“அரசுக்கு அஞ்சு லட்சம் மிச்சம்” “ஜெ” பாராட்டிய பத்திரிகையாளர்   

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

 கடந்த 30 ஆண்டுகளாக சிறுகதை, கவிதை, வானொலி நாடகங்கள், பத்திரிகை துறையில் சீனியர் ரிப்போர்ட்டர் எனத் தொடர்ந்து இயங்கி வருபவர்தான் ஸ்ரீரங்கம் திருநாவுக்கரசு.

இதில் 25 ஆண்டுகளுக்கும் மேலாக கல்கி நிறுவன இதழ்களில்தொடர்ந்து எழுதி வருபவர். தினத்தந்தி நிறுவனத்தின் ராணி வார இதழிலும் அங்குசம் இதழிலும் தொடர்ந்து எழுதிவருகிறார்.

அஸ்வீன் சுவீட்ஸ் ஆர்டர் செய்ய..

அரசியல், சமூகம், கல்வி, விளையாட்டு, மருத்துவம்,ஆன்மிகம், இயற்கை விவசாயம் சார்ந்து நேரடி களப் பணியில் அயராது ஈடுபட்டு கட்டுரைகள் மற்றும் நேர்காணல்கள் போன்றவற்றை எழுத்துருவில் வடிப்பதில் வல்லவர்.

களப் பணியாற்றும் எந்த இடத்திலும் எந்தச் சூழலிலும் எவரிடத்திலும் தன்னைச் சமரசம் செய்து கொள்ளாதவர்.

அங்குசம் சேனல் வீடியோ பார்க்க...

இந்த அவரது மனோ பலம் தான் நமது அறக்கட்டளைக்கு, ஸ்ரீரங்கம் திருநாவுக்கரசு என்பவரை ஆகச் சிறந்ததொரு பத்திரிகையாளராக நமக்கு அடையாளம் காட்டின என்றால் அது மிகையல்ல.

காவிரி அரசியல் குறித்தும் அதன் தாக்கம் குறித்தும்,இவரது பார்வையும் எழுத்துகளும் மிகவும் நேர்த்தியானவை. காவிரி உற்பத்தியாகும் குடகில் இருந்து, கடலில் கலக்கும் பூம்புகார்எனப்படும் காவிரிப்பூம்பட்டிணம் வரையிலுமான காவிரின் நீர்வழித் தடங்களான 600 கி.மீ.தூரத்துக்கான வர்ணனையும், காவிரியின் செழுமையும் இவரது எழுத்தில் மிகச் சிறப்பு.

காவிரியின் செழுமை…
தமிழ்நாட்டுக்குப் பெருமை”என்கிற தலைப்பிலான கட்டுரை, இவரது பத்திரிகைப் பணியில் ஒரு மைல் கல் ஆகும்.  ஒரு முறை 2001 வாக்கில் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா, இவரது கட்டுரை சார்ந்து உடனே எதிர்வினை ஆற்றியது, இவரது பத்திரிகைப் பணிக்கு உயரிய சான்றாகும்.

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

ஸ்ரீரங்கம் திருநாவுக்கரசு
ஸ்ரீரங்கம் திருநாவுக்கரசு

முசிறிக்குக் கீழே காவிரிக் கரையோர கிராமம் அய்யம்பாளையம். காவிரியின் எதிர்க்கரையில் குளித்தலைக்கு கீழே பெட்டைவாய்த்தலை. முசிறி காவிரி சற்று அகண்ட காவிரியாகும். அய்யம் பாளையம் கிராமத்தின் முதியவர் வள்ளியப்பன். காவிரியின் உள்ளே அதன் நீரோட்டங்களில் பரவலாக, காட்டாமணக்குச் செடிபுதர்கள் மண்டிக் கிடந்தன. அதனுள்ளே சமூக விரோத செயல்களும், ஆண்கள் ஒளிந்து கொண்டு வேடிக்கை பார்ப்பதும் நடந்து கொண்டிருந்தன.

வள்ளியப்பன் மனதை அதெல்லாம் என்னவோ செய்தது. தண்ணீரற்ற கோடை காலத்தில், வள்ளியப்பன் ஆற்றின் உள்ளே காட்டாமணக்குச் செடிகளை வேருடன் பிடுங்கிப் போட்டு, அவைகள் காய்ந்தவுடன் பெட்ரோல் ஊற்றி எரித்து விட்டார். நான்கைந்து மாதங்கள் தொடர்ந்து செயல்பட்டார் வள்ளியப்பன்.

காவிரியின் உள்ளே 5 கி.மீ. சதுர பரப்பளவுக்கு, ஒருதிறந்த வெளி மைதானம் போலக் காட்சி அளித்தது. ஸ்ரீரங்கம் திருநாவுக்கரசு, அதனை நேரில் கள ஆய்வு செய்துகல்கி வார இதழில் அவர் எழுதிய கட்டுரை தான் “அரசுக்கு அஞ்சு லட்சம் மிச்சம்” என்பதாகும்.

வள்ளியப்பனுக்கு ரொக்கப்பரிசு 
அப்போதைய முதல்வர் ஜெயலலிதா, கட்டுரை வாசித்த மறுநாளே அந்த முதியவர் வள்ளியப்பனை சென்னை கோட்டைக்கு நேரில் வரவழைத்து விட்டார். கோட்டையில் வைத்து முதல்வர் ஜெயலலிதா, முதியவர் வள்ளியப்பனுக்கு அரசு சார்பில் 3 லட்ச ரூபாய் பரிசும், அய்யம்பாளையம் கிராமத்தில் நான்கு சென்ட் பட்டா நிலமும் தந்து சிறப்பித்தார்.

இவ்வாறாக பத்திரிகைத் துறையில் நேர்மறைச் சிந்தனைகளுடனும், சீரிய அறச் சீற்றத்துடனும் 30 ஆண்டுகளாக தொடர்ந்து இயங்கி வரும் ஸ்ரீரங்கம் திருநாவுக்கரசுக்கு தஞ்சை மாவட்டம், திருக்கருகாவூர் அக்கினிச் சிறகுகள் அறக்கட்டளை விருது வழங்கி சிறப்பு செய்துள்ளது.

இவரை அங்குசம் சமூக நல அறக்கட்டளை வாழ்த்துகிறது. தொடரட்டும் அறம்சார்ந்து உங்கள் பத்திரிகை பணி.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

Leave A Reply

Your email address will not be published.