அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

கிழக்கிந்திய கம்பெனியாரின் கப்பலில் ஏறிய கிரிக்கெட்… ! – IPLக்கு முன்பு(ம்) கிரிக்கெட் இருந்தது

திருச்சியில் அடகு நகையை விற்க

“ஹோம் கிரவுண்டு, அதனாலதான் ஈடன் கார்டன் ஸ்டேடியத்தில் சன் ரைசர்ஸை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஜெயிச்சிடிச்சி” காலையில் ஒரு ரசிகர் கவலையோடு சொல்லிக் கொண்டிருந்தார்.

“டேய்.. சி.எஸ்.கே.. ஹோம் கிரவுண்டுலயா இப்படி கேவலமா ஆடுவீங்க ? சேப்பாக்கம் ஸ்டேடியத் தில் ஆர்.சி.பி.யிடம் பரிதாபமாக திணறிக் கொண்டிருந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ரசிகர் ஒருவர் சமூகவலைத்தளத்தில் தன் கோபத்தை பதிவிட்டிருந்தார்.

இந்த வார JANUARY 15 - 21 அங்குசம் இதழில்…2026 ANGUSAM WEEKLY BOOK

ஐ.பி.எல். போட்டியில் ஓர் அணிக்காக ஆடக்கூடியவர்களில் எத்தனை பேருக்கு அந்த அணியின் சொந்த ஊர் மைதானம், ஹோம் கிரவுண்டாக இருக்க முடியும்? தோனிக்கு சென்னை சொந்த ஊரா? சி.எஸ்.கே.வில் தமிழ்நாட்டு மை விளையாட்டு வீரர்கள் எத்தனை பேர் இருக்கிறார்கள்? உண்மை தெரிந்திருந்தாலும், ரசிகர்களுக்கு எந்தவொரு அணியையாவது பிடித்துவிட்டால், ட்டால், அதைத் தங்கள் சொத்த அணியாக நினைப்பதும், அந்த அணி எந்த பெயரில் இருக்கிறதோ, அத்த மாநிலத்தின் கிரவுண்டில் விளையாடும்போது, அணியில் ஏலம் எடுக்கப்பட்ட அத்தனை ஆட்டக்காரர்களும் ஹோம் இரவுண்டில் விளையாடுவது போல நினைத்துக் கொள்வதும் ஐ.பி.எல். ரசிகர்களுக்குப் பழகிப்போய்விட்டது.

தோனியே தனது சொந்த மாநிலம் எது என்பதை மறந்துபோகக்கூடிய அளவுக்கு அவரை மஞ்சள் தமிழராகக் கொண்டாடுகிறார்கள் சி.எஸ்.கே. ரசிகர்கள். அதுபோலத்தான் மற்ற அணிகளின் ரசிகர்களும் அவரவர் உமை நினைக்கிறார்கள். இதுதான் அதைக் கிரிக்கெட்டில்ஓர் உத்தியாகக் கையாளும் வழக்கம், ஐ.பி.எல்.லில் மட்டு மல்ல, 18 ஆம் நூற்றாண்டில் இங்கிலாந்தில் பிரபலமான கவுன்ட்டி மேட்ச்களிலேயே தொடங்கிவிட்டது.

Celebrating Thangamayil’s 34th Anniversary | Dec 25th to Jan 1st | Thangamayil Jewellery Limited

கிரிக்கெட்பிரபுக்களும் பிசினஸ் மேன்களும் தங்களுடைய அணியில் விளையாடுவதற்காக பிற பகுதிகளில் இருந்து ஆட்டக்காரர்களைத் தேடிப் பிடித்தனர். விளையாட்டுப் போட்டிகள் இல்லாத நாட்களில் தங்களுடைய நிர்வாகத்தில் அவர்களுக்கு வேலைகளைக் கொடுத்தனர். ரிச்மன்ட் பிரபு தன்னுடைய குட்வுட் எஸ்டேட்டில் குதிரைகளை பராமரிக்கும் வேலையை தாமஸ் வேமார்க்கிற்குச் கொடுத்திருந்தார். கிரிக்கெட் போட்டிகள் நடைபெறும் நாட்களில் பண்ணையிலிருந்து மைதானத்திற்கு அவரை அழைத்துச் சென்று விடுவார்.

கிரிக்கெட் ஆட்டம் மெல்ல மெல்ல வரையறைகளையும் விதிமுறைகளையும் உருவாக்கிக் கொண்டிருந்தது. 11 பேர் கொண்ட டீம் என்பது பொதுவான மேட்சாக இருந்தாலும், சிங்கிள் விக்கெட், டபுள் விக்கெட் போன்ற ஆட்டங்களையும் நடத்தி பெட்டிங் வைப்பது பிரபுக்களுக்கும் பிசினஸ்காரர்களுக்கும் வழக்கமாக இருந்தது. சிங்கிள் விக்கெட் என்றால் ஒருவர் பேட் செய்வார். மற்றொருவர் பந்து வீசுவார். இத்தனை பந்துகள் எனக் கணக்கு இருக்கும். அதற்குள் அவுட் ஆவது,ரன் எடுப்பது இவற்றைப் பொறுத்து. எதிர் ஆட்டக்காரர் ஆடுவார்.

2026 - அங்குசம் தேர்தல் களம் - வீடியோ பார்க்க

ஃபீல்டிங்கிற்காக சிலரை நிறுத்தி வைத்திருப்பார்கள். போட்டி என்பது இரண்டு பேருக்கிடையில்தான். வெற்றி பெறுகிறார்களோ அதனடிப்படையில் பெட்டிங்பணம் பகிர்ந்தளிக்கப்படும். இதுபோல ஒரு அவணிக்கு தலா இரண்டு பேர் என்று விளையாடுவது டபுள் விக்கெட் நல்ல திறமையான ஆட்டக்காரர்கள் கிடைத்தால் 5 விக்கெட் மேட்ச் கூட நடக்கும். விளையாடுகிறவர்களுக்கு கொடுத்ததுபோக, போட்டியை நடத்துபவர்களுக்குநல்ல லாபம் கிடைக்கும்.

கிரிக்கெட்தாமஸ் வேமார்க் பண்ணையில் குதிரைகளைப் பராமரித்தார். அவரை ரிச்மண்ட் பிரபு கிரிக்கெட் கிரவுண்டுக்கு ஏற்ப தன்றாகப் பராமரித்தார். அவர்தானே பிரபுக்கு ரேஸ் குதிரை ! பிரபுவுக்காக ஆடியவர் அப்படியே கேஜ்XT அணிக்காக ஆடத்தொடங்கி, இங்கிலாந்து XI அணி வரை தாமஸ் இங்கிலாந்த வேமார்க் விளையாடியிருக்கிறார்.

லண்டன் அணிக்கும் சிலின்டன் அணிக்கும் ராணுவ கிரவுண்டில் நடந்த போட்டியில் அவர் மிலண்டன் அணிக்காக விளையாடினார். 1744 ஜூன் 18 ஆம் நான் இங்கிலாந்து அணிக்காக வேமார்க் அதே ராணுவ கிரவுண்டில்கெண்ட் அணியைஎதிர்த்து அவர் ஆடியபோது,கென்ட் அணிக்கு மூன்று ரன்கள் தேவைப்பட்டன.

ஒரு விக்கெட் மட்டுமே மிச்சம் என்ற பரபரப்பான கட்டம். தாமஸ் வேபார்க்தன் கைக்கு வந்த கேட்ச்சை தவறவிட்டதால் கென்ட் அணி வெற்றி பெற்றது. அந்த ஒரு பாலை அவர் தவறவிட்டதன் மூலம், ரிச்மன்ட் பிரபு கொடுத்த பால் எல்லாம் ரத்தமாகப் போய்க் கொண்டிருந்தது.

கண்ணிமைக்கும் நொடியில், ஆட்டத்தின் போக்கையே மாற்றிவிடும் நிகழ்வுகள் கிரிக்கெட்டில் சகஜம். அதுதான் அந்த விளையாட்டின் உயிர்ப்பு.

இங்கிலாந்து உலகின் பல நாடுகளில் ஆட்சியை நிறுவிக் கொண்டிருந்தது. அந்த நாடுகளில் கிரிக்கெட்டையும் விதைத்தது. கிழக்கிந்திய கம்பெனியாரின் கப்பலில் ஏறிய கிரிக்கெட் இந்திய கடற்கரையில் இறங்கியது.

(ஆட்டம் தொடரும்)

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Comments are closed, but trackbacks and pingbacks are open.