நீதித்துறையின் நடவடிக்கை விமர்சனத்திற்குரியது தான்… ஆனால் சங்கர் புகழப்படக்கூடிய நபர் இல்லை…! சங்கர் மனைவியின் உருக்கமான தகவல்..!
நீதித்துறையின் நடவடிக்கை விமர்சனத்திற்குரியது தான்… ஆனால் சங்கர் புகழப்படக்கூடிய நபர் இல்லை…! சங்கர் மனைவியின் உருக்கமான தகவல்..!
நீதித்துறையின் நடவடிக்கை விமர்சனத்திற்குரியது தான். ஆனால் சங்கர் புகழப்படக்கூடிய நபர் இல்லை. அவன் மீது தனிப்பட்ட வன்மம் என்கிறார்கள். ஏன் பாதிக்கப்பட்டவளுக்கு தனிப்பட்ட வன்மம் இருக்கக்கூடாதா? சங்கரின் அலுவலக டேப் வழக்கு முடியும்வரை தன்னுடைய முகத்தை வெளியில் காட்டாதவன்.
அப்பொழுது அவன் தைரியமாக தன்னுடைய பெயரில் இயங்காததால், என் மீதும், இன்னொரு வழக்கறிஞர் மீதும் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு வந்தது. அப்படியான நீதிபதியை விமர்சித்த( எனக்கு தெரியாத தகவல்கள் அடங்கிய) வழக்கில், நான் எந்த கையெழுத்தும் இடவில்லை.
அந்த வழக்கின் வழக்கறிஞரைத் தொடர்பு கொண்டு, எப்படி என் பெயரில் வழக்கு பதிவிட்டீர்கள் என வினவும் பொழுது, அவரும் சங்கர் கேட்டதினால் நம்பிக்கையின் பெயரில் கையெழுத்து போட்டேன் என்றார்.
வழக்கறிஞர் மூன்றாண்டுகள் பார் கவுன்சிலால் டீபார் செய்யப்பட்டு, பணி செய்ய முடியாமல் அவஸ்தைப்பட்டார். என மீது நீதிமன்ற அவமதிப்பு வந்த காலக்கட்டத்தில், சட்டக்கல்லூரியை முடித்த நான், வழக்கறிஞராக பதிவு செய்ய வேண்டி, என்னுடைய சர்டிபிகேட்டுகள் சங்கரிடம் இருந்தால் தர வேண்டினேன். வழக்கறிஞர் ராதாகிருஷ்ணன் மூலமாக தகவல் அளித்த அவன், சர்டிபிகேட்டுகளை தர முடியாது என்றான்.
சர்டிபிகேட்டுகள் அவனிடம் தான் உள்ளதா என உறுதிபடுத்திக்கொள்ளமுடியாது, நான் மீண்டும் சர்டிபிகேட்டுகள் வேண்டி விண்ணப்பித்தேன். என்னுடைய கைக்குழந்தையை வீட்டில் அம்மாவிடம் விட்டும், சில சமயம் தூக்கிக்கொண்டும் பத்தாம் வகுப்பு, 12 ஆம் வகுப்பு, கல்லூரிச் சான்றிதழ் என பள்ளி, DPI, கல்லூரிகளுக்கு அலைந்தேன்.
ஊரிலிருந்து விடியற்காலை 4 மணி நேரம் பயணம் செய்து, இரவு வீடு திரும்புவேன். 10 நாட்கள் பிறகு விண்ணப்பித்து வழக்கறிஞர் ஆனதை அறிந்து பல மாதங்கள் கழித்தே என்னுடைய சர்டிபிகேட்ஸை ராதாகிருஷ்ணன் சாரிடம் தந்தான்.
அவரிடமிருந்து இன்னும் என்னுடைய சர்பிடிகேட்ஸை நான் வாங்கவில்லை.
கண்டம்ட் வாங்கிய வழக்கறிஞர் டீபார் செய்யப்பட்ட பின்பே, நான் அறிந்தேன் அந்த வழக்கில் மட்டும் எனக்கு கண்டம்ட் இல்லை.
அதற்கு முன்பே, நீதிபதி சிடி செல்வம் ஒரு வழக்கில், சட்டக்கல்லூரி மாணவி என்பதால் மன்னித்து கண்டம்ட் எடுக்கவில்லை என தீர்ப்பெழுதியிருந்தார்.
அப்பொழுது கர்ப்பமாக இருந்த நான், சங்கர் வழக்கிற்காக தினமும் கோர்ட்டில் அலைந்துகொண்டிருந்தேன்.
இன்றும் வழக்கறிஞர்கள் அதனை அறிவர்.டீபார் செய்யப்பட்டு மூன்று வருடங்கள் குடும்பத்தை நடத்த சிரமப்பட்ட வழக்கறிஞரும், கண்டம்ட்க்கு பிறகு வழக்கறிராக பதிவு செய்யமுடியாது எனப்போராடிய நானும் அறிவோம் அவன் எவ்வளவு பெரிய சுயநலவாத துரோகி என்று. அவனின் வழக்கிற்காக கர்ப்பகாலத்தின் இறுதி வரை அலைந்தேன்.
எனக்கு கிடைத்ததெல்லாம் சிசேரியன் ஆன கையுடன் அலைந்ததும், வன்முறையும் மட்டுமே.
குடும்ப வன்முறைக்கு ஆளாக்கப்பட்டேன்; மிரட்டப்பட்டேன்; ஆபாசமான அவதூறுகளால் தாக்கப்பட்டேன்; பிளாக்மெயில் செய்யப்பட்டேன். ஏன் சங்கருக்கு விவகாரத்து கொடுக்கவில்லை எனக் கேட்கிறார்கள். அவன் விவகாரத்து வழக்கு பதிவு செய்யவேயில்லை.
முதலில் குழந்தைக்கு நீதிமன்றால் வழங்கப்பட்ட மாதம் 2000ரூபாய் மெயிண்டனெஸ், 40ஆயிரம் சம்பளம் வாங்கும் அவன் கொடுக்க மறுத்து போன வருடம் நீதிமன்றம் வந்து நின்றான்.
இவ்வளவு கீழ்தரமானவுடன் வழக்கு நடத்த விருப்பமில்லாமல், வழக்கிற்கு செல்வதை பல காரணங்கள் சொல்லி தவிர்த்தேன்.
நீதிமன்ற செயல்பட்டுகள் விமர்சனத்திற்குரியது. ஆனால் சங்கர் நேர்மையானவனல்ல; பல்வேறு காரணங்களுக்காக தண்டிக்கப்படக் கூடியவன். மீடியா முன்பு அவன் விவகாரத்து வாங்கி விட்டான் என அவனே சொல்லிக்கொள்கிறான்; அவனது நண்பர்கள் திருமணமே ஆகவில்லை அவனுக்கு என்கிறார்கள்.
வீட்டில் ஒப்புக்கொள்ளவில்லை எனப் பதிவுத்திருமணம் செய்து ஒரு வருடத்திலே, சிசேரியனால் நடக்ககூட முடியாமல், ஒரு மாதக்குழந்தையுடன் வீட்டிற்கே சென்று பெற்றோர்களிடம் நிற்கும் அவமானம் ஏற்பட்டது.
சிலதிருமணங்கள் வலியிலும் அவமானத்திலும் மட்டுமே முடிகின்றது. என் மீது நிகழ்த்தப்பட்ட குடும்ப வன்முறைகளும், மிரட்டல்களும் மிகவும் கொடூரமானது.
கைக்குழந்தையுடன் அழுத நாட்கள் தற்பொழுதில்லை என ஆறுதல் அடைகிறேன்.
ஒன்பது வயது முடியும் தருவாயில் இருக்கிறான் எனது மகன் என அப்பெண் தனது முகநூலில் பதிவிட்டுள்ளார்.