ஜில்லுன்னு சினிமா- திருப்பூர் சுப்பிரமணி சொன்னது என்னாச்சு?
2024 நவம்பரில் சூர்யாவின் ‘கங்குவா’ ரிலீசானது. படைப்பு ரீதியாக மிகவும் மோசமாக இருந்ததால், இயக்குனர் சிவாவை சோஷியல் மீடியாக்களில் காய்ச்சி எடுத்தார்கள். படமும் படுதோல்வியடைந்தது. தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா படு அப்செட்டானார். அந்த நேரத்தில் தமிழ்நாடு மல்டிப்ளக்ஸ் தியேட்டர் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவரும் மிகப் பெரிய ஃபைனான்ஸியருமான திருப்பூர் சுப்பிரமணியன் டென்ஷனாகி, “இனிமேல் தியேட்டர் காம்புவுண்டுக்குள் பப்ளிக் ரிவியூ எடுக்க வரும் யூடியூப்பர்களை உள்ளே விடாதீர்கள். கேரளாவில் இதைத் தான் பண்ணுகிறார்கள். நாமும் இதை ஸ்ட்ரிக்டா ஃபாலோ பண்ணனும்” என கொந்தளித்தார். ஏன்னா திருப்பூர் சுப்பிரமணியின் நெருங்கிய உறவினர் தான் ‘கங்குவா’ தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா.
இதுபத்தியும் பிளாக்மெயில் & கூலிப்படை யூடியூப்பர்கள் பலபேருக்கு பல தயாரிப்பாளர்கள் மறைமுகமாக லட்சக்கணக்கில் ‘ஜிபே’ பண்ணுவதையும் டிசம்பர் மாதம் வெளியான நமது அங்குசம் இதழில் வெளிப்படுத்தினோம். அதன்பின் தியேட்டர் ஓனர்கள் எல்லோருமே ”சுப்பிரமணி சொல்றது தான் சரி” என்ற முடிவுடன் பப்ளிக் ரிவியூ எடுக்க வரும் யூடியூப்பர்களை விரட்டியடித்தனர். சில தியேட்டர்களில் பார்க்கிங் ஏரியாவுக்கே பாய்ந்து வந்து கொ[க]லை விமர்சகர்களை கதிகலங்க வைத்தனர்.
இதெல்லாமே இரண்டு மாதங்கள் தான். ஆனா இப்போ…. 12 ஆண்டுகள் கழித்து இந்த 2025 பொங்கலுக்கு ரிலீசான சுந்தர் சி.யின் ’மதகஜராஜா’ படத்திற்கு ‘பிரீமியர் & பிரஸ் ஷோ’ என்ற பெயரில் சென்னை சத்யம் தியேட்டருக்குள்ளேயே பப்ளிக் என்ற பெயரில் தயாரிப்புத் தரப்பே செட் பண்ணி அனுப்பி ஆட்கள் படம் பார்த்துவிட்ட்டு வெளியே வந்ததும் ‘பப்ளிக் ரிவியூ’ குரூப் கருத்துக்களைக் கேட்டு, அடுத்த அரை மணி நேரத்தில் அப்லோட் பண்ணியது. படம் படுசூப்பர்ஹிட்டானது என்பது சந்தேகமில்லை.
’அதே டெய்லர் அதே வாடகை’ கடந்த 21—ஆம் தேதி ரிலீசான தனுஷின் ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ படத்தின் பிரீமியர் & பிரஸ் ஷோவில் நடந்தது. இந்தப் படமும் சூப்பர்ஹிட் என்பதிலும் நமக்கு மகிழ்ச்சி தான். ஆனால் அதே 21—ஆம் தேதி ஏஜிஎஸ் தயாரிப்பில் ரிலீசான ‘டிராகன்’ படத்தின் பப்ளிக் ரிவியூ எடுக்க வந்த யூடியூப்பர்களை தியேட்டர் ஓனர்ஸ் விரட்டியடித்திருக்கிறார்கள். ஆனால் ‘ஜிபே சிஸ்டம்’ இல்லாமலேயே ‘டிராகன்’ மெகா மெகா ஹிட்டடித்து, முதலீட்டைவிட மூன்று மடங்கு லாபத்தை ஏஜிஎஸ்ஸுக்கு ‘பே’ பண்ணியுள்ளது.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
அப்படின்னா திருப்பூர் சுப்பிரமணி சொன்னது என்னாச்சு? எல்லாமே காத்தோட போச்சு! ஜெயிக்க வேண்டிய சினிமா ஜெயிச்சிருச்சு. பிளாக்மெயில் & கூலிப்படை யூடியூப்பர்களின் பொழப்பு சிரிப்பா சிரிச்சுப் போச்சு.
— மதுரை மாறன்.