அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

தமிழ்நாடு அறிவியல் இயக்கம் – ஸ்வான் பிறந்த நாள்!

திருச்சியில் அடகு நகையை விற்க

மின்சார விளக்கிற்கான வெற்றிட மின் குமிழை முதலில் உருவாக்கியவர் ஜோசப் வில்சன் ஸ்வான் 1828 அக்டோபர் 31 அன்று இங்கிலாந்தின் பிஷப்‌வேயர்மவுத் என்ற இடத்தில் உள்ள பாலியன் ஹாலில் (இன்றைய சண்டர்லேண்ட் பகுதி) ஒரு எளிய குடும்பத்தில் பிறந்தார்.

அவரின் தந்தை ஜான் ஸ்வான், தாயார் இசெபெல்லா கேமரூன். பொருளாதார சிரமங்களை எதிர்கொண்ட போதிலும், ஜோசப் ஸ்வான் இயற்பியல் மற்றும் வேதியியல் துறைகளில் மிகுந்த ஆர்வத்துடன் தன்னைப் பிரபலமானவராக உருவாக்கிக் கொண்டார்.

Angusam Cinema - அங்குசம் சினிமா சேனல்

LA STORIA CHE DIMENTICA: JOSEPH WILSON SWAN - GIANO NEWSதொடக்கத்தில் டைனேவில் உள்ள ஒரு மருந்து நிறுவனத்தில் பயிற்சியாளராக பணியாற்றினார். பின்னர் ‘மாவ்சன்’ எனப்படும் வேதிப்பொருள் தயாரிப்பு நிறுவனத்தில் பங்குதாரராக உயர்ந்தார்.

மின்விளக்கின் ஆராய்ச்சியில் ஈடுபட்ட ஸ்வான், 1878 டிசம்பர் 18 அன்று நியூகேஸில் நகரில் தனது மின்விளக்கு கண்டுபிடிப்பை பற்றி பொதுமக்களுக்கு விரிவுரை அளித்தார்.

https://www.livyashree.com/

அந்தக் கண்டுபிடிப்பிற்கான காப்புரிமையை 1880 இல் பெற்றார். இதைத் தொடர்ந்து, தாமஸ் ஆல்வா எடிசனும் அதே ஆண்டில் தனக்கான மின்விளக்கிற்கான காப்புரிமை பெற்றார்.

1881 ஆம் ஆண்டு, லண்டனின் வெஸ்ட்மின்ஸ்டர் பகுதியில் உள்ள சேவாய் திரையரங்கில், ஸ்வான் தனது மின்விளக்குகளை பயன்படுத்தி மின்சார ஒளியில் அந்த அரங்கைக் குளிர்ச்சியூட்டினார்.

2026 - அங்குசம் தேர்தல் களம் - வீடியோ பார்க்க

Joseph Wilson Swan - Linda Hall Libraryஉலகில் முதல் முறையாக ஒரு நாடக அரங்கம் மின்விளக்கினால் ஒளிர்ந்தது இதுவே ஆகும்.

அவரது பங்களிப்பை மதித்து, 1904 இல் இங்கிலாந்து மன்னர் ஏழாம் எட்வர்ட் அவருக்கு ‘சர்’ என்ற வீரப்பட்டத்தை வழங்கினார். அத்துடன், ராயல் சொசைட்டி அவருக்கு ‘ஹுக்த்ஸ் பதக்கம்’ வழங்கியது. பாராசெயூட்டிகல் சொசைட்டியும் கௌரவ உறுப்பினராக ஏற்றுக்கொண்டது.

பிரான்சு அரசு அவருக்கு ‘லீஜன் டி ஹானர் (Légion d’honneur)’ என்ற சிறப்பையும் வழங்கியது.

1881 ஆம் ஆண்டு பாரிஸில் நடைபெற்ற சர்வதேசக் கண்காட்சியில் ஸ்வானின் மின்விளக்குக் கண்டுபிடிப்பு பெரும் கவனம் பெற்றது.

அந்தக் கண்காட்சியில் அவரை கௌரவிக்கும் விதமாக, முழுப் பாரீஸ் நகரமும் மின்சார விளக்குகளால் ஒளிர்ந்தது என்பது வரலாற்றுச் சிறப்பு மிக்க நிகழ்வாகும்.

மின்விளக்கின் ஒளியை உலகுக்கு தந்த விஞ்ஞானி சர் ஜோசப் வில்சன் ஸ்வான் .

 

—    மதுமிதா

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

Comments are closed, but trackbacks and pingbacks are open.