அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

பைபிளில் உள்ள இரண்டு “பரம ரகசியங்கள்”  !

பைபிள் புனிதமா ? புதிரா ?  தொடர் – 6

திருச்சியில் அடகு நகையை விற்க

பழைய ஏற்பாட்டு காலத்தில் ரகசியமாக இருந்த பல விஷயங்கள் புதிய ஏற்பாட்டில் இயேசு கிறிஸ்துவின் மூலம் அனைவருக்கும் வெளிச்சத்திற்கு வந்தன.

பைபிள் முறைப்படி இயேசுவின் வருகையும் பரலோகமும் மிக முக்கியமான இரண்டு “பரம ரகசியங்கள்” (Divine Mysteries) என அழைக்கப்படுகின்றன. அவை ஏன் ரகசியங்கள் என்பதற்கான காரணங்களை இந்த இதழில் பார்ப்போம்.

இந்த வார JANUARY - 28 அங்குசம் இதழில்…2026 ANGUSAM WEEKLY BOOK

இரண்டாம் வருகை குறித்து பேசுகையில், இயேசு மீண்டும் பூமிக்கு வருவார் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம் என்றாலும், அது ஏன் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது ? அவர் எப்பொழுது வருவார் என்பது யாருக்கும் தெரியாது. “அந்த நாளையும் அந்த நாழிகையையும் பிதா ( இறைவன் )  ஒருவர் தவிர மற்றொருவனும் அறியான்” என மத்தேயு 24:36 கூறுகிறது.

அறிவியல் என்பது “எப்படி” (How) காரியங்கள் நடக்கின்றன என்பதை விளக்கும். ஆனால் “எப்பொழுது” உலகம் முடியும் அல்லது “ஏன்” இயேசு வருகிறார் போன்ற கேள்விகள் அறிவியலுக்கு அப்பாற்பட்டவை. எனவே, ஒரு ஆன்மீக நிகழ்வை அறிவியல் பூர்வமாக “உண்மை” அல்லது “பொய்” என்று இப்போதே வகைப்படுத்த முடியாது.

முதல்வர் பிறந்தநாள்

பிரபஞ்சம் ஒரு நாள் முடிவுக்கு வரும் என்பதை அறிவியல் ரீதியாக “Entropy” (வெப்ப இயக்கவியல் விதி) உறுதிப்படுத்துகிறது. இதையே பைபிளும், “வானமும் பூமியும் ஒழிந்துபோகும்” என்று மத்தேயு 24:35 இல் கூறுகிறது.

2026 - அங்குசம் தேர்தல் களம் - வீடியோ பார்க்க

இன்று புவி வெப்பமடைதல் மற்றும் சுற்றுச்சூழல் மாற்றங்கள் குறித்து NASA போன்ற அமைப்புகள் எச்சரிப்பது பைபிள் சொல்லும் அடையாளங்களோடு ஒத்துப்போவது பலரையும் வியக்க வைக்கிறது.

பைபிள் புனிதமா ? புதிரா “அந்தக் கடைசி காலத்தில் அறிவு பெருகும்” என்று தானியேல் 12:4 கூறுகிறது. இன்று நாம் காணும் தகவல் தொழில்நுட்பப் புரட்சி மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) வளர்ச்சி ஆகியவை இந்தத் தீர்க்கதரிசனத்தோடு ஒத்துப் போகின்றன.

இயேசு வரும்போது “கண்கள் யாவும் அவரைக் காணும்” என வெளிப்படுத்தின விசேஷம் 1:7 கூறுகிறது. ஒரு காலத்தில் இது சாத்தியமற்றதாகத் தோன்றியது, ஆனால், இன்றுள்ள சேட்டிலைட் (Satellite) மற்றும் நேரடி ஒளிபரப்பு தொழில்நுட்பம் மூலம் இது அறிவியல் ரீதியாகச் சாத்தியமே.

இயேசுவின் வருகை ஒரு ஆன்மீக நிகழ்வு. ஆனால், அது நடப்பதற்கான சூழ்நிலைகள் இன்று அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ரீதியாக உருவாகியிருப்பதை நம்மால் காண முடிகிறது.

—    ஜெ.டி.ஆர்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Comments are closed, but trackbacks and pingbacks are open.