சீதாலக்ஷ்மி ராமஸ்வாமி கல்லூரியில் ”உலகத் தாய்மொழித் தின” கவிதை இயற்றுதல் மற்றும் வாசித்தல் போட்டி !
உலகத் தாய்மொழித் தினத்தை முன்னிட்டு தமிழ்த்துறை (சுயநிதிப்பிரிவு) செந்தமிழ் மன்றம் நடத்தும் கவிதை இயற்றுதல் மற்றும் வாசித்தல் போட்டி நிகழ்வறிக்கை.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
சீதாலக்ஷ்மி ராமஸ்வாமி கல்லூரி செந்தமிழ் மன்றம் தமிழ்த்துறை சுயநிதிப்பிரிவு உலகத் தாய்மொழி தினத்தை முன்னிட்டு “தாய்மொழி தாகம்” என்ற தலைப்பில் 30.01.2025 அகிலாண்டேஸ்வரி அரங்கத்தில் காலை 10.30 மணியளவில் கல்லூரி மாணவிகளுக்கிடையே கவிதை இயற்றுதல் மற்றும் வாசித்தல் போட்டி நடைபெற்றது.
அவரவர் தாய்மொழியைப் பெருமைப்படுத்தி தமிழ்மொழியில் எழுதுதல் வேண்டும் என்ற நோக்கில் இப்போட்டி நடைபெற்றது. தமிழ்த்துறை சுயநிதிப்பிரிவு உதவிப் பேராசிரியர் திருமதி கோ.கோகிலா வரவேற்புரை நல்க, முனைவர் எம். ஹேமலதா இணைப்பேராசிரியர், தாவரவியல் துறை அவர்கள் மற்றும் தமிழ்த்துறை தலைவர் முனைவர் து.புஷ்பவள்ளி அவர்களும் நடுவர்களாகப் பங்கேற்று சிறப்பு செய்தனர்.
இதில் அறுபதிற்கும் மேற்பட்ட பிற துறை மாணவிகள் கலந்து கொண்டனர். இப்போட்டியில் வை.மனஸ்வினி இரண்டாம் ஆண்டு வணிக நிர்வாகவியல் துறை மாணவி முதலிடமும், அ.அபிராமி முதலாம் ஆண்டு ஆண்டு உயிர் வேதியியல் துறை மாணவி இரண்டாம் இடத்தையும், சி.ரேவதி முதலாம் ஆண்டு வணிகவியல் துறை மாணவி மூன்றாம் இடத்தையும் பெற்றுள்ளார். தமிழ்த்துறை சுயநிதிப்பிரிவு உதவிப் பேராசிரியர் ர் முனைவர் கு.புஷ்பாவதி அவர்கள் நன்றி நவில விழா இனிதே நிறைவுற்றது.