லாட்ஜில் ரூம் போட்டு ஜாலி.. 17 வயசு சிறுமியை கர்ப்பமாக்கிய அதிமுக பிரமுகர் கைது.
லாட்ஜில் ரூம் போட்டு ஜாலி.. 17 வயசு சிறுமியை கர்ப்பமாக்கிய அதிமுக பிரமுகர் கைது.
கடலூர்: 17 வயசு பெண்ணை ஏமாற்றி.. பல முறை உல்லாசம் அனுபவித்து.. கர்ப்பமாக்கிய அதிமுக பிரமுகரை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.
கடலுார் மாவட்டம், ஸ்ரீமுஷ்ணம் பகுதியை சேர்ந்தவர் திருமுருகன். இவருக்கு வயசு 37. இந்த பகுதியின் அதிமுக பிரமுகராகவும் உள்ளார்.
இவர் 17 வயது சிறுமியிடம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நெருங்கி பழகி உள்ளார். கல்யாணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி, கடந்த மார்ச் 18-ம் தேதி வேளாங்கண்ணிக்கு அழைத்து சென்றுள்ளார்.
அங்கேயே ஒரு ஹோட்டலில் ரூம் போட்டு சிறுமியை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். பின்னர் இருவரும் வீடு திரும்பிவிட்டனர். இந்நிலையில், சிறுமி கர்ப்பமானார். விஷயத்தை கேள்விப்பட்டு அதிர்ந்த சிறுமியின் தாய், திருமுருகன் குடும்பத்தினரிடம் சென்று நியாயம் கேட்டார்.
அதற்கு திருமுருகன், சிறுமியை கடந்த போன மாசம் 7-ம் தேதி கோவிலில் வைத்து பெயரளவுக்கு தாலி கட்டிவிட்டார். ஆனாலும் சேத்தியாத்தோப்பு அனைத்து மகளிர் போலீசுக்கு சிறுமி புகார் அளித்தார். அங்கு தனக்கு நடந்த இன்னல்களை போலீசாரிடம் சொல்லி சிறுமி கதறி அழுதுள்ளார்.
இதையடுத்து, போலீசார் வழக்குப்பதிந்து சிறுமியை, ஏமாற்றி சீரழித்து, கல்யாணமும் செய்த திருமுருகனை போக்சோ சட்டம் மற்றும் குழந்தை திருமணம் தடுப்பு சட்டத்தில் கைது செய்தனர்.
17 வயது பெண்ணை அதிமுக பிரமுகர் ஏமாற்றிய சம்பவம் சேத்தியாதோப்பு பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.