யார் அந்த தமிழ்நாட்டு ஸ்டாலின் ; ரஷ்ய அதிகாரிகள் தேடல் !
ஸ்டாலின் இந்தப் பெயர் உலகம் முழுவதும் பிரபலமான பெயர்களில் ஒன்றாகும். உலக புகழ்பெற்ற கம்யூனிஸ தலைவர், உலக புரட்சியாளர்களில் ஒருவர், ரஷ்ய நாட்டின் மாபெரும் தலைவராக பெயர் பெற்றவர் தான் ஸ்டாலின்.
மேலும் உலகம் முழுவதும் இருக்கக்கூடிய இடதுசாரி சித்தாந்தகாரர்கள் ஸ்டாலினின் பெயரை உயர்த்திப் பிடிப்பது வழக்கம். பொதுவுடமைக் கருத்துக்கள் பேசப்படும் இடங்களிலெல்லாம் ஸ்டாலினின் புகைப்படமும், ஸ்டாலினின் பெயரும் தவிர்க்க முடியாத ஒன்றாகவே இருக்கும்.
இவ்வாறு கம்யூனிஸ்டுகளால் கூறப்பட்டு வந்த ஸ்டாலினின் பெயர் தற்போது இந்திய அரசியலில் பிரபலமான பெயர்களில் ஒன்றாக மாறியிருக்கிறது.
இதை அறிந்த ரஷ்யாவின் வெளியுறவுத்துறை மற்றும் ரஷ்யாவின் உயர் அதிகாரிகள்…யார் அந்த தமிழ்நாட்டின் ஸ்டாலின் என்றும், மேலும் அவரைப் பற்றிய விவரம் அறியவும் ரஷ்ய நாடு அதிகாரிகள் டெல்லியில் உள்ள ரஷ்ய தூதரகத்தை தொடர்பு கொண்டிருக்கின்றனர். இதனால் ரஷ்ய தூதரக அதிகாரிகள் தமிழ்நாட்டிலிருந்து முக ஸ்டாலினையும் தகவலை சேகரித்து வருகின்றனர்.
மேலும் ரஷ்ய அதிகாரிகள் கேட்கும் முக்கியமான கேள்வி என்னவென்றால், முன்னாள் முதல்வர் கருணாநிதி தனது மகனுக்கு ஸ்டாலின் என்று பெயர் வைக்க என்ன காரணம் என்று கேள்வி விடை தேடி வருகின்றனர்.
அதற்கு பதில் என்னவென்றால், ஸ்டாலின் 2019ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கோயமுத்தூர் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய பேச்சு இது, கலைஞர் அண்ணாவையும் பெரியாரையும் பார்க்காவிட்டால் நானும் ஒரு கம்யூனிஸ்ட் தான் என்று சொல்லியிருக்கிறார். இடதுசாரி சித்தாந்தத்தின் மீது அளப்பரிய பாசம் இருக்கிறது தலைவர் கலைஞருக்கு.
மேலும் நான் பிறக்கும் போது ரஷ்யாவில் ஸ்டாலின் மிகப்பெரிய புரட்சியில் ஈடுபட்டு வெற்றி கொண்டு இருந்தார். அன்று அவரின் நினைவாக எனக்கு ஸ்டாலின் என பெயர் சூட்டினார் தலைவர் கலைஞர்.
இப்படி தான் எனக்கு ஸ்டாலின் என்று பெயர் வைக்கப்பட்டது. நான் பள்ளியில் படிக்கும்போது எனது ஆசிரியர்கள் ஸ்டாலின் என்ற பெயரை மாற்றுமாறு என் தந்தை கலைஞரிடம் கூறினர்கள், ஆனால் தலைவர் பெயரை மாற்ற மறுத்துவிட்டார்.
இவ்வாறு இடதுசாரி கொள்கை மீது என் தந்தைக்கு மிகவும் பற்று இருந்தது என்று கூட்டத்தில் பேசிய மு க ஸ்டாலின் குறிப்பிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.