மகேந்திரா ஃபிலிம் ஃபேக்டரி சார்பில் தயாராகிறது “இரவின் விழிகள்“

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

மகேந்திரா ஃபிலிம் ஃபேக்டரி சார்பில் மகேந்திரா தயாரித்து ஹீரோவாக நடிக்கும் படம் ‘இரவின் விழிகள்’. இப்படத்தில் வில்லனாக நடித்து படத்தையும் இயக்கியுள்ளார் சிக்கல் ராஜேஷ்.

கதாநாயகியாக நீமா ரே நடித்திருக்கிறார். இவர் கன்னடத்தில் வெளியான ‘பங்காரா’ என்கிற படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருது பெற்றவர்.

அஸ்வீன் சுவீட்ஸ் ஆர்டர் செய்ய..

‘இரவின் விழிகள்’மேலும் முக்கிய வேடங்களில்  நிழல்கள் ரவி, மஸ்காரா அஸ்மிதா, கும்தாஜ், சேரன் ராஜ், சிசர் மனோகர், ஈஸ்வர் சந்திரபாபு, கிளி இராமச்சந்திரன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

இந்தப் படம் சைக்கோ த்ரில்லர் ஜானரில் உருவாகியுள்ளது. ஒருவன் சைக்கோ ஆவதற்கு அவனுக்கென தனிப்பட்ட சொந்தக் காரணம் இருக்கும்.

அங்குசம் சேனல் வீடியோ பார்க்க...

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

‘இரவின் விழிகள்’இங்கே அப்படி ஒருவன் சைக்கோ ஆவதற்கு இந்த சமுதாயத்தின் மீதான ஒரு கோபமும் ஒரு பொது விஷயமும் காரணமாக இருக்கிறது. அது என்ன என்கிற வித்தியாசமான கதைக்களத்துடன்  ‘இரவின் விழிகள்’ வருகிறது.

படத்திற்கு ஏ.எம்.  அசார் இசையமைத்துள்ளார். பாஸ்கர் ஒளிப்பதிவை கவனிக்க ‘விடுதலை’ ஆர். ராமர் படத்தொகுப்பு.  சண்டைப் பயிற்சி: சரவெடி சரவணன் மற்றும் சூப்பர்குட் ஜீவா, நடனம்: எல்கே ஆண்டனி.

தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

படத்தின்  பெரும்பாலான படப்பிடிப்பு ஏற்காடு அருகில் உள்ள வெள்ளிமலை பகுதியிலும்  பாண்டிச்சேரி, மரக்காணம் அதைச் சுற்றி யுள்ள பகுதிகள் மற்றும் திருப்பூரிலும் நடைபெற்றுள்ளது. தற்போது போஸ்ட் புரொடக்சன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

 

— மதுரை மாறன்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

Leave A Reply

Your email address will not be published.