காமராஜர் செய்தது சாதனையா? “இலவச”த்தின் பேரில் நம்மைப் பிச்சைக்காரர்களாக மாற்றி இருக்கும் இன்றைய தலைவர்களின் செய்கை சாதனையா..?

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

அலறிய காமராஜர்

நிகழ்ச்சியோ, பொதுகூட்டமோ. நடந்தால் மக்களோ , தொண்டர்களோ. காலணா அரையணா, ஒரு அணா என்று கொடுப்பார்கள். அதை வாங்கி பையில் போட்டுக்கொள்வார் காமராசர்.
சென்னை வந்ததும் பார்ப்பார். ஐந்து ரூபாய், எட்டு ரூபாய் என்று சேர்ந்திருக்கும். அப்படியே கொண்டு போய் தன் நண்பரான ‘இந்து’ பத்திரிகை முதலாளி கஸ்தூரி ரங்கனிடம் கொடுத்து விடுவார். நீண்ட காலம் அப்படி நீடித்தது.
ஒரு முறை ‘இந்து’ கஸ்தூரிரங்கன் அவர்களுக்கு உடல் நிலை மோசமாகி விட்டது. பிழைப்போமா என்பதில் அவருக்கே சந்தேகம். காமராஜரை அழைத்தார்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitche

“சாகும்போது கடன்காரனாக சாக விரும்பபவில்லை. உம் பணத்தை உம்மிடமே ஒப்படைத்து விடத் தான் அழைத்தேன்” என்றார் பெருந்தலைவர் காமராஜருக்கு கண் கலங்கிப்போனது. ‘அப்படி ஏதும் நடக்காது. நீங்கள் நல்லபடியாக எழுந்து நிற்பீர்கள். கவலைப்பட வேண்டாம்.
இந்த பணத்திற்காகதான் வரச் சொன்னீர் எனத் தெரிந்திருந்தால் வந்திருக்க மாட்டேன்’ என்றார் .
சரி எத்தனை வருடம் எவ்வளவு தொகையை கொடுத்துவந்தீர் என்பதாவது ஞாபகம் இருக்கா? கணக்கு வைத்துள்ளீரா? என்றார்
.
அதெல்லாம் எனக்கு தெரியாது என்றார் காமராஜர்.
வீட்டில் உள்ளவர்களை அந்த நோட்டுபுத்தகத்தை எடுத்து வரச் சொன்னார். தேதி வாரியாக எழுதி வைத்திருந்ததை காட்டி, இத்தனை ஆண்டுகள் இவ்வளவு தொகை இருக்கிறது என்று கூறியதோடு, ‘எனக்கு ஏதாவது ஒன்று நடந்து விட்டால் பணத்தை காமராஜரிடம் ஒப்படைத்து விடுங்கள்’ என்றும் வீட்டில் உள்ளவர்களிடம் கூறினார்.

பிறகு காமராஜர் நினைப்பை போலவே கஸ்தூரிரங்கன் குணமாகி நல்லபடியாக எழுந்தார். வழக்கம் போலவே ஒரு முறை இருவரும் சந்தித்து பேசிக் கொண்டிருந்தார்கள்.
அப்போது ‘ஒரு நல்ல தொகை இருக்கிறது. வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். ஏதாவது செய்து கொள்ளுங்கள்’ என்றார் கஸ்தூரி ரங்கன். பதிலளித்த பெருந்தலைவர் ‘அந்த பணத்தை வைத்து கொண்டு நான் என்ன செய்யப் போகிறேன். சாப்பிடறது ரெண்டு இட்லி. அது எப்படியாவது எனக்கு கிடைச்சுடும். எனக்கெதற்கு பணம்’ என்று யோசித்தவர் ‘ஒன்று செய்யுங்கள் ஐய்யரே. உங்கள் கையாலேயே ஒரு இடத்தை வாங்கிகொடுங்கள்’ என்றார்.
கஸ்தூரிரங்கனுக்கு மகிழ்ச்சி. இடத்தையாவது கேட்டாரே என்று. அலைந்து பிடித்து ஒரு பெரிய நிலத்தை பார்த்தார். விலை பேசினார். காமராஜர் கொடுத்து வைத்திருந்ததை விட கூடுதல் விலை. அந்த கூடுதல் பணத்தை ஐய்யரே போட்டு நிலத்தை பேசிமுடித்தார்.

அங்குசம் தற்போதைய இதழ்.. படிக்க..

பத்திரபதிவுக்கு பெருந்தலைவரை அழைத்தார். யார் பெயரில் என்று கேட்கிறார். உம் பெயரில்தான் என்ற பதிலை கேட்டு அலறிய காமராஜர் ‘எனக்கு எதற்கு காசு பணம், சொத்து எல்லாம். நானா சம்பாதிச்சேன். மக்கள் கொடுத்த காசு. என் பெயரில் வேண்டாம் என்கிறார். எவ்வளவு கூறியும் கேட்கவில்லை. கடைசியில் காமராஜர் சொன்னபடியே கட்சியின் பெயரில் பத்திரப்பதிவு செய்யப்பட்டது.
அந்த இடம்தான் இன்று அண்ணா சாலையில் உள்ள ‘தேனாம் பேட்டை காங்கிரஸ் கட்சி மைதானமும், பெரிய காமராஜர் அரங்கமும்‘. கோடி கோடியான மதிப்பில் சொத்து. யார் யாரோ, எப்படியெல்லாமோ அனுபவிக்கிறார்கள். அந்த பெருந்தலைவர் இறந்த போது கூட அவர் வாங்கிய இடத்தில் அடக்கம் செய்யப்படவில்லை. கிண்டியில் பொது இடத்தில், பொதுசொத்தாகவே அடக்கம் செய்யப்பட்டார்.

தலைவர்கள்‘ எப்படியெல்லாம் இருந்திருக்கிறார்கள் பாருங்கள்.

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

கர்ம வீரர் காமராஜரின் சாதனை
எத்தனை பேருக்கு தெரியும் இந்த உண்மை யார் சிறந்தமனிதர்? ஏது 100 ஆண்டு பேசும் சாதனை?

காமராசரின் ஆட்சி காலம்:

ராஜாஜி நிதிப் பற்றாக்குறையைக்
காரணமாகக் காட்டி, 6000 ஆரம்பப்
பள்ளிகளை இழுத்து மூடினார். அடுத்தச் சில மாதங்களில் ஆட்சிக்கு வந்தார் காமராஜ். அது தான் அவர் முதன் முதலாக ஆட்சியில் அமர்வது.

ஆட்சியில் இருந்த ராஜாஜி, அரசாங்கத்திடம் பணமில்லை என்று கூறி இழுத்து மூடிய 6000 பள்ளிகளைச் சிலமாதங்களில் ஆட்சிக்கு வந்த காமராஜ் மீண்டும் திறக்கும்படி உடனடியாக ஆணையிட்டார்.

அத்தோடு நில்லாமல் 14000 புதிய பள்ளிகள்  கட்ட உத்தரவிட்டார். படிக்க வரும் மாணவர்கள் பட்டினியாக இருக்கக் கூடாதென்று உணவும் அளிக்கத் திட்டம் தீட்டி நிறைவேற்றினார்!
நிதிப் பற்றாக்குறை, அரசாங்க
கஜானா காலி என்று ராஜாஜி தமிழகத்தைப்
பிச்சைக் கார மாநிலமாக
முன்னிருத்தினார்.
ஆனால், அடுத்து ஆட்சிக்கு வந்த காமராஜ்
அதே பிச்சைக்காரத்
தமிழகத்தை இந்தியாவிலேயே தொழில்
வளர்ச்சியில் இரண்டாவது மாநிலமாகக்
கொண்டுவந்து நிறுத்தினார்!
1.நெய்வேலி நிலக்கரித் திட்டம்
2.பெரம்பலூர் ரயில்பெட்டித் தொழிற்சாலை
3.திருச்சி பாரத் ஹெவி எலெக்ட்ரிகல்ஸ்
4.ஊட்டி கச்சா பிலிம் தொழிற்சாலை
5.ஆவடி கனரக வாகன தொழிற்சாலை
6.கல்பாக்கம் அணுமின் நிலையம்
7.கிண்டி டெலிபிரின்டர் தொழிற்சாலை
8.சங்ககிரி துர்க்கம் சிமெண்ட் தொழிற்சாலை
9.மேட்டூர் காகிதத் தொழிற்சாலை
10.கிண்டி அறுவைச் சிகிச்சைக் கருவித் தொழிற்சாலை
11.துப்பாக்கித் தொழிற்சாலை
12.நெய்வேலி நிலக்கரி சுரங்கம்
13.சேலம் இரும்பு உருக்காலை
14.பெரம்பூர் ரயில்பெட்டித் தொழிற்சாலை
15.அரக்கோணம் இலகுரக ஸ்டீல் ப்லான்ட் தொழிற்சாலை
16.சமய நல்லூர் அனல்மின் நிலையம்
17.சென்னை அனல்மின் நிலையம்
18.நீலகிரி கச்சாபிலிம் தொழிற்சாலை
இவை மட்டுமா?
மணிமுத்தாறு
ஆரணியாறு
சாத்தனூர்
அமராவதி
கிருஷ்ணகிரி
வீடூர்
வைகை
காவிரி டெல்டா
நெய்யாறு
மேட்டூர்
பரம்பிக்குளம்
புள்ளம்பாடி
கீழ்பவானி
என்று இன்றைக்கும் விவசாயிகள்
பெரும்பங்கு நம்பிக்கொண்டிருக்கும்
பாசனத்திட்டங்கள் காமராஜ் உருவாக்கியவை!
அவர் ஆட்சி ஏற்ற போது தமிழகத்தில்
இருந்தது 3 சர்க்கரைத் தொழிற்சாலைகள்.
அவர் ஆட்சி விட்டு இறங்கிய போது 14
இன்னும் சொல்லவா?
159 நூல் நூற்பு ஆலைகள்
4 சைக்கிள் தொழிற்சாலைகள்
6 உரத் தொழிற்சாலைகள்
21 தோல் பதனிடும் தொழிற்சாலைகள்
2 சோடா உற்பத்தித் தொழிற்சாலைகள்
ரப்பர் தொழிற்சாலை
காகிதத் தொழிற்சாலை
அலுமினிய உற்பத்தித் தொழிற்சாலை
கிண்டி, விருதுநகர், அம்பத்தூர், ராணிப்பேட்டை, மதுரை, மார்த்தாண்டம், ஈரோடு,காட்பாடி, தஞ்சாவூர், திருச்சி… என்று. தமிழகத்தில் 20 தொழிற்பேட்டைகள்
உருவாக்கினார்.

மனசாட்சியோடு கொஞ்சம் சிந்தித்துப்
பாருங்கள் தோழர்களே…!
காமராஜ் ஆட்சி புரிந்தது 9 ஆண்டுகள்தான்..! (பட்டியலில் இன்னும் சில விடுபட்டுள்ளன)
அவர் 9 ஆண்டுகள் ஆட்சிக் காலத்தில் செய்த இந்தச் சாதனைகளில்…
இந்தியாவிலெயே தொழில் வளர்ச்சியில்
இரண்டாவதாகக் கொண்டு வந்த காமராஜர் செய்தது சாதனையா..?
இல்லை
“இலவச”த்தின் பேரில் நம்மைப்
பிச்சைக்காரர்களாக
மாற்றி இருக்கும் இன்றைய தலைவர்களின்
செய்கை சாதனையா..?

Saravana Multispeciality Hospital Pvt. Ltd., Madurai,

Leave A Reply

Your email address will not be published.