இந்த காலத்தில் இப்படி ஒரு மாமனாரா?
புரட்டாசி வந்துட்டா எங்க மாமனார் வீட்ல சைவம் தான். எனக்கு மட்டும் ஹாட்டல் சிக்கன் வாங்கிட்டு வந்தார் என் மாமனார். இன்னைக்கு காலையிலயே எனக்கு ப்ரிஞ்சி புடிக்கும்னு அவரே செஞ்சி முட்டையும் அவிச்சி வச்சிட்டார். என் மனைவி கொண்டு வந்து வச்சிட்டு சொன்னாங்க.. ” 33 வருஷம் எங்க வீட்ல புரட்டாசிக்கு நான் வெஜ் பண்ணதே இல்ல… வீட்ல இருக்க நாய், பூனைக்கு கூட வெஜ் தான் கொடுப்போம். நீ அதெல்லாம் பாலோ பண்ண மாட்டனு உனக்ககுனே அப்பா செஞ்சார்னு” சொன்னாங்க….

அதே மாதிரி, அவங்க வீட்டுக்குள்ள ஃபீப் வந்ததே இல்ல… நான் சாப்பிடுவேன்னு, எங்க மாமானார் எங்க இருந்தாலும் தேடி பிடிச்சி பிரியாணி வாங்கிட்டு வந்து நைசா ரூம்ல வச்சிடுவார். நமக்கு ஒரு விஷயம் புடிக்கலனா, புடிச்சவங்கள அவங்க வழியிலயே விட்டுடனும்னு சொல்வார். காதல் திருமணம்னா யாரா இருந்தாலும் வீட்ல பேசி சம்மதிக்க வச்சிடுவாரு.. வேற வேற சாதியா இருந்தாலும்..
வீட்டுக்கு அவரோட உறவினர் எம்.பி வந்தாலும் சரி, சாதாரண கூலி தொழிலாளி வந்தாலும் சரி, இரண்டு பேரையும் சரி சமமா தான் நடத்துவார். நானே பார்த்து வியந்திருக்கேன். யாருக்கு அரிசி பருப்பு இல்லன்னாலும் சரி, கொஞ்சம் கூட யோசிக்காக கடைக்கு கூட்டினு போய்ட்டு வாங்கி தருவார். எனக்கு தெரிஞ்சி அவங்க உறவினர்களோட பசங்களுக்கு பல முறை பீஸ் கட்டி படிக்க வச்சிருக்காரு… அந்த காசெல்லாம் அவரு திருப்பி கேட்டதா சரித்திரமே இல்ல..

நான் வீட்ல இருந்தா, காலையில சிக்கன், மதியம் மட்டன், நைட்டு பிரியாணி தினமும் வாங்கிட்டு வந்துடுவாரு.. “எதுக்கு இவ்ளோ செலவு பண்றீங்கனு” கேட்டா, நாம போயிட்டு வாங்கினா அந்த குடும்பம் வாழும். அது போதும்னு சிம்பிளா சொல்லிட்டு கிளம்பிடுவார். சமைக்கவோ, பாத்திரம் கழுவவோ ஒரு நாள் கூட யோசிச்சதே இல்ல. ஏறக்குறைய 20 வருஷம், அவங்க பசங்களுக்கு காலையில எந்திரிச்சி சமைச்சி, சாப்பாடு பேக் பண்ணி, காலேஜ்க்கு அனுப்பிட்டு வேலைக்கு போவார். அதுக்காக அவர் சோர்வானதே இல்ல. நான் வேலைக்கு கிளம்பினா அதே மாதிரி சாப்பாடு பேக் பண்ணிட்டு, டிபன் பாக்ஸ் அடியில ஆயிரபா செலவுக்கு வச்சிடுவார். ஞாயிறு ஆனா, அவர் காய்கறி வெட்டி வச்சிட்டு, அவங்க பொண்ண கூப்பிட்டு, நான் சமைக்கவா, உங்க வீட்டுக்காரு சமைக்கிறாரானு கேப்பாரு. நான் போயிட்டு சமைப்பேன். போன சண்டே அவருதான் சிக்கன் பிரியாணி செஞ்சாரு.
மாமனாருக்கு ஏத்த மருமகன்னு எல்லோரும் சொல்லுவாங்க.. 😃

MTC நடத்துனரா பணியில இருக்கும் போது, அன்றாட மீன் வியாபாரி, கூடை வியாபாரிங்க வண்டியில சரக்கு ஏத்துவாங்க.. அவங்க கிட்ட சில்ற இல்லணா இவரே போட்டு கட்டிடுவார். இங்க பணம் பிரச்சனையே இல்ல. அவ்ளோ காலையில பஸ்ல மீன் கூடையை யாரும் ஏத்த மாட்டங்க.. நான் மட்டும் தான் ஏத்துவேன்னு சொல்வாரு. அதனால, அவரு வர வரைக்கும் வியாரிங்க காத்திருப்பாங்களாம். அந்த அளவுக்கு ஏழை, எளிய மக்கள் கிட்ட அன்பா பழகுவார். அவரோட ஏரியாவுல “உங்க அப்பா மாதிரி ஒரு நல்ல மனுஷன நாங்க பார்த்ததே இல்ல” என் மனைவிகிட்ட நிறைய பேர் சொல்லி கேட்டு இருக்கேன்.
போன வருஷம், அவருக்கு ஆக்சிடெண்ட் ஆகி, கால் உடைஞ்சி ஆஸ்பிட்டல்ல அட்மிட் ஆனாரு.. அவர பார்க்க வந்த கூட்டம் கொஞ்ச நஞ்சமில்ல.. வந்தவங்க போனவங்க எல்லாம் கொடுத்த பணம் மட்டும் 50 ஆயிரம் இருக்கும்.. வாங்கிட்டு வந்த பழம் எல்லாம் அந்த வார்டுல இருந்த எல்லோருக்கும் தினமும் கொடுத்தாங்க.. அவ்ளோ குவிஞ்சது…
அந்த மனிதர்கள் தான் என் மாமானார் சம்பாரித்த சொத்து!
– ரஞ்சித் ராஜா
Comments are closed, but trackbacks and pingbacks are open.