ஐ.பி.எஸ். அதிகாரிகள் அதிரடி மாற்றம் ! சதுரங்க வேட்டையும் ஆடுபுலி ஆட்டமும் !
ஐ.பி.எஸ். அதிகாரிகள் அதிரடி மாற்றம் ! சதுரங்க வேட்டையும் ஆடுபுலி ஆட்டமும் !
தமிழகத்தில் ஒரே நேரத்தில்அதிரடியாக 33 போலீஸ் உயர் அதிகாரிகள் மாற்றப்பட்டிருக்கும் விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த ஆண்டிலேயே, அடுத்தடுத்து இதே பாணியில் இடமாற்றம் செய்யப்படுவதன் பின்னணியில் வேறு ஏதேனும் விவகாரங்கள் இருக்கிறதா? வழக்கமான இடமாற்றங்கள்தானா? என்ற சந்தேகத்தை எழுப்பியிருக்கிறது.
குறிப்பாக, தற்போதைய இடமாற்றத்தில் துணை ஆணையர் பாண்டியராஜன், அதிவீரபாண்டியன் ஆகியோர் இடம்பெற்றிருக்கிறார்கள். அதிமுக மற்றும் பாஜக வோடு நெருக்கமாக இருக்கும் டெல்லியை சேர்ந்த பிரமுகர் ஒருவருடன் காட்டிய நெருக்கம்தான் காரணம் என்கிறார்கள்.
துணை ஆணையர் பாண்டியராஜனை பொருத்தவரையில், நிதி கையாடல் புகாரில் சிக்கிய திருமலா பால் மேலாளர் தற்கொலை விவகாரத்தை சொல்கிறார்கள். இதற்கு முன்னர் 2017 இல் திருப்பூர் ஏ.டி.எஸ்.பி.யாக இருந்த சமயத்தில் டாஸ்மாக் எதிர்ப்புப் போராட்டத்தில் பெண்களை அறைந்த விவகாரத்தில் சிக்கியவர் இதே பாண்டியராஜன்தான் என்கிறார்கள். மேலும், 2019 இல் கோவை எஸ்.பி.யாக இருந்த சமயத்தில் பொள்ளாச்சி பாலியல் வழக்கில் பாதிக்கப்பட்ட மாணவியின் பெயரை ஊடகங்களுக்கு அறிவித்த சர்ச்சையில் சிக்கியவரும் இவர்தான். இதனை தொடர்ந்து கரூரில் எஸ்.பி.யாக இருந்த சமயத்தில் சிவில் வழக்கு ஒன்றை வரம்பு மீறி அணுகிய சர்ச்சையில் சிக்கி ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டவர்.
இடமாறுதலுக்கு பின்னணியில் உள்ள விவகாரங்களை அலசுகிறது, அங்குசம் ஆடுகளம்.
முழுமையான வீடியோவை காண
— அங்குசம் சிறப்பு செய்தியாளர் குழு