கட்சிக்காரர்கள் தந்த வெற்றியும் ! அதிகாரிகள் பறித்த குழியும் !

0

அடிமட்டக் கட்சிக்காரர்கள் தந்த வெற்றியும்! அதிகாரிகள் பறித்த குழியும்! மூன்றாண்டு கால தி.மு.க ஆட்சியின் தொடர் சாதனைகள் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்நாடு-புதுச்சேரி மாநிலங்களில் அந்தக் கூட்டணிக்கு முழுமையான வெற்றியைப் பெற்றுத் தந்தன. ஆட்சி நிர்வாகத்தில் சில குறைகள், தவறுகள் நேர்ந்தபோதெல்லாம் (வேங்கைவயல், கள்ளக்குறிச்சி பள்ளி எரிப்பு, சென்னை-தென்மாவட்ட வெள்ள பாதிப்பு உள்ளிட்டவை) முதலமைச்சர் உள்ளிட்ட ஒட்டுமொத்த அமைச்சர்களும் அதற்கானப் பொறுப்பேற்றுக் கொண்டு செயல்பட்டதால் மகக்ளிடம் நம்பிக்கை ஏற்பட்டது.

மக்களுடன் நெருங்கிய தி.மு.க அமைச்சர்கள் மற்றும் மாவட்டச் செயலாளர்கள் உள்ளிட்ட நிர்வாகிகள் சொந்தக் கட்சிக்காரர்களை விலக்கியே வைத்திருக்கிறார்கள் என்ற குமுறல் மூன்றாண்டுகளாக ஒலித்துக் கொண்டே இருப்பதைக் கேட்க முடிகிறது.

https://businesstrichy.com/the-royal-mahal/

ஆட்சிப்பொறுப்பேற்பதற்கு முன்னரே, அம்மா உணவம் போர்டை தாக்கிய தி.மு.க.வினர் மீது நடவடிக்கைக்கு உத்தரவிட்ட தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினின் நடுநிலை நியாயங்களும், எதிர்க்கட்சியினர் பரிந்துரைகளுக்கு செவிசாய்க்கும் முதலமைச்சரின் நாகரீக அரசியலும் தி.மு.க. தொண்டர்களைக் குமுற வைத்தது.

பழைய அதிகாரிகளே எல்லா இடங்களிலும் இருக்கிறார்கள். அவர்களிடம் அ.தி.மு.க.வினர் காரியம் சாதித்துக் கொள்கிறார்கள். போலீஸ் ஸ்டேஷன் உள்பட பல இடங்களிலும் எங்களை மதிப்பதில்லை-பா.ஜ.க.காரர்கள் போலீஸை ஆட்டிவைக்கிறார்கள். பத்தாண்டுகாலத்திற்குப் பிறகு ஆட்சிக்கு வர உழைத்த எங்களுக்கு எந்தப் பயனும் இல்லை என்பதே தி.மு.க தொண்டர்களுடைய குமுறலின் உள்ளீடாக இருந்து வருகிறது.

பல் கட்டும் சிகிச்சையில் நவீனம் காட்டும் KM DENTAL CLINIC

இந்தக் குமுறல்கள் மூன்றாண்டுகளாகத் தொடர்ந்தபோதும், நாற்பதும் நமதே-நாடும் நமதே என்ற முழக்கத்துடன் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னெடுத்த 2024 நாடாளுமன்றத் தேர்தல் வியூகம் முழுமையான வெற்றியைப் பெற்றதற்கு காரணம், தி.மு.க.வின் அடிமட்டத் தொண்டர்கள் உள்ளிட்ட அனைவரும் தங்கள் தலைவரின் கட்டளைக்கேற்ப களப்பணியாற்றியதுதான்.

40 தொகுதிகளில் 21ல்தான் தி.மு.க நேரடியாகப் போட்டியிட்டது. மற்றவையெல்லாம் கூட்டணிக் கட்சிகளுக்கு என்ற போதும் எல்லாத் தொகுதிகளிலும் தி.மு.க. தொண்டர்கள் சளைக்காமல் உழைத்தனர். முழுமையான வெற்றி பெற்றால்தான், தி.மு.க ஆட்சிக்கு மத்திய அரசாங்கத்தில் செல்வாக்கு இருக்கும், தமிழ்நாட்டிற்கான நிதி கிடைக்கும், இன்னும் பல திட்டங்கள் வரும், தங்கள் பக்கமும் தலைமையின் பார்வை திரும்பும் என்பதே தொண்டர்களின் உழைப்பின் சாரமாக இருந்தது. நாற்பது தொகுதிகளிலும் வெற்றி கனிந்தது.

மூன்றாண்டுகாலமாக கோட்டை முதல் ஊராட்சிகள் வரை ராஜ்ஜியம் நடத்தி வரும் அதிகாரிகளோ, தங்களுக்கு முதலமைச்சர் கொடுத்த சுதந்திரத்திற்கு உண்மையாகவோ நேர்மையாகவோ இல்லை. ஐ.ஏ.எஸ்-ஐ.பி.எஸ். அதிகாரிகளின் குடுமி, மத்திய அரசின் பிடியில் இருப்பதால் அதற்கேற்ப ஆடக்கூடியவர்களாக இருக்கிறார்கள். அநேகம் பேர் சங்கிகளாகவே செயல்படுகிறார்கள். அமைச்சர்கள் பலரிடமிருந்தும்கூட இந்த வேதனை வெளிப்படுகிறது.

அந்தளவுக்கு அதிகாரம் படைத்த அதிகாரிகள், அதிலும் குறிப்பாக முதல்வரின் நேரடிப் பார்வையில் உள்ள காவல்துறையின் அதிகாரிகளின் செயல்பாடு மக்கள் நலனில் அக்கறை கொண்டதாக இல்லை என்பதோடு, தி.மு.க. ஆட்சிக்குத் திட்டமிட்டே கெட்ட பெயரை உண்டாக்குகிறார்களோ என்று அடிமட்டத் தொண்டர்கள் சந்தேகப்படும் அளவுக்கு உள்ளது.

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

traffic police
traffic police

கடந்த இரண்டு வருஷமாக டிராபிக் போலீஸின் கெடுபிடி மிக அதிகம். சென்னையைச் சேர்ந்த தி.மு.க பகுதிச் செயலாளரின் உறவினரின் டூவீலரை டிராபிக் போலீஸ் மடக்கி தாறுமாறாக ஃபைன் போடுகிறது. பகுதிச் செயலாளர் போன் செய்து, கெஞ்சிக் கேட்டும் விடவில்லை. கட்சி பாகுபாடில்லாமல் செயல்படுவதாகக் காட்டிக்கொண்ட காவல்துறையின் பிடியில் அதிகம் சிக்கியவை தி.மு.க. கொடி போட்ட வாகனங்கள்தான். பா.ஜ.க. கொடியோ, அ.தி.மு.க கொடியோ இருந்தால் சல்யூட் அடிக்காத குறையாக மரியாதை கொடுத்து அனுப்புவது போலீசின் வேலையாக இருக்கிறது எனக் குமுறுகிறார்கள் தி.மு.க நிர்வாகிகள்.

டிராபிக் ரூல்ஸில் இவ்வளவு கறாராக இருந்த காவல்துறை, கள்ளச்சாராய விவகாரத்தில் படு அலட்சியமாக இருந்தது ஏன் என்று தி.மு.கவினரே கேள்வி கேட்கும் அளவுக்கு நிலைமை உருவாகியுள்ளது. கடந்த வருஷம் மரக்காணத்தில் கள்ளச்சாராயச் சாவுகள் நடந்த நிலையில், பக்கத்து மாவட்டத்தில் இந்த வருஷம் மிகக் கொடுமையான கள்ளச்சாராய உயிரிழப்புகள் என்றால் காவல்துறை எவ்வளவு மோசமான நிர்வாகத் திறனுடன் இருக்கிறது என்பதையே காட்டுகிறது.

கள்ளக்குறிச்சி
கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி கருணாபுரம் என்பது காட்டுக்குள்ளோ மலைப்பகுதியிலோ இல்லை. நகரத்தை ஒட்டிய பகுதிதான். காவல்நிலையமும் பக்கத்தில்தான் உள்ளது. காய்ச்சியவர்கள் அரசியல் செல்வாக்குடன் இருப்பவர்கள் என்றால் நேரடி நடவடிக்கை எடுக்க முடியாவிட்டாலும், உளவுத்துறை மூலமாக முழுமையான ரிப்போர்ட் அனுப்பியிருக்க முடியும். மக்கள் நலன் மீது எந்த அக்கறையும் காட்டாமல் காவல்துறை செயல்பட்டிருப்பது அப்பட்டமாகத் தெரியவந்துள்ளது.

தி.மு.க. கூட்டணி நாடாளுமன்றத் தேர்தலில் பெரும் வெற்றி பெற்றுள்ள நிலையில், சட்டமன்றம் கூடும் நாளில், மேஜையைத் தட்டி முதலமைச்சரை வரவேற்க ஆளுங்கட்சி உறுப்பினர்கள் எதிர்பார்த்திருந்த நேரத்தில், எல்லாரையும் இரங்கல் தீர்மானத்திற்கு எழுந்திருக்க வைத்து, அமைதியாக நிற்கச் செய்யும் நிலை ஏற்பட்டது இயல்பானதா, திட்டமிட்ட சதியா என்ற கேள்வியும் தி.மு.க தொண்டர்களிடம் வெளிப்படுகிறது.

மூன்றாண்டுகளில் எந்தப் பலனும் கிடைக்கவில்லை என்று குமுறியபோதும் தி.மு.க தொண்டர்கள் தன் தலைவரின் கட்டளையை ஏற்று 40 தொகுதிகளில் வெற்றியைப் பெற்றுத் தந்தனர். ஆட்சி அதிகாரத்தை முழுமையாக அனுபவிக்கும் அதிகாரிகள் கூட்டமோ தனது அலட்சியத்தால் 40க்கும் மேற்பட்ட உயிர்கள் சாவதற்கு காரணமாக இருந்திருக்கிறது. கோட்டையைப் பிடித்து விட்டோம் என்று வெடி வெடித்துக் கொண்டாடுபவன்தான் தி.மு.க. கட்சிக்காரன். கோட்டைக்கே வெடி வைக்கும் வேலையைச் செய்யக்கூடியதாக இருக்கிறது தி.மு.க. அரசின் அதிகாரிகள் ராஜ்ஜியம்.

-சிறகு

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

Leave A Reply

Your email address will not be published.