”எனக்கு நல்லா தெரியும் என் பவர் என்கிட்ட இல்லவே இல்லை “ – பன்னாட்டு ரோட்டரி இயக்குநர் எம்.எம்.எம். முருகானந்தம் !

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

”எனக்கு நல்லா தெரியும் என் பவர் என்கிட்ட இல்லவே இல்லை “ – பன்னாட்டு ரோட்டரி இயக்குநர் எம்.எம்.எம். முருகானந்தம் ! ரோட்டரி சங்க பன்னாட்டு இயக்குனராக திருச்சி முருகானந்தம் இருப்பது தமிழர்களுக்கெல்லாம் பெருமை – அன்பில் மகேஷ் பொய்யாமொழி. 

உலக அளவில் இயங்கி வரும் ரோட்டரி சங்கங்களுக்கான பன்னாட்டு இயக்குனராக திருச்சியை சேர்ந்த எக்ஸெல் குழுமத்தின் எம்.முருகானந்தம் தேர்வாகியுள்ளத நிலையில், ரோட்டரி மாவட்டம் 3000 சார்பில் பாராட்டு விழா, மதுரை வேலம்மாள் ஐடாஸ் கட்டர் அரங்கில் நடைபெற்றது.

அஸ்வீன் சுவீட்ஸ் ஆர்டர் செய்ய..

ரோட்டரி சங்க பன்னாட்டு இயக்குனராக திருச்சி முருகானந்தம்
ரோட்டரி சங்க பன்னாட்டு இயக்குனராக திருச்சி முருகானந்தம்

இவ்விழாவில், மதுரை, திருச்சி, தேனி, திண்டுக்கல், அரியலூர், பெரம்பலூர், கரூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த ரோட்டரி 3000 சங்க உறுப்பினர்கள் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

அங்குசம் சேனல் வீடியோ பார்க்க...

இந்நிகழ்வில், ரோட்டரி மாவட்ட ஆளுநர் ஆர்.ஆனந்த ஜோதி தலைமை தாங்கினார். ரோட்டரி பன்னாட்டு முன்னாள் இயக்குனர் கரூர் பாஸ்கர் சொக்கலிங்கம், வருங்கால ஆளுநர்கள் ஆர்.ராஜா கோவிந்தசாமி, பெரம்பலூர் கார்த்திக், திருச்சி ஆர்.சுப்பிரமணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு வாழ்த்தினர்.

இந்நிகழ்வில் பங்கேற்பதாக இருந்த நிலையில், தவிர்க்கவியலாத காரணங்களால் கலந்துகொள்ள முடியாத சூழலில் காணொளி வழியே வாழ்த்திப் பேசிய பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, “ரோட்டரி சங்கம் உலகம் முழுவதும் சிறப்பான சேவைகளை செய்து வருகிறது. சமூக சேவையை பிரதான நோக்கமாகக் கொண்டு பல்வேறு பணிகளை செய்து வருகிறார்கள். ‘சமூக மாற்றம் ஏற்பட வேண்டுமெனில் கல்விதான் அதற்கு ஆகச் சிறந்த ஒரே வழி.!’ கல்வி சார்ந்து பள்ளிகளுக்கு பல்வேறு நலப் பணிகளை ரோட்டரி சங்கம் சிறப்பாக செய்து வருகிறது.

ரோட்டரி சங்க பன்னாட்டு இயக்குனராக திருச்சி முருகானந்தம்
ரோட்டரி சங்க பன்னாட்டு இயக்குனராக திருச்சி முருகானந்தம்

உலக அளவில் இயங்கும் ரோட்டரி சங்கத்திற்கு, இந்தியாவில் மட்டும் சுமார் ஒன்றரை லட்சம் உறுப்பினர்கள் உள்ளனர். இத்தகைய சூழலில், ரோட்டரி சங்க பன்னாட்டு இயக்குனராக தமிழரான திருச்சியைச் சேர்ந்த முருகானந்தம் இருப்பது தமிழர்களுக்கெல்லாம் பெருமை ” என்று வாழ்த்திப் பேசினார்.

நிறைவாக ஏற்புரை நிகழ்த்திய, எம்.எம்.எம். முருகானந்தம்,

“ 1992 இலிருந்து 2024 வரையில் ரோட்டரியனாக உங்களுடன் பிணைப்பு இருக்கிறது. நான் எப்போதும் முக்கோண தலைமை (triangle leadership ) என்று சொல்வேன். ஒரு மனிதனுக்கு மூன்று பக்கள் உண்டு. தனிப்பட்ட தலைமை (personal leadership), தொழில்முறை தலைமை (professional leadership), சமூக தலைமை (social leadership). இந்த மூன்று லீடர்ஷிப் எல்லோருக்கும் வந்துவிடுமா என்றால் கிடையாது. என்னால் ஒருவிசயத்தை தைரியமாக சொல்லமுடியும். எந்த ஒரு மனிதன் தனக்கு பிடித்த ஒரு விசயத்தை தொடர்ச்சியாக செய்கிறானோ? அவன் சாதிக்க முடியும்.

ரோட்டரி சங்க பன்னாட்டு இயக்குனராக திருச்சி முருகானந்தம்
ரோட்டரி சங்க பன்னாட்டு இயக்குனராக திருச்சி முருகானந்தம்

சிலநேரம், அரசியலுக்கு சென்றுவிடலாம் என்று எண்ணியதுண்டு. அரசியல் மீது எப்போதும் கோபம் உண்டு. காந்திக்குப்பிறகு, கலாமுக்கு பிறகு, காமராஜருக்கு பிறகு நல்ல மனிதர்களை பார்க்க முடிவதில்லை. அந்த நேரத்தில் ரோட்டரிக்கு இழுத்து வந்தது சந்திரசேகரன் சார்.

எப்பொழுதெல்லாம் குடும்பத்தை பார்க்கிறீர்களோ? எப்பொழுதெல்லாம் உங்கள் தொழிலை பார்க்கிறீர்களோ? அப்பொழுதெல்லாம் வளர்ந்து கொண்டிருக்கிறீர்கள் என்று பொருள். ரோட்டோரினாக இருந்தாலும் குடும்பத்தையும் தொழிலையும் பார்த்தாக வேண்டும்.

அமைச்சா் அன்பில்  வாழ்த்து
அமைச்சா் அன்பில் வாழ்த்து

அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஏன் உங்கள் அரங்கத்திற்கு வருகிறார் என்ற கேள்வி எழுப்புகிறார்கள். நாங்கள் இருவரும் ஒரே ஊர். அடிக்கடி பிளைட்டில் பார்ப்போம். என்ன பிரதர் என்பார். நானும் பிரதர் என்பேன். அவரும் நானும் எதிர்த்து நின்றோம் திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதியில். இப்போது நெருங்கிய நண்பர்களாக இருக்கிறோம்.

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

ஜனவரியில் ஜெயிச்சபிறகு, எங்கேயோ பார்த்திருக்கிறார். பிளைட்ல போகும்போது, பிரதர் ஒரு டவுட் என்றார். சொல்லுங்கள் பிரதர் என்றேன். நான் உங்களுக்கு பாராட்டு விழா நடத்தலாமா? என்றார். கலையரங்கத்தில் நடத்திவிடுவோம் சூப்பரா என்றார். இந்த மனசு எல்லோருக்கும் வரும் என்று நினைக்கிறீர்களா? அவர் இன்றைக்கு வந்திருக்க வேண்டும். விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பணி காரணமாக அவர் வரவில்லை.

எப்பொழுதுமே நாம் ஒரு இலக்கை நோக்கி சென்று கொண்டே இருக்க வேண்டும். உங்களுக்கு இரண்டு ஆப்சன் இருக்கிறது. ஓடும் நதியாக … அல்லது தேங்கும் குட்டையாக … இரண்டில் எதுவாக இருக்கப் போகிறீர்கள்? என்பதை முதலில் முடிவு செய்யுங்கள். ஒருமுறை முடிவு செய்தபிறகு எதற்காகவும் கவலைப்படக்கூடாது.

பல கட்டங்களை, தொடர் முயற்சிகளையடுத்துதான் இந்த இடத்திற்கு வந்திருக்கிறேன். ஒரு எலக்சன் பிராசஸ் இண்டர்வியூ. ஒரு எலக்சன் பிராசஸ் டெமாக்ரசி. மூன்றாவது லீகல் பாட்டர்ன் பிராசஸ். இதையெல்லாம் தாண்டி வரும்போது கொஞ்சம் சோர்வடைய வாய்ப்பிருக்கிறது. ஆனால், என்னை பொறுத்தவரை என்னை இன்னும் ஸ்டாராங்க் ஆக்குவதற்கான வாய்ப்பாகத்தான் பார்த்தேன்.

ரோட்டரி சங்க பன்னாட்டு இயக்குனராக திருச்சி முருகானந்தம்
ரோட்டரி சங்க பன்னாட்டு இயக்குனராக திருச்சி முருகானந்தம்

எலக்சன் வந்த பிறகு, யார் யாருடன் சேர்வார்கள் என்றே தெரியாது. ஏ-க்கு பி-பிரண்ட். சி-க்கு டி பிரண்ட்னு சொன்னா கூட பரவாயில்லை. ஏ-க்கு இசட்- பிரண்ட் ஆயிடுவான். ஒன்றும் புரியாது. எலக்சன் என்ற ஒரு பிராசஸ்தான் உங்களையும் அடுத்தவர்களையும் பிரிக்க வாய்ப்பு இருக்கிறது. உங்கள் சங்கத்தை இரண்டாக பிரிக்க வாய்ப்பிருக்கிறது. உங்களுடைய நெடுநாள் நட்பை பிரிக்க வாய்ப்பிருக்கிறது. ஏதாவது வாய்ப்பிருந்தால், எந்த ஒரு சூழ்நிலையிலும் எலக்சன் இல்லாதிருக்க முயற்சி செய்யுங்கள்.

அர்ஜூனனும் கிருஷ்ணரையும் பற்றி தெரியும். மேலே செல்லும் ஒருவன் வெற்றிலை போட்டு துப்பிவிடுகிறான். கீழே உள்ள முனிவன் மேல் பட்டுவிடுகிறது. முனிவர் கொஞ்சம் அமைதியானவர். மேலே போகிறவன் தெரியாமல் செய்துவிட்டான் போல என நினைக்கிறார். ஆனால், அவன் சிரிச்சிகிட்டே போகிறான். அப்போ முடிவு பன்னிட்டார், வேண்டுமென்றேதான் செய்கிறான் என்று. நேரே கிருஷ்ணர்கிட்ட போறாரு. அவன் தலையை கொய்து கொடு என்கிறார். இதுதான் என் கட்டளை என்கிறார். கேட்டது முனிவர். கண்டிப்பாக செய்கிறேன் என்கிறார் கிருஷ்ணர்.

நாம எப்படி யாரு யாருக்கு ஓட்டு போடுவாங்கனு தெரியற மாதிரி, இந்த விசயம் மேல இருந்தவருக்கு தெரிந்துவிடுகிறது. அவன் நேரே போய் அர்ஜுனனிடம் நின்றுவிடுகிறான். எந்த நிபந்தனையுமற்ற சரணாகதியடைகிறேன் என்கிறான். என்னை எப்படியாவது காப்பாற்று என்கிறான். பலபேரு நம்மகிட்ட ஓட்டு கேட்டு வரும்போது சரணாகதி என்ற வார்த்தையை கேட்டால் மாறிவிடுவோம். இனி அப்படியெல்லாம் மாறிவிடாதீர்கள்.

சராணகதியடைந்தபிறகு, அர்ஜூனன் சொல்கிறான். யாராக இருந்தாலும் உனக்காக நான் போரிட்டு ஜெயிப்பேன் என்கிறான். போருக்கு போன பிறகுதான் தெரிகிறது. அர்ஜூனனும் கிருஷ்ணனும் எதிர் எதிரில் நிற்கிறார்கள். இரண்டு பேரும் நண்பர்கள். இதுதான் சார் பல மாவட்டங்களில் நடக்கக்கூடிய எலக்சன் வரிசைக்கிரமம் (sequence). இந்த எலக்சன் வரிசைக்கிரமத்தை நீங்க டச் பன்னிட்டீங்கன்னா. நீங்க ஜெயிச்சரலாம் சார். அங்கே ஒரு தருமன் இருந்தான். போரை நிறுத்தினான். இங்கே எந்த தருமன் வருவான் தெரியல. இது காட்சி ஒன்று.

காட்சி இரண்டில், எப்போதும் நமக்கு எண்ணம் இருக்கும் தெரியுங்களா? நான் மிகப்பெரியவன் என்றிருக்கும். நான் எப்போதும் சொல்வேன். நான் எங்கும் எப்போதும் சுப்ரீம் சர்வெண்ட்தான். நான் எங்கும் சர்வெண்ட் என்ற எண்ணத்தில்தான் செல்கிறேன். நான் இல்லை என்கிற எண்ணம் வேண்டும். அர்ஜூனனுக்கு எப்போதும் பெரிய தைரியம் உண்டு. காண்டீபத்தை கையில் வைத்திருப்பதில் இருந்து என்ன சொல்வான் என்றால், நான் இந்த உலகத்தை வெல்லக்கூடியவன் என்ற எண்ணம் எப்போதும் இருக்கும்.

நேரா போறான். ஒரு குரங்கு உட்கார்ந்திருக்கு. குரங்கின்கூட அனுமன் இருக்கிறார். இராமர் வில்லை விட்டிருந்தால் அவரே பாலத்தை கட்டி முடித்திருப்பாரே. நீ ஏன் கஷ்டப்பட்டு கட்டுனே என்கிறார். அனுமருக்கு கோபம் வந்துவிட்டது. நீ வேண்டுமானால், வில்லை விடு. நான் குதித்து உடைத்து காட்டுகிறேன் என்கிறது. அர்ஜூனனுக்கு கோபம் வந்துவிடுகிறது. யாரைப்பார்த்து என்ன சொல்கிற? என வில்லை எடுக்கிறான். வில்லை எடுத்து கடலில் விடுகிறான். அழகான பாலம் கட்டப்பட்டது. அங்கே அனுமன் ரெடி ஆகிறான்.

குதிப்பதற்கு முன்பாக, ராமா உன்னை நம்பி குதிக்கிறேன். என்னை காப்பாற்றிவிடு என்கிறான். பாலத்தில் குதிக்கிறான். பாலம் சுக்கு நூறாக உடைகிறது. இங்கே அர்ஜூனன் மொத்தமாக உடைந்துவிடுகிறான். அர்ஜூனன் தோற்கிறான். அர்ஜூனனுக்கு ரொம்ப வருத்தம். நான்தானே இந்த இடத்தில் மிகப்பெரிய ஆளாக இருக்க முடியும். எப்படி? தோற்க முடியும்? எப்படி, அனுமன் ஜெயிக்க முடியும்?

ரோட்டரி சங்க பன்னாட்டு இயக்குனராக திருச்சி முருகானந்தம்
ரோட்டரி சங்க பன்னாட்டு இயக்குனராக திருச்சி முருகானந்தம்

அந்த நேரத்தில் அங்கே அந்தணன் கிராஸ் செய்கிறான். நீங்க ரெண்டு பேரும் நடத்தின போட்டியில நடுவர் இல்லாமல் நடத்திவிட்டீர்கள். திருப்பி நடத்துங்கள் என்கிறான். திருப்பியும் தோற்கனுமானு அர்ஜூனன் யோசிக்கிறான். அந்தணன் சொல்கிறான் திருப்பியும் நீ வில்லை விடு என்கிறான். வில்லை விடுவதற்கு முன்பு கிருஷ்ணா என்னை காப்பாற்று என்று வேண்டி வில்லை விடுகிறான். பாலம் கட்டப்படுகிறது. அனுமன் குதிச்சாருல முதல்தடவ. நான்தான் முதல் தடவயே ஜெயிச்சேனேனு மீண்டும் குதிக்கிறாரு. பாலம் உடையல. முதல்முறை அனுமன் ஜெயிக்கிறான். அர்ஜூனன் தோற்கிறான். இரண்டாவது முறை அர்ஜூனன் ஜெயிக்கிறான். அனுமன் தோற்கிறான்.

உன்னுடைய பவர் உன்னிடம் இல்லை. அனுமன் ராமனை வேண்டினான் அர்ஜூனன் தோற்றான். அர்ஜூனன் கிருஷ்ணரை வேண்டினான் அனுமன் தோற்றான். எனக்கு நல்லா தெரியும். என் பவர் என்கிட்ட இல்லவே இல்லை. உங்களிடம் தான் இந்த பவர் இருக்கிறது என்று நல்லாவே தெரியும். பலபேருக்கு இது புரியனும்.

இந்த உலகம் அமைதியாக இருக்க வேண்டுமென்றால், தாயும் சேயும் நலமாக இருக்க வேண்டும். சுகாதாரம் கிடைக்க வேண்டும். நல்ல தண்ணீர் கிடைக்க வேண்டும். நல்ல கல்வி கிடைக்க வேண்டும். நல்ல பொருளாதாரம் இருக்க வேண்டும். அமைதி இவையனைத்தோடும் இணைந்திருக்கிறது. ” என்பதாக பேசினார் எம்.எம்.எம். முருகானந்தம்.

– மித்ரன்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

Leave A Reply

Your email address will not be published.