அங்குசம் சேனலில் இணைய

83 வயது பாட்டியை விரும்பும் 23 வயது இளைஞர் !

தோழியின் பாட்டியிடம் காதலை வெளிப்படுத்திய இளைஞா்

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

நாம் அனைவரும் காதலுக்கு கண் இல்லை என்று கேள்விப்பட்டிருப்போம். ஆனால் காதலுக்கு அறிவு கூட இல்லையா என்று கேட்கும் அளவிற்கு ஒரு சம்பவம் ஜப்பானில் நிகழ்ந்திருக்கிறது. ஜப்பானில் சேர்ந்த 23 வயதான கோஃபு என்ற இளைஞர். தனது வகுப்பு தோழியின் 83 வயதான பாட்டி ஐகோ என்பவர் மீது பிரியம் கொண்டு கடந்த ஆறு மாதங்களாக டேட்டிங் செய்து வரும் சம்பவம், பலரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.

கோஃபு ஒருமுறை தனது வகுப்பு தோழியின் வீட்டிற்கு சென்றபோது இவர்களுக்கிடையே பிணைப்பு தொடங்கி இருக்கிறது. அதன் பின்னர் படிப்படியாக அது ஆழமாகியிருக்கிறது. பாட்டி ஐகோவுக்கு ஒரு மகன், ஒரு மகள் மற்றும் ஐந்து பேரக்குழந்தைகள் உள்ளனர். இவர் இப்போது விவாகரத்து செய்துவிட்டு தனது மகனின் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

Angusam Cinema - அங்குசம் சினிமா சேனல்

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

இதற்கிடையில் தான் இளைஞர் கோஃபுவை சந்தித்துள்ளார். அவரும் பட்டப்படிப்பு முடிக்கும் தருவாயில் உள்ளார். இருவர்களின் உறவு முதல் பார்வையிலேயே தொடங்கியதாக கூறப்படுகிறது. ஆரம்பத்தில் வயது வித்தியாசம் காரணமாக தங்கள் உணர்ச்சிகளை வெளிப்படுத்த தயங்கினார்களாம். ஆனால் எதிர்பாராத விதமாக திட்டமிடப்படாத ஒரு பயணத்தின் போது காதலை ஒப்புக்கொண்டோம் என்று அவர்கள் கூறியிருக்கின்றனர்.

வயது கடந்த காதல்அதிலும் இரு குடும்பத்தினர்களும் தங்கள் உறவை ஏற்றுக் கொண்டு முழு ஆதரவை அளித்துள்ளதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர். மேலும் திருமணம் குறித்து இருவரும் முடிவு செய்யப்படவில்லை என்றும் தினமும் காலையில் எழுந்து ஐகோவின் முகத்தை பார்க்க கோஃபு விரும்புவதாக கூறியிருக்கின்றனர். இவர்களின் காதல் கதை இணையவாசிகளிடையே பெரும் அதிர்ச்சியும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

 

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

 —    மு. குபேரன்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

Comments are closed, but trackbacks and pingbacks are open.