திருச்சி ஹோலி கிராஸ் கல்லூரியில் சர்வதேச மாநாடு
திருச்சி ஹோலி கிராஸ் கல்லூரியின் (தன்னாட்சி) வேதியியல் முதுகலை ஆராய்ச்சித் துறை மற்றும் தமிழ்நாடு திருவாரூர் மத்தியப் பல்கலைக்கழக பொருள் அறிவியல் துறையும் இணைந்து, தமிழ்நாடு மாநில அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கவுன்சில் (TNSCST) நிதியுதவியுடன் “பொருள் ஆராய்ச்சியின் எல்லைகள், பசுமையான எதிர்காலத்தை நோக்கிய கண்டுபிடிப்புகள் மற்றும் சவால்கள்” (FMRICGF-2024) என்ற தலைப்பில் இரண்டு நாள் சர்வதேச மாநாட்டை நவம்பர் 26 மற்றும் 27 நவம்பர் தேதிகளில் நடத்தியது.
உலகெங்கிலும் உள்ள ஆராய்ச்சியாளர்கள், வேதியியலாளர்கள் மற்றும் கல்வியாளர்கள் தங்கள் ஆராய்ச்சித் துறையில், தங்கள் ஆராய்ச்சி கண்டுபிடிப்புகள் மற்றும் மேம்பாட்டு நடவடிக்கைகளை முன்வைக்க ஒரு தளத்தை வழங்குவதே மாநாட்டின் நோக்கமாகும். தொடக்க விழாவுடன் நிகழ்ச்சி தொடங்கியது.
மாநாட்டு ஒருங்கிணைப்பாளர், வேதியியல் ஆராய்ச்சித்துறையின் தலைவர்மற்றும்இணைப் பேராசிரியை முனைவர். A. லீமாரோஸ்வரவேற்றார். காந்திகிராம கிராமியப் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு இயக்குநர் பேராசிரியர்முனைவர்.S.மீனாட்சி தொடக்க உரை நிகழ்த்தினார்.
மாநாட்டின் சிறப்பம்சங்களை திருவாரூர் தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழக தொழில்நுட்பப் பள்ளியின் பொருள் அறிவியல் துறை பேராசிரியர் மற்றும் டீன் முனைவர்K.சேதுராமன் விளக்கினார். காந்திகிராம கிராமியப் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு இயக்குநர் பேராசிரியர் முனைவர்.எஸ்.மீனாட்சி, விழாமலரைவெளியிடமுதல் பிரதியை கல்லூரிமுதல்வர்முனைவர்.அருட்சகோதரி.P.ராஜகுமாரி பெற்றுக்கொண்டார்.
ஹோலி கிராஸ்கல்லூரிசெயலர்முனைவர்.அருட்சகோதரி. சற்குனா, கல்லூரி முதல்வர் முனைவர் அருட்சகோதரி.P.ராஜகுமாரி, மற்றும் திருவாரூர் மத்திய பல்கலைக்கழக இணை பேராசிரியர் மற்றும் தலைவர் முனைவர். S. பீர் முகமது, வாழ்த்துரை வழங்கினர்.முனைவர்.L. கேத்ரின். வேதியியல் துறை உதவிப் பேராசிரியர் நன்றி கூறினார்.தொடக்க விழாவைத் தொடர்ந்து ஐந்து தொழில்நுட்ப அமர்வுகள் நடைபெற்றன.
இரண்டாவது நாள் நான்கு தொழில்நுட்ப அமர்வுகள் நடைபெற்றன. புதுச்சேரி நானோ அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையத்தின் பேராசிரியர் முனைவர்.P.தங்கதுரை நிறைவுரையாற்றினார். மாநாட்டின் அறிக்கை அமைப்புச் செயலாளரும், வேதியியல் துறை உதவிப் பேராசிரியருமான முனைவர். J. ஃபெலிசிட்டா புளோரன்ஸ் அவர்களால் சமர்ப்பிக்கப்பட்டது.
இன்ஸ்டிடியூட் ஆப் கெமிக்கல் ரிசர்ச்- ஸ்பெயின்,டேலியன் யுனிவர்சிட்டி-சீனா,பசிலிகாட்டா பல்கலைக்கழகம்-இத்தாலி,கான்செப்சியன் பல்கலைக்கழகம்-சிலி, ஜாகிலோனியன் பல்கலைக்கழகம்- போலந்து,தேசிய தைபே தொழில்நுட்ப பல்கலைக்கழகம்-தைவான் போன்ற புகழ்பெற்ற நிறுவனங்களின் மாணவர்கள், ஆராய்ச்சி அறிஞர்கள் மற்றும் பேராசிரியர்கள் சர்வதேச மாநாட்டில் கலந்து கொண்டனர்.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
உலகம் முழுவதிலுமிருந்து ஏறக்குறைய 76 பங்கேற்பாளர்கள் மாநாட்டிற்கு பதிவு செய்தனர். 56 ஆய்வுகள்மெய்நிகர் மற்றும் நேரடிமுறைகளில் சமர்ப்பிக்கப்பட்டன. மாநாட்டின் ஒவ்வொரு அமர்விலும், தற்போதைய ஆராய்ச்சித் துறைகளில் சிறந்த ஆராய்ச்சி கண்டுபிடிப்புகள் மற்றும் முன்னேற்றங்கள் விவாதிக்கப்பட்டன.
ஆராய்ச்சிக்கான புதிய யோசனைகள் பங்கேற்பாளர்களை வளப்படுத்தியது. வேதியியல் மற்றும் இயற்பியல் அறிவியல் மற்றும் வெளிப்புற ஆராய்ச்சியின் முக்கிய பகுதிகள் பற்றிய உள்நோக்கங்களைப் பெற அவர்களுக்கு உதவியது. மொத்தத்தில், இரண்டு நாள் சர்வதேச மாநாடு, உயிரியல் பொருட்கள், கணக்கீட்டு பொருட்கள், தொழில்துறை பொருட்கள், நிலையான பொருட்கள், உருவகப்படுத்துதல், பண்பேற்றம் மற்றும் ஸ்மார்ட் பொருட்களின் கட்டுப்பாடு போன்ற பல்வேறு சமீபத்திய தற்போதைய ஆராய்ச்சித் துறைகளில் தற்போதைய உலகளாவிய ஆராய்ச்சிக்கு ஒரு நல்ல கண்ணோட்டத்தை வழங்கியது.