில் 27-ம் ஆண்டு சர்வதேச இணைய பாது காப்பு உச்சி மாநாடு சென்னை யில் நேற்று தொடங்கியது.

இந்த மாநாடு ‘இணைய பாதுகாப்புக்கான போர்’ என்ற கருப்பொருளில் 6-ம் தேதி (இன்று) வரை நடத்தப்படுகிறது. மொத்தம் 250 பிரதிநிதிகள் பங்கேற்ற மாநாட்டில் 50-க்கும் மேற்பட்ட இணைய பாதுகாப்பு நிபுணர்கள் உரையாற்றுகின்றனர். தமிழக அரசின் தொழில் நுட்பத்துறை அமைச்சர் பழனி வேல் தியாகராஜன் மாநாட்டை காணொலி வாயிலாக தொடங்கி வைத்தார். செயலர் குமார் ஜெயந்த் முன்னிலை வகித்தார்.

திருச்சியிலிருந்து முதல் இன்டர்நேஷனல் ரோட்டரி இயக்குநர்…

இந்நிகழ்வில், அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசியதாவது: இணைய பாதுகாப்பு என்பது ஒரு தேசத்தின் பாதுகாப்பை உறுதிசெய்யும் நம்பிக்கையின் தூணாகும். தகவல் திருட்டு தொடர்பாக ஐபிஎம் நிறுவனம் 2024-ல் வெளியிட்ட அறிக்கையின்படி, உலகளவில் தகவல் திருட்டு மூலம் ரூ.42.36 கோடி வரை இழப்புகள் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. இது கடந்த ஆண்டை விட 10% அதிகம்.

இந்தியாவில் கடந்த 2023-ம் ஆண்டில் மட்டும் 7.9 கோடி சைபர் குற்றங்கள் பதிவாகியுள்ளன. உலகளவில் சைபர் குற்றங்கள் அதிகம் நடைபெறும் நாடுகளின் வரிசையில் இந்தியா மூன்றாம் இடத்தை பிடித்துள்ளது. டிஜிட்டல் மாற்றத்துக்கான பயணத்தை நோக்கிய நம் பயணத்தில், நம் நாடு சராசரியாக ரூ.19.48 கோடி இழப்பை தகவல் திருட்டின் மூலம் சந்தித்து வருகிறது.

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

தமிழகத்தில் 2024 ஜனவரி முதல் செப்டம்பர் வரை, இணையவழி நிதி மோசடி குற்றங்களின் மூலம் ரூ.1,100 கோடிக்கு மேல் பணம் பறிப்பு நடந்துள்ளது. இந்த இழப்புகள் இணைய பாதுகாப்பை நாம் மேலும் உறுதிப்படுத்த வேண்டும் என்பதை நமக்கு உணர்த்துகிறது.

இந்நிகழ்வில் இந்திய சைபர் பாதுகாப்பு சங்கத்தின் தலைவர், லெப்டினென்ட் ஜெனரல் ராஜேஷ் பந்த், கணினி வைரஸ் தடுப்புக்கான ஆசிய ஆராய்ச்சியாளர்கள் சங்கத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஜெ.கேசவர்த்தன், கேஸ் பர்ஸ்கை நிறுவனத்தின் ஆராய்ச்சிப் பிரிவு இயக்குநர் இகோர் குஸ்நெட்சோவ், வெரிஜான் தொலைத்தொடர்பு நிறுவனத்தின் முதன்மை இயக்குநர் மாணிக்கம் கண்ணையா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Leave A Reply

Your email address will not be published.