‘ஜென்ம நட்சத்திரம்’ சக்சஸ் சீக்ரெட்! – சொல்கிறார் டைரக்டர்!
‘அமோகம் ஸ்டுடியோஸ்’ & ’ஒயிட் லேம்ப் பிக்சர்ஸ்’ கே.சுபாஷினி தயாரித்து, ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் ஜூலை 18-ஆம் தேதி ரிலீஸ் பண்ணிய படம் ‘ஜென்ம நட்சத்திரம்’. ஹாரர் த்ரில்லர் ஜானரில் வந்த இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்ததால், 150 தியேட்டர்களிலிருந்து இப்போது 200 தியேட்டர்கள் வரை அதிகரித்து கலெக்ஷனும் திருப்தியாக இருப்பதால், மீடியாக்களுக்கு நன்றி சொல்லும் நிகழ்ச்சியை சென்னையில் ஜூலை.22—ஆம் தேதி படக்குழுவினர் ஏற்பாடு செய்திருந்தனர்.
இதில் படத்தின் நிர்வாகத் தயாரிப்பாளர் ஆடிட்டர் விஜயன் பேசும் போது, “எங்களுக்கு இது முதல்படம் என்பதால் ரிசல்ட் எப்படி இருக்குமோ என பயந்து கொண்டிருந்தோம். ஆனால் மக்களின் ஆதரவும் அந்த ஆதரவிற்கு காரணமாக இருந்த மீடியாக்களின் சப்போர்ட்டும் எங்களை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்திவிட்டது. படத்தின் டைரக்டர் மணிவர்மன், ஹீரோ தமன் உட்பட அனைத்துக் கலைஞர்கள், தொழில்நுட்பக் கலைஞர்களுக்கு நன்றி” என்றார்.

தமிழ் கொஞ்சம் திணறினாலும் கூடுமானவரை தமிழிலேயே பேசிய ஹீரோயின் மால்வி மல்ஹோத்ரா, “இந்த வாரமும் மக்களின் ஆதரவு கிடைக்க மீடியாக்கள் உதவ வேண்டும்” என்ற வேண்டுகோள் வைத்ததுடன், தனக்கு இப்படத்தில் நடிக்க வாய்ப்பு வாங்கிக் கொடுத்த குமார் என்பவரை மேடையில் ஏற்றி, கைகுலுக்கி நன்றியைத் தெரிவித்தது நெகிழ்ச்சியாக இருந்தது.

படத்தில் நடித்த ரக்ஷா ஷெரின், முனீஸ்காந்த், அருண் கார்த்திக், மைத்ரேயன், யாசர், கேமராமேன் கே.ஜி., மியூசிக் டைரக்டர் சஞ்சய் மாணிக்கம், எடிட்டர் குரு சூர்யா, ஆர்ட் டைரக்டர் ராம் ஆகியோர் படத்தின் வெற்றிக்காக மீடியாக்களுக்கும் ரசிகர்களுக்கும் நன்றி சொல்லி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள்.
“ரோமியோ பிக்சர்ஸ் ராகுலால் தான் இந்தளவுக்கு தியேட்டர்கள் கிடைத்து படம் நல்ல வெற்றி பெற்றுள்ளது. படத்தை சிறப்பாக தயாரித்து, சிறந்த முறையில் வினியோகமும் செய்த அமோகம் ஸ்டுடியோஸுக்கு வாழ்த்துக்களும் பாராட்டுகளும்” என்றார் கேபிள் சங்கர்.
டைரக்டர் மணிவர்மன்,

“ரோமியோ பிக்சர்ஸ்’ ராகுல் சாரின் ஏற்பாட்டில் தான் இந்த நிகழ்சியே நடக்கிறது. அவரின் ஒத்துழைப்பும் ஆதரவும் தான் இம்மகிழ்ச்சியான தருணத்திற்குக் காரணம். மல்டிப்ளக்ஸ் தியேட்டர்களைவிட சிங்கிள் ஸ்கிரீன் தியேட்டர்களில் தான் ரசிகர்கள் கூட்டம் அதிகரித்தது. இப்படத்தின் வெற்றிக்கு அதான் முக்கியக் காரணம். இப்படம் உருவாக காரணமாக இருந்த சுபாஷினி மேடம், நடித்த கலைஞர்கள், ஒத்துழைத்த டெக்னீஷியன்கள் அனைவருக்கும் நன்றி. விரைவில் சக்சஸ் மீட்டில் சந்திப்போம்”
ஹீரோ தமன்,
“இதற்கு முந்தைய என்னுடைய படமான ‘ஒரு நொடி’படத்தின் பட்ஜெட்டை எங்களுக்கு திரும்பக் கொடுத்தது. இந்த ‘ஜென்ம நட்சத்திர’த்தின் மொத்த பட்ஜெட்டும் மூன்று நாள் கலெக்ஷனில் கிடைத்தது. படத்தை அருமையாக மார்க்கெட்டிங் செய்த அமோகம் ஸ்டுடியோஸுக்கு நன்றி. மீடியாக்களின் சப்போர்ட்டால் தான் இந்த வெற்றி சாத்தியமானது. இதில் நடித்த சிலரைத் தவிர, மொத்த டீமும் மீண்டும் இணைந்து ஒரு படத்தை ஆரம்பிக்கவுள்ளோம். விரைவில் அது குறித்த செய்தியுடன் மீடியாக்களை சந்திப்போம்”.
— மதுரை மாறன்