ஈஷா – ஆன்மீகம் தேடி சுயவிருப்பத்துடன் சென்றார்கள் அதனை தடுக்க ஏன் துடிக்கின்றார்கள் ?
சில நாட்களாக கோயம்புத்தூர் ஈஷா யோக மையத்தில் நடந்த பரபரப்பு நேற்று உச்சநீதிமன்ற தடையால் முடிவுக்கு வந்துள்ளது.
அதாவது காமராஜ் என்பவர் தன் மகள்கள் 42 மற்றும் 36 வயதுடைய, பேராசிரியர் மற்றும் பொறியியல் பட்டதாரியான இருவர் ஈஷா மையத்தில் சேவை செய்ய தங்கிவிட்டதாகவும், அவர்களை அந்த மையம் அவர்கள் விருப்பம் மீறி அடத்து வைத்திருப்பதாகவும் அவர்களை மீட்டு தரவேண்டும் எனவும் முதலில் காவல் நிலையத்தில் புகார் செய்தார்.
ஆனால் அப்பெண்கள் இது தங்கள் விருப்பம் என சொன்னபின்னும் சர்ச்சைகள் தொடர்ந்தன, அது வழக்காகி கடைசியில் சென்னை உயர்நீதிமன்றம் விசாரித்தது. காரணம் அவர் ஆட்கொணர்வு மனு கொண்டு வந்திருந்தார்.
அங்கேதான் மிக குழப்பமான விவகாரம் நடந்தது, நீதிபதிகள் “பெற்றோரை மதிக்காத பெண்கள் எப்படி துறவு ஏற்கலாம்” என்பது போல் சீற, இன்னும் “தன் மகளுக்கே திருமணம் செய்த ஜக்கி வாசுதேவ் எப்படி இன்னொருவர் மகள்களை துறவியாக்கலாம் என்றும்” மன்றத்தின் மேடை சொன்னது.
கூடவே “இதெல்லாம் ஏதோ மயக்க மருந்துகொடுத்து அவர் செய்யும் வேலை” என மனுதாரர் குதிக்க, நீதிமன்றம் காவல்துறைக்கு அனுமதி கொடுத்தது.
காவல்துறை அந்த ஈஷா மையத்துக்குள் நுழைந்தது, விவகாரம் பெரிதாக ஈஷா மையம் உச்சநீதிமன்றத்தை அணுகியது.
உச்சநீதிமன்றம் இந்த தீர்ப்பை சட்டபடி அணுகியது, அதாவது என்னென்ன விவகாரங்களில் சென்னை உயர்நீதிமன்றம் சரியாக அணுகவில்லையோ அதை சுட்டிகாட்டியது.
இந்திய சட்டபடி 21 வயதான பெண்கள் அவர்கள் சொந்தமாக முடிவெடுக்க உரிமை உண்டு, இதனால் இங்கே காவல்துறை செல்ல முடியாது என உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு தடை விதித்தது.
மனுதாரரின் கோரிக்கையினை ஏற்று அப்பெண்களை வீடியோ கான்பரன்ஸ் விசாரணை செய்த நீதிபதிகள் இந்த விவகாரம் முன்பே எழுப்பட்டதையும் அப்பெண்கள் சொந்த விருப்பத்துடன் இருப்பதையும் உறுதி செய்து காவல்துறை வெளியேற சொல்லிவிட்டு வழக்கை 18ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
இனி 18ம் தேதி நீதிமன்றம் உத்தரவை சொல்லும், ஆனால் அது அப்பெண்கள் உரிமைபடித்தான் இருக்கும். சட்டம் அதுதான்.
இங்கே கவனிக்கவேண்டிய விஷயம் பல உண்டு
ஈஷாவில் ஒரு சாதாரண வழக்குக்காக 500 பேர் கொண்ட போலீஸ்படை அனுப்பவேண்டிய அவசியம் தெரியவில்லை, எவ்வளவோ கொலைகள், தீவிரவாதம், போதை என நடக்கும் மாகாணத்தில் இங்கு மட்டும் ஏன் இவ்வளவு தீவிரம்?
இந்திய சட்டபடி 21 வயது நிர்மபிய பெண் தனித்து முடிவெடுக்க உரிமை உண்டு, அங்கே “பெற்றோரை கவனியாமல்” என நீதிமன்றம் குதிக்கும் அவசியம் புரியவில்லை, அதுவும் 7 வருடம் முன்பே நடந்து அதை ஏன் மீள நீதிமன்றம் கிளப்புகின்றது என்பதும் தெரியவில்லை
“தன் மகளுக்கு திருமணம்” என ஜக்கியினை கரித்து கொட்டுவதிலும் அர்த்தமில்லை, திருமணம் அல்லது துறவறம் என்பது அவர்கள் விருப்பம் எனும்போது இங்கே இந்த வசனம் அவசியமற்றது, பொறுத்தமற்றது
இன்னும் ஆச்சரியமான விஷயம் என்னவென்றால் தினமும் மதமாற்றம் நடக்கும் மாகாணம் அது, எத்தனையோ இந்துக்கள் கிறிஸ்தவம் உள்ளிட்ட மதங்களுக்கு மாற்றபடுகின்றார்கள்.
அங்கே எவ்வளவோ பெற்றோர் கதறுகின்றார்கள், அங்கெல்லாம் மவுனம் காக்கும் நீதிமன்றம் இங்கே ஏன் வரிந்துகட்டுகின்றது, காவல்துறை வரிந்துகட்டுகின்றது என்பதும் தெரியவில்லை.
இந்த பிள்ளைகளுக்காக இப்படி 500 காவலர்களை அனுப்பும் நீதிமன்றம், நாள் தோறும் டாஸ்மாக் கடைகள், சினிமா கொட்டகைகள், ஆட்ட கேளிக்கை மையங்கள், கஞ்சா போதைகள் என சுற்றும் பிள்ளைகள் பற்றி ஏன் கவலை கொள்ளவில்லை என்பது தெரியவில்லை.
இந்த பெண்கள் தீவிரவாதம் செய்யவில்லை, கடத்தல் மற்றும் தவறான தொழில்செய்யவில்லை, யாரையும் ஏமாற்றவில்லை, முறைகேடோ முறையற்ற வகையிலோ நடக்கவில்லை
அவர்கள் ஆன்மீகம் தேடி சென்றார்கள், சுயவிருப்பத்துடன் சென்றார்கள், அதனை தடுக்க ஏன் துடிகின்றார்கள்?
ஆக விஷயம் இதுதான் இது ஈஷாவினை களங்கபடுத்தும் முயற்சி, ஏதோ மயக்க மருந்தை கொடுத்து மக்களை மூளைசலவை செய்கின்ற முடக்கும் முயற்சி. இதெல்லாம் ஒரு காலமும் நடக்காது, இந்த தேசத்தின் ஆத்மா எப்போதும் பவித்திரமானது அது ஈஷாவினை காக்கும்.
இந்து ஆன்மீக மையங்கள் மேலும் இந்து துறவிகள் மேலும் இன்னும் தீராத வன்மம் கொண்ட கும்பல்கள் அதிதீவிரமாக சுற்றுவதும் அவர்களுக்கு பல் அதிகார சக்திகள் ஆதரவு இருப்பதும் தெரிகின்றது. இதையெல்லாம் இந்துக்கள் புரிந்துகொண்டால் நல்லது.
ஈஷா மதமாற்றத்தை தடுக்கின்றது, அப்படியே வெளிநாட்டு கிறிஸ்தவர்களை இந்துக்களாக மாற்றுகின்றது. இன்னும் பல மதத்தார் ஆன்மீக நலம் தேடி அறிவு வேண்டி அதை நாடுகின்றார்கள்.
இப்படியான காரியத்தை செய்யும் ஈஷாவினை முடக்கும் முயற்சிகள் எப்போதும் போல் தொடர்கின்றது. அதில் இதுவும் ஒன்று.
அந்த ஈஷா மையம் எல்லாவற்றையும் கடப்பது போல் இதையும் எளிதாக கடந்து செல்ல அந்த சிவன் அருள் செய்யட்டும்.
ஈஷாவுக்காக பிரார்த்திப்போம், அதன் தர்பபு நியாயமும் தூய்மையான செயல்பாடும் காக்கப்படட்டும், அந்த பெண்கள் அவர்கள் விரும்பியதை இந்த மதத்துக்கு செய்ய சட்டம் துணை நிற்கட்டும்.
எப்படியோ தமிழக இந்துக்களும் ஈஷா மையமும் நவராத்திரி கொண்டாடிவிட கூடாது என பின்னபட்ட சதியினை உச்சநீதிமன்றம் உடைத்துவிட்டது, அந்த அன்னை மகாகாளி இனி நல்ல தீர்ப்பை தரட்டும்.
-பிரம்ம ரிஷியார்