திருச்சி மேயர் பதவி கனவில் பா.ஜ.க.வில் சாருபாலா ஐக்கியமா?
திருச்சி மேயர் பதவி கனவில் பா.ஜ.க.வில் சாருபாலா ஐக்கியமா?
அதிமுகவிலிருந்து தினகரன் அமமுக கட்சி தொடங்கி தேர்தலில் தோல்வி அடைந்ததும் அதன் முக்கிய தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் பலர் பழையபடி அதிமுக, திமுகவிற்கு சென்றனர். இந்நிலையில் திருச்சியில் சாருபாலா அவர்கள் பாஜகவில் இணைவதாக செய்திகள் வந்தன.
இவர் கடந்த 2019 எம்.பி.தேர்தலில் அமமுக சார்பில் போட்டியிட்டு தோற்றவர். தற்போது தினகரனுக்கு செல்வாக்கு இல்லை என்பதால் வேறு கட்சிக்கு செல்லும் மனநிலையில் இருக்கிறார். ஏற்கனவே மேயர் பதவி மறைமுக வாக்கெடுப்பு முறையில் தேர்ந்தெடுக்கும் என அரசு அறிவித்துள்ளது. மேலும் திருச்சி மேயர் பதவி பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
கடந்த 2001ம் ஆண்டு நடந்த உள்ளாட்சி தேர்தலில் அதிமுக கூட்டணியில் த.ம.கா சார்பில் போட்டியிட்டு தான் சாருபாலா வெற்றிபெற்று திருச்சி மேயரானார். அதுபோல இம்முறையும் அதிமுக கூட்டணியில் உள்ள பா.ஜ.க.வுடன் இணைந்து மேயராக போட்டியிட்டு மேயராக வெற்றிபெற முடியும் என சிலர் ஆசை காட்டியதால் பா.ஜ.க. மூத்த தலைவர் ஒருவருடன் பேசிவருவதாகவும், விரைவில் பா.ஜ.க.வில் இணைந்து விடுவார் என தகவல் வெளியாகியுள்ளது.
ஆனால் சாருபாலாவுக்கு நெருக்கமானவர்களோ இந்த குற்றச்சாட்டை முற்றிலுமாக மறுக்கிறார்கள்.







